சாலை இல்லாததால் 12 கி.மீ. நடந்தே சென்று குழந்தை பெற்ற பெண்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட முத்தன் குடிசை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி சிவகாமி கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த வாரம் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. முறையான சாலை வசதி இல்லாததால் 12 கி.மீ. தூரம் நடந்தே மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்றுள்ளார் சிவகாமி.
முத்தன் குடிசை கிராமத்தின் நிலையை அறிய பிபிசி தமிழ் அந்தக் கிராமத்திற்கு பயணித்தது. அந்த ஊரின் நிலை குறித்து அந்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









