இலங்கையில் கின்னஸ் சாதனை படைத்த உலகின் பெரிய ரத்தினக்கல், மதிப்புக் குறைந்தது ஏன்?

காணொளிக் குறிப்பு, இலங்கையில் கின்னஸ் சாதனை படைத்த உலகின் பெரிய ரத்தினக்கல், மதிப்புக்குறைந்தது ஏன்?

இலங்கையில் கிடைத்த உலகிலேயே மிக பெரியதாக அறியப்பட்ட கொத்தணி என கூறப்பட்ட ரத்தினக்கல் கொத்தணி, முன்பு குறிப்பிடப்பட்ட பெறுமதியை விட மதிப்புக் குறைவானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் கோப் குழுவில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் ரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் செயற்பட்ட விதமானது, அதன் நிபுணத்துவத்திற்கு ஏற்புடையது அல்ல என்று கோப் குழுவின் உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தார்.

ரத்தினக்கல்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: