நிலச்சரிவை முன்கூட்டியே அறிய முடியுமா? உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
நிலச்சரிவுகள் உலகெங்கும் ஏற்படும் புவிசார் நிகழ்வுகள் ஆகும். நேபாளம், இந்தோனேசியா, பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் இந்நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.
2024ம் ஆண்டில் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் அதிகமானோர் பலியாகினார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 48 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 ஆயிரம் நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கேரளாவில் பருவமழைக் காலத்தில் நிலச்சரிவுகள் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. தற்போது, வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120-ஐ தாண்டிவிட்டது. ஏராளமானோரை காணவில்லை.
இது போன்ற நிலச்சரிவு அபாய சூழலில் என்ன செய்ய வேண்டும்? நிலச்சரிவை முன்கூட்டியே அறிய முடியுமா? நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன? உங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும்? விளக்குகிறது இந்த சிறப்பு வீடியோ தொகுப்பு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



