காஸா உள்பட உலகெங்கும் 'ரம்ஜான் கொண்டாட்டம்' எப்படி இருந்தது? புகைப்படத் தொகுப்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வடக்கு காஸா பகுதியில் சேதமடைந்த ஒரு ஒரு மசூதியின் இடிபாடுகளுக்கு மத்தியில் தொழுகை செய்யும் பாலத்தீனர்கள்.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அவர்களின் மிக முக்கிய பாண்டிகையான ரம்ஜானை இன்று (மார்ச் 31) அன்று கொண்டாடி வருகின்றனர்.
ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி (சந்திர) நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரம்ஜான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும்.
ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள்.
பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள். இஸ்லாத்தில் பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இது பார்க்கப்படுகிறது.
முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் முதன்முதலில் இறைத்தூதர் முகமது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் விதமாக, ரம்ஜான் மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் ரம்ஜான் கொண்டாட்டங்கள்