வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு : உயர்நீதிமன்றம் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி என்ற மலை கிராமத்தில் 1992ம் ஆண்டில் வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்துறையினர் கொடூர தாக்குதல் நடத்தி, பெண்கள் பலரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 215 பேரை குற்றவாளி என கூறியது. இவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் அதில் ரூ.5 லட்சத்தை குற்றவாளிகளிடமிருந்து பெற்று தர வேண்டும் என்றும் கூறியது.

வாச்சாத்தி வழக்கு : குற்றவாளிகளின் மேல் முறையீடு தள்ளுபடி
படக்குறிப்பு, வாச்சாத்தி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: