சிரியாவில் இரான் இலக்குகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

பட மூலாதாரம், JACK GUEZ
சிரியாவில் உள்ள இரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) கூறியுள்ளது.

பட மூலாதாரம், EPA
மேலும், இது குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதி உச்சியில் உள்ள இலக்குகளில் இருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட்டை தாங்கள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு தெரிவித்தது.
இதேவேளையில், நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவு இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதாக சிரியாவின் அரசு ஊடகமான சனா குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
திங்கள்கிழமையன்று தான் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''சிரியா பிராந்தியத்தில் இரானை சேர்ந்த குட்ஸ் படைகளின் இலக்குகளை தாக்க துவங்கிவிட்டோம்'' என்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமையன்று சாட் நாட்டுக்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ ஓர் எச்சரிக்கை விடுத்தார்.
" சிரியாவில் மூர்க்கத்தனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் இரான் குழு இலக்காகக் கொள்ளவும், எங்கள் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எவரையும் அழித்திடும் பணியில் ஈடுபடவும் நாங்கள் கொள்கை வகுத்துள்ளோம்," என்று அவர் கூறினார்.
டமாஸ்கஸில் இந்த தாக்குதல் சம்பவத்தை கண்ட சில சாட்சிகள், இரவில் பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இன்னமும் முழுமையாக தெரிவியவில்லை.
இதுவரை சிரியாவில் தாங்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து மிகவும் ஆபூர்வமாகத்தான் இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












