'மெர்சல்' திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்

மெர்சல் திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்

பட மூலாதாரம், Twitter

மெர்சல் படத்தின் முன்னோட்டம் யூ டியூபில் வெளியான ஒரு மணிநேரத்திற்குள் அதிக பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், மெர்சல் பற்றிய 6 சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இது. இந்தக் கூட்டணியில் ஏற்கனவே உருவான 'தெறி' திரைப்படத்தில் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
  • நடிகர் விஜய்யின் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இது மூன்றாவது முறை. ஏற்கனவே உதயா, அழகிய தமிழ்மகன் என இரண்டு விஜய் படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளிவந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு மெர்சல் திரைப்படத்துக்காக விஜய்யும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளனர்.
'மெர்சல்' திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்
  • இயக்குனர் அட்லீக்கு செப்டம்பர் 21 பிறந்தநாள். அதனை முன்னிட்டே மெர்சல் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் அட்லீ. இவர் ஏற்கனவே ராஜா ராணி, தெறி என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். மெர்சல் அவருக்கு மூன்றாவது படம்.
  • மெர்சல் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர். நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் அந்த மூன்று கதாநாயகிகள்.
மெர்சல் திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்

பட மூலாதாரம், Google

  • விஜய் - வடிவேலு இணை காமெடிகள் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றவை. கடைசியாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 'காவலன்'. அத்திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்திருக்கிறது இந்தக் கூட்டணி.
  • இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாவது படம் குஷி. இத்திரைப்படம் 17 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. விஜய் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கவில்லை. இந்நிலையில் மெர்சல் படத்தில் விஜயுடன் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :