வயநாடு நிலச்சரிவு: தொடரும் மீட்புப் பணி - இரண்டாவது நாள் நிலவரத்தை காட்டும் புகைப்படங்கள்

 வயநாடு நிலச்சரிவு 2024: வெள்ளத்தில் மூழ்கிய மூன்று கிராமங்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலிலும் மீட்புப் படையினர் நூற்றுக் கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வயநாடு நிலச்சரிவு 2024: வெள்ளத்தில் மூழ்கிய மூன்று கிராமங்கள்
படக்குறிப்பு, நிலச்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

ஜூலை 30ம் தேதி அன்று அதிகாலை அடுத்தடுத்து நிகழ்ந்த நிலச்சரிவில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதையுண்டனர். மூன்று கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளையும் சந்தித்துள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு 2024: வெள்ளத்தில் மூழ்கிய மூன்று கிராமங்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சூரல்மலை மற்றும் முண்டகை கிராமங்களுக்கு செல்லும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அந்த கிராமங்கள் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

வயநாடு நிலச்சரிவு 2024: வெள்ளத்தில் மூழ்கிய மூன்று கிராமங்கள்

பட மூலாதாரம், Kripalal

படக்குறிப்பு, சூரல்மலை பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை பார்க்க முடிந்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்

வயநாட்டில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மன உளைச்சலுக்கு ஆளான நபர்கள் தங்களுக்கான ஆலோசனைகளை பெற 24 மணி நேர ஆலோசனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அலைபேசி மூலம் இந்த உதவிகளை பெற்றிட, டெலி மானாஸ் மையத்தை 14416 என்ற எண்ணிலும், மாநில கட்டுப்பாட்டு மையத்தை 0471-2303476 & 2300208 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மன நல ஆலோசனைகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை 1098 எண்ணிலும் பெறலாம்.

வயநாடு நிலச்சரிவு சூரல்மலை
படக்குறிப்பு, பாலம் உடைந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பாலம் உடைந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு 2024: வெள்ளத்தில் மூழ்கிய மூன்று கிராமங்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்திய ராணுவம், விமானப்படை, தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவு 2024: வெள்ளத்தில் மூழ்கிய மூன்று கிராமங்கள்
படக்குறிப்பு, சூரல்மலை பகுதிவரை மின் இணைப்புகளை சீர் செய்து தருவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற இந்த தருணத்தில், டெலிபோன் மற்றும் மின் இணைப்பு தரும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது கேரள அரசு. சூரல்மலை பகுதிவரை மின் இணைப்புகளை சீர் செய்து தருவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

வயநாடு நிலச்சரிவு 2024: வெள்ளத்தில் மூழ்கிய மூன்று கிராமங்கள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஜூலை 30 அன்று அதிகாலையில் தொடர்ந்து நிகழ்ந்த நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் அளவில் இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் சூரல்மலை பகுதியில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான அடிப்படை வசதிகளும் அங்கே உள்ள மக்களுக்கு ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு 2024: வெள்ளத்தில் மூழ்கிய மூன்று கிராமங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த நிலச்சரிவில் சிக்கி 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

ஐந்து அமைச்சர்களை உள்ளடக்கிய மேற்பார்வை குழு உருவாக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், அமைச்சர் ராமச்சந்திரன், வருவாய், பொதுப்பணி மற்றும் பட்டியல் இனம், பட்டியல் பழங்குடி துறை அமைச்சர்கள் தற்போது வயநாட்டில் மக்களுக்கு தேவையான உதவிகளை நேரில் செய்து வருகின்றனர்.

வயநாடு நிலச்சரிவு 2024: வெள்ளத்தில் மூழ்கிய மூன்று கிராமங்கள்
படக்குறிப்பு, நிலச்சரிவில் சேதமடைந்த வீடு
வயநாடு நிலச்சரிவு சூரல்மலை
படக்குறிப்பு, ஆற்றில் நிலச்சரிவால் அடித்து வரப்பட்ட பல வாகனங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது

சூரல்மலையில் தற்காலிக பாலம் மூலம் 700 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.

கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு, வயநாடு நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட பலரும் காணாமல் போன தங்களது உறவினர்களை தேடி முகாம், மருத்துவமனைகளை நோக்கி அதிகளவில் செல்கின்றனர்

மேப்பாடியில் இருந்து முண்டகை மற்றும் சூரல் மலை செல்வதற்கான சாலைகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக சேதமடைந்துள்ளன.

வயநாடு நிலச்சரிவு சூரல்மலை

பட மூலாதாரம், PRO Defence Kochi

படக்குறிப்பு, பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்

ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வயநாடு நிலச்சரிவு சூரல்மலை

பட மூலாதாரம், Arun Chandra Bose

படக்குறிப்பு, நிலச்சரிவால் சரிந்த நூற்றுக்கணக்கான மரங்கள் இனவழஞ்சி புழா ஆறால் அடித்து வரப்பட்டு பல பகுதிகளில் சேர்ந்துள்ளன

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)