சிரியா: இடைவிடாது ஒலிக்கும் துப்பாக்கிச் சத்தம், கொண்டாட்டத்தில் மக்கள் - புகைப்படத் தொகுப்பு

அசத் குடும்பம் சிரியாவை இரும்புக்கரம் கொண்டு 53 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டது.
அதிபர் அசத் 2000ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன்னதாக அவரின் தந்தை ஏறக்குறைய 30 ஆண்டுகள் சிரியாவை ஆட்சி செய்தார்.
இந்நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலின் விளைவாக, கிளர்ச்சிக்குழு தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியது.
அதைத்தொடர்ந்து சிரியாவில் என்ன நடக்கிறது? அங்கு மக்களின் மனநிலை எவ்வாறாக உள்ளது?
- தெற்கு சிரியாவின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - சிக்கலில் சிரிய ராணுவம்
- சிரியாவின் இரண்டாவது பெரிய நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சிக்குழு யார்? - திடீர் தாக்குதலை தொடங்கியது ஏன்?
- சிரியா: உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? அமெரிக்கா, ரஷ்யா செய்வது என்ன?
- சிரியா: போரால் சிதைந்த அலெப்போ நகரில், மீண்டும் ஒன்றுகூடும் குடும்பங்கள்

டமாஸ்கஸின் உமையாத் சதுக்கத்தில்தான் பொது மக்கள் தங்கள் கொண்டாட்டங்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். கிளர்ச்சிக் குழுவினரின் துப்பாக்கிச் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது. அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்ட வண்ணம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நாட்டின் அமைதியான, ஜனநாயக சார்பு எழுச்சியை குலைத்தார். அது பேரழிவு தரும் உள்நாட்டுப் போராக மாறியது. அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் சிரியாவில் அசத் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சிக் குழுவின் தலைவர்கள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் மற்றும் வானொலியில் அறிவித்தனர்.
கிளர்ச்சிப் படைகள் டமாஸ்கஸுக்குள் நுழைந்த சில மணிநேரங்களில், துருக்கி-சிரிய எல்லையில், சுமார் 50 சிரிய ஆண்கள் தங்கள் நாட்டிற்குள் செல்ல வரிசையில் காத்திருந்தனர்.

பல ஆண்டுகளாக வடமேற்கில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக இருந்த இட்லிப் மற்றும் கடந்த வாரம் அரசின் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவிற்கு செல்லும் குறுக்கு வழி துருக்கி-சிரிய எல்லைதான்.

டமாஸ்கஸில் உள்ள உமையாட் சதுக்கத்தில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கலவையான எதிர்வினைகளும் மக்கள் மத்தியில் காணப்பட்டன.

பட மூலாதாரம், Reuters
பல ஆண்டுகளாக, `ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்' அமைப்பின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி தனது கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் வடமேற்கு மூலையில் கடுமையான இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தும் அதே வேளையில் வெளிநாடுகளில் தனது குழுவின் பிம்பத்தை மாற்ற முயன்று வருகிறார்.

பட மூலாதாரம், Reuters
உலகெங்கிலும் உள்ள சிரிய மக்கள் கிளர்ச்சிப் படையின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
சிரிய அரசாங்கத்தின் வீழ்ச்சியைக் கொண்டாடும் சிரிய மக்கள் பலரும் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் ஒன்று திரண்டுள்ளனர்.
துருக்கி, பிரான்ஸ், பெர்லின் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் படங்களை கீழே காணலாம்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Getty Images
அதிபர் அசத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக அவருக்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா கூறியுள்ளது. தலைநகரில் இருந்து பல விமானங்கள் வெளியேறியுள்ளன. ஆனால், அவற்றில் ஏதாவது ஒன்றில் அசத் இருந்தாரா என்பது உறுதியாகவில்லை.

பட மூலாதாரம், Reuters
கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று, இரான் வெளியுறவுத்துறை அமைச்சரை டமாஸ்கஸில் சந்தித்ததுதான், அதிபர் அசத் பொதுவெளியில் காணப்பட்ட கடைசி தருணம்.

பட மூலாதாரம், Getty Images
டமாஸ்கஸ் நகரம் முழுவதும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதாகப் புகார்கள் வந்தன. மேலும், குழப்பதைப் பயன்படுத்தி டமாஸ்கஸில் இருந்த ஒரு வங்கியில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது. அங்கு வந்த கிளர்ச்சியாளர்கள் அவர்களின் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, வங்கிப் பணத்தை மீட்டனர்.

பட மூலாதாரம், Getty Images

கிளர்ச்சிக் குழுவினர் அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, மெஸ்ஸேவில் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டுவெடிப்பு நடந்த இடம் மரோட்டா சிட்டி என்று கூறப்படுகிறது. இதுபோக, மெஸ்ஸே விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதலும் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
டமாஸ்கஸில் இருக்கும் உமையாத் சதுக்கம்தான் பொதுமக்களின் கொண்டாட்ட மையமாக இருக்கிறது. வானத்தை நோக்கிச் சுடும் கிளர்ச்சியாளர்களின் துப்பாக்கிச் சத்தங்கள் அங்கு தொடர்ந்து கேட்ட வண்னம் உள்ளது.
இதற்கிடையே பொதுமக்கள் அமைதிக்கான குறியீட்டை கைகளில் காட்டியபடி, அப்பகுதியில் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை ஓட்டியபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












