ஒடிஷா ரயில் விபத்து: விபத்துகளை அறவே தடுக்கும் ரயில்வே துறையின் கொள்கை என்ன ஆனது?

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் 10 ரயில்வே அமைச்சர்கள் மாறியுள்ளனர். ஆயினும் ரயில்வேயில் நடக்கும் விபத்துகளின் வரைபடம் மாறவில்லை. ரயில்வே அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அடிக்கடி விபத்துகள் குறித்து ஜீரோ டாலரென்ஸ் என்று பேசுகிறார்கள்.

கடந்த இருபது ஆண்டுகளாக ரயில்வேயில் விபத்துகளைத் தடுக்க பல தொழில்நுட்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்றும் அத்தகைய தொழில்நுட்பத்திற்கான காத்திருப்பு தொடர்கிறது.

2022 மார்ச் மாதம் செகந்திராபாத் அருகே 'கவச்' தொழில்நுட்பத்தின் சோதனையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். இந்திய ரயில்வேயில் விபத்துகளைத் தடுக்க ’கவச்’ ஒரு மலிவான மற்றும் சிறந்த தொழில்நுட்பம் என்று அந்த நேரத்தில் கூறப்பட்டது.

ரயில் இன்ஜினில் சவாரி செய்த அமைச்சர் அதன் சோதனை வீடியோவையும் பதிவு செய்ய வைத்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

'கவச்' என்றால் என்ன?

ஒடிஷா ரயில் விபத்து கவச் பாதுகாப்பு அமைப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

'கவச்' என்பது ஓர் உள்நாட்டு தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் இந்திய ரயில்வேயின் எல்லா பிஸியான வழித்தடங்களிலும் நிறுவப்படும் என்றும் இதனால் ரயில் விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இத்தனைக்குப் பிறகும் ரயில் விபத்துகளைத் தடுக்க முடியவில்லை. இந்திய ரயில்வே வரலாற்றில் மிகப்பெரிய விபத்து, ஒடிஷாவில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.

ஒடிஷா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், எந்த மாதிரியான விபத்தைத் தடுக்க 'கவச்' உருவாக்கப்பட்டதோ, அதே போன்ற விபத்துதான் ஒடிஷாவிலும் நடந்துள்ளது.

இதில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் பஹாநாகா ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதன் காரணமாக கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் குறைந்தது 12 பெட்டிகள் தடம் புரண்டன.

ஒடிஷா ரயில் விபத்து கவச் பாதுகாப்பு அமைப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

“கவச்’ நுட்பம் மூலமாக 400 மீட்டர் தூரத்திலேயே ரயில்களை நிறுத்திவிடலாம் என்று ரயில்வே அமைச்சர் கூறியிருந்தார். அந்தத் தொழில்நுட்பம் எங்கே, எப்படி நடந்தது இந்தப் பயங்கரமான விபத்து என்று அவர் சொல்லவேண்டும்,” என்று ரயில்வே குறித்து நீண்ட காலமாகச் செய்திகளை எழுதி வரும் மூத்த செய்தியாளர் அருண் தீட்சித் கூறினார்.

ரயில்வேயின் முன்னாள் இணையமைச்சரும், மக்களவையில் காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் செளத்ரி இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

"அடிப்படை கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். ரயில்வேயில் அலட்சியம் உள்ளது, இதன் விளைவை நாம் எதிர்கொள்கிறோம்," என்றார் அவர்.

ஒடிஷாவில் விபத்து நடந்த இடத்தில் ’கவச்’ பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று இதுகுறித்து இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்தார்.

டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-கொல்கத்தா வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் திட்டத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருவதாகவும், அதற்கு முன்பாக இந்த வழித்தடங்களில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் மோதல் தடுப்புக் கருவி பொருத்தப்பட்டிருந்தால், இந்த விபத்து நடந்திருக்காது என்று முன்னாள் ரயில்வே அமைச்சரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறினார்.

ஒடிஷா ரயில் விபத்து கவச் பாதுகாப்பு அமைப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது

பட மூலாதாரம், RAILWAYS

மோதல் தடுப்பு கருவி

தான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டதாக மம்தா பானர்ஜி, கூறினார். இந்தியாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதைத் தடுப்பதற்கான தீவிரப் பணி 1999ஆம் ஆண்டு நடந்த கெய்சல் ரயில் விபத்துக்குப் பிறகு தொடங்கியது.

அந்த விபத்தில், அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரம்மபுத்திரா மெயில் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர்.

அதன் பிறகு இந்திய ரயில்வேயின் கொங்கன் ரயில்வே கோவாவில் Anti Collision Device அதாவது ACT தொழில்நுட்பத்திற்கான பணியைத் தொடங்கியது. இதில் ரயில்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவி பொருத்தப்பட இருந்தது. இதனால் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நெருங்கி வந்தால், சிக்னல் மற்றும் ஹூட்டர் மூலம், ரயிலின் பைலட்டுக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கும்.

மற்ற பாதையில் ஒரு ரயில் வந்தாலும் இந்த வழியில் சமிக்ஞைகள் கிடைக்கின்றன என்று பின்னர் கண்டறியப்பட்டது. பிறகு விஜிலென்ஸ் கட்டுப்பாட்டுக் கருவியை உருவாக்குவதன் மூலம் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பது குறித்தும் ரயில்வே பரிசீலித்தது.

அதன் பிறகு ரயில்கள் மோதுவதைத் தடுக்க, ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு அல்லது TPWS, TCAS அதாவது ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பும் பரிசீலிக்கப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து இந்த வகை தொழில்நுட்பத்தை வாங்குவது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. எனவே ரயில்வே தனது சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. இதையடுத்து கவச் என்ற பெயரிலான உள்நாட்டு தொழிநுட்பம் கடந்த ஆண்டு செயல்படத் தொடங்கியது.

ரயில் விபத்துகளே நடக்காது என்ற கூற்று

ஒடிஷா ரயில் விபத்து கவச் பாதுகாப்பு அமைப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

இந்திய ரயில்வே அடிக்கடி விபத்துகள் தொடர்பாக ஜீரோ டாலரென்ஸ் அதாவது ரயில்வேயில் ஒரு விபத்துகூட சகித்துக்கொள்ளப்படாது என்று பேசுகிறது.

பொதுவாக இது ஒவ்வொரு ரயில்வே அமைச்சரின் முன்னுரிமையாகப் பேசப்படுகிறது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட ரயில்வே அமைச்சர்கள் பதவிக்கு வந்த பிறகும் இந்தியாவில் ரயில் விபத்துகள் நிற்கவில்லை.

விபத்துகளைப் பொருத்தவரை இந்தியாவில் முந்தைய அரசுகளின் செயல்பாடும் மோசமாகவே இருந்துள்ளது. தற்போதைய அரசின் பதவிக் காலத்திலும் பல பெரிய ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. ரயில்வேயில் விவாதிக்கப்படாத பல விபத்துகளும் நடக்கின்றன.

"ஒவ்வோர் ஆண்டும் 500 ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் பணிபுரியும்போது உயிரிழக்கின்றனர். இதுமட்டுமின்றி மும்பையில் தண்டவாளத்தைக் கடக்கும்போது தினமும் பலர் இறக்கின்றனர்.

ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதைவிட பாதுகாப்பை மேம்படுத்துவது ரயில்வேயின் முன்னுரிமையாக இருக்கவேண்டும்,” என்று அகில இந்திய ரயில்வே ஆண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சிவகோபால் மிஷ்ரா கூறினார்.

"ரயில்வேயில் ரயில் விபத்துக்களைத் தடுப்பது குறித்துப் பல தசாப்தங்களாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. எந்த அரசும் இதில் தீவிரம் காட்டவில்லை, அதற்காக செலவு செய்ய விரும்பவில்லை என்று தோன்றுகிறது," என்கிறார் மூத்த செய்தியாளர் அருண் தீட்சித்.

மோதி ஆட்சியில் நடந்த பெரிய ரயில் விபத்துகள்

ஒடிஷா ரயில் விபத்து கவச் பாதுகாப்பு அமைப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமையன்று ஒடிஷாவின் பாலசோருக்கு சென்று ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்
  • 2022 ஜனவரி 13: ராஜஸ்தானின் பிகானேரில் இருந்து அசாம் மாநிலம் குவஹாத்திக்கு சென்றுகொண்டிருந்த பிகானேர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரியில் இந்த விபத்து நடந்தது. இதில் ரயிலின் இன்ஜின் மோட்டார் திறந்து தண்டவாளத்தில் விழுந்தது. அதன்மீது ரயில் ஏறியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.
  • 2017, ஆகஸ்ட்19 : உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் உத்தர பிரதேசத்தின் கத்தெளலியில் தடம் புரண்டன. இந்த ரயில் புரியில் இருந்து ஹரித்வாருக்கு சென்றுகொண்டிருந்தது. இங்கு தண்டவாளத்தை அகற்றி சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்குப் பிறகு சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • 2017, ஜனவரி 22: ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் ஹிராகுட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.
  • 2016, நவம்பர் 20: பாட்னா-இந்தூர் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் கான்பூர் அருகே புக்ராயனில் தடம் புரண்டன. இந்த விபத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர்.
  • 2015, மார்ச் 20: டேராடூன்-வாராணசி ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இந்த விபத்தில் சுமார் 35 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் ராய்பரேலி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்தது.
  • 2014, ஜூலை 24: ஹைதராபாத் அருகே ரயில்வே கிராசிங்கில், பள்ளி பேருந்தும் ரயிலும் மோதியதில் குறைந்தது 15 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தனர். மேடக் மாசாய்பேட்டை பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கில் இந்த விபத்து நடந்தது.
  • 2014, மே 26: உத்தர பிரதேசத்தில் சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள சுரேப் ரயில் நிலையம் அருகே கோரக்தாம் எக்ஸ்பிரஸின் 6 பெட்டிகள் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் ரயில் மோதியதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: