காணொளி: சென்னையில் மின்சார ரயில் சேவை குறைப்பு பற்றி மக்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, ரயில்கள் குறைப்பு; அவதிப்படுவதாக கூறும் சென்னை மக்கள் - தெற்கு ரயில்வே சொல்வது என்ன?
காணொளி: சென்னையில் மின்சார ரயில் சேவை குறைப்பு பற்றி மக்கள் கூறுவது என்ன?

சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் காரணமாக, தெற்கு ரயில்வே பல முக்கியமான அறிவிப்புகளை கடந்த 20-ம் தேதி அறிவித்திருந்தது. புறநகர் பகுதிகளிலிருந்து எழும்பூர் வரக்கூடிய மிக முக்கியமான ரயில்களில் சில சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் நேரம் மாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தாங்கள் அவதியடைவதாக பயணிகள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு