சுனாமி: 2004 டிசம்பர் 26 அன்று நடந்தது என்ன? தாக்கத்தை காட்டும் புகைப்படத் தொகுப்பு

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுனாமி காரணமாக மெரீனா கடற்கரையிலிருந்து பல மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்த காட்சி.

26 டிசம்பர் 2004 அன்று இந்தோனீசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.

'சுனாமி' - 2004ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற வார்த்தை தெரியாமல் காதில்பட்டாலும்கூட உள்ளூர ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்தும், குறிப்பாக கடலோர பகுதிகளில் வசித்தவர்களுக்கும் வசிப்பவர்களுக்கும்.

சுனாமி தாக்கி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் சுனாமி தாக்கிய போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களையும் விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு.

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 26 டிசம்பர் 2004, தாய்லாந்தில் சுனாமி அலைகள் கரையை நோக்கி வருவதைக் கண்டு வெளியேறும் சுற்றுலாப் பயணிகள்
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க உதவும் சிறிய படகுகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் கடுமையாக சேதமடைந்திருந்தன.
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழகத்தை பொறுத்தவரையில் சுனாமி காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், MCT / Contributor

படக்குறிப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்மணி
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், PRAKASH SINGH / Stringer

படக்குறிப்பு, 2004 சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்து தவித்த அக்கரப்பட்டி மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள்
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், Paula Bronstein / Staff

படக்குறிப்பு, இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தனது மூன்று சகோதரர்களைப் பறிகொடுத்த 12 வயது பாத்திமா நுஸ்ரத்
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், Paula Bronstein / Staff

படக்குறிப்பு, 26 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் தனது வீட்டையும் குடும்பத்தையும் இழந்த இலங்கை பெண்மணி
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், U.S. Navy / Handout

படக்குறிப்பு, இந்தோனீசியாவில் சுனாமியில் சேதமடைந்த பகுதிகளை அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், STR / Stringer

படக்குறிப்பு, தங்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியேறும் இந்தோனீசிய கிராம மக்கள்.
சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்டு தோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்தோரை அவர்களுடைய உறவினர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு