முழு சூரிய கிரகணம் தோன்றும் அரிய காட்சி - வானில் என்ன நடக்கிறது? நேரலை

சூரிய கிரகணம்

பட மூலாதாரம், reuters

வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவில் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது.

வட அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள மெக்சிகோவில் சற்று முன்பு சூரியனை சந்திரன் மறைக்கத் தொடங்கியதால் சூரிய கிரகணம் தோன்றுகிறது. இந்த பகுதி கிரகணம் அடுத்த 45 நிமிடங்களில் மசாட்லானில் முழு சூரிய கிரகணமாக மாறும்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், இந்த அரிய நிகழ்வை மெக்சிகோ மற்றும் 13 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கனடாவில் மக்கள் பார்க்க முடியும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே செல்லும் சந்திரன், சூரியனை முழுமையாக மூடும் பொழுது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. விடியற்காலை அல்லது சாயங்கால வேளை போல் வானம் இருண்டுவிடும்.

சூரிய கிரகணத்தை நேரலையில் கண்டுகளிக்க கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

சந்திரன் சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, ​​அது சூரியனை மறைப்பதால் நாம் கிரகணத்தைக் காண்கிறோம்.

குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே வைத்துள்ள அமெரிக்கர்கள்

தெற்கு கலிபோர்னியாவில் சூரிய கிரகணத்திற்கு சரியான வானிலை உள்ளது. ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பல பள்ளிகள் குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க "மோசமான வானிலை அட்டவணையில்" குழந்தைகளை உள்ளே வைத்திருக்க விரும்புகின்றன.

இது சில பெற்றோர் மற்றும் குழந்தைகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

"கிரகணங்கள் ஆபத்தானவை அல்ல" என்று ஒரு பெற்றோர் பேஸ்புக் குழுவில் டஜன்கணக்கானவர்கள் கூச்சலிட்டனர், பல பள்ளிகள் கிரகணத்தைத் தழுவி அதற்குப் பதிலாக பாதுகாப்புக் கண்ணாடிகளை விநியோகிக்க விரும்புகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியைப் பார்க்கலாம். சுமார் 48% சூரியன் சந்திரனால் மறைக்கப்படும். பொது நூலகங்கள் விருந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. பாதுகாப்பு கண்ணாடிகளை விநியோகிக்கின்றன.

பல பெற்றோர்கள், நாசாவின் பாதுகாப்பு கண்ணாடிகளுடன் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர். வகுப்புகளுக்கு நடுவே தங்கள் குழந்தைகள் சூரிய கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

சூரிய கிரகணம்

சூரிய கிரகணத்தைக் காண நயாகராவில் குவியும் மக்கள்

சூரிய கிரகணத்தைக் காண நயாகரா நீர்வீழ்ச்சியில் ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள்.

இதுகுறித்து செய்தி சேகரிக்க அங்கு சென்றிருக்கிறார் பிபிசி செய்தியாளரான நாடா தௌஃபிக்.

நயாகரா நீர்வீழ்ச்சியை நிர்வகிக்கும் பூங்கா அதிகாரிகள், இதுவரை பார்த்திராத மிகப்பெரிய மக்கள் கூட்டம் அங்கு கூடும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவிக்கிறார். நயாகரா நீர்வீழ்ச்சியின் அமெரிக்கப் பக்கத்திலும், கனடாவின் பக்கத்திலும் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாம் காண வேண்டும் என்று வைத்திருந்த கனவுப் பட்டியலில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை - ஒன்று நயாகரா நீர்வீழ்ச்சி, மற்றொன்று சூரிய கிரகணம் – காண சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குவியத் துவங்கியுள்ளனர்.

நேற்று, இரண்டு மாத ஆண் குழந்தையுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தம்பதியைச் சந்தித்ததாகக் கூறுகிறார் நாடா. வானிலை மேகமூட்டமாக இருக்கும் என்ற முன்னறிவிப்பு வந்ததும் அவர்கள் இடம்பெயர்ந்து மூன்று மணிநேரம் பயணம் செய்து மேலும் கிழக்கே செல்ல முடிவு செய்ததாகக் கூறுகிறார்.

தற்போதும், அப்பகுதிகள் மேகமூட்டமாகவே உள்ளதாக நாடா கூறுகிறார். “எல்லோரும் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்,” என்கிறார் அவர்.

கிரகணத்தின்போது சூரியனின் ஒளிவட்டத்தை முழுவதுமாகப் பார்க்கும் வாய்ப்புக்கும் மேல், கிரகணத்தின் போது நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள நீர்த்திரையினால் உருவாகும் வானவில் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதையும் காண முடியும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சூரிய கிரகணம் எப்படி நிகழும்?

சூரிய கிரகணம்

பட மூலாதாரம், BBC

சூரிய கிரகணம் எப்படி நிகழலாம் என்பதற்கான சாத்தியமான நிலைகளை மேலே உள்ள வரைபடம் குறிக்கிறது. பகுதி கிரகணம் (மேல் இடது), வைர மோதிரம் (மேல் வலது), பெய்லியின் மணிகள் (கீழ் இடது), முழுமை (கீழ் வலது) மற்றும் கொரோனாவின் பார்வை (நடுத்தர) என்ற வகையில் அவை தோன்றக் கூடும்.

  • பகுதி கிரகணம்: சந்திரன் படிப்படியாக சூரியனை மறைக்கிறது. எல்லாமே கருமையாகிறது.
  • வைர மோதிரம்: வலுவான சூரிய ஒளியின் கடைசிப் பகுதி, ஒரு பெரிய வைரத்தைப் போல ஒரு அற்புதமான ஒளி புள்ளியாகக் குறைகிறது.
  • பெய்லியின் மணிகள்: வைரப் பகுதியில் விழும் ஒளி சிதறும்போது, மீதமுள்ள எந்த ஒளியும் சந்திரனின் விளிம்பில் உள்ள ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக பிரகாசிக்கிறது.
  • முழுமை: பகல் இரவாக மாறுகிறது, ஆனால் வெப்பநிலை, காற்று, மேகங்கள் மற்றும் பறவைகளின் கூச்சல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்.
  • கரோனா: சூரியனுக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தைப் பார்க்கும் வாய்ப்பு - நமது நட்சத்திரத்தின் வெளிப்புற வளிமண்டலத்தில் உள்ள ஒளியின் நுட்பமான போக்குகள், அதன் கொரோனா தெரியவரும்.
  • பின்னர் எல்லாம் தலைகீழாக நடக்கும். மொத்தமும் பெய்லியின் மணிககள் தோற்றத்திற்கு மாறும். வைரம் போன்ற காட்சி மீண்டும் தோன்றி ஒளியை அதன் இயல்பான தீவிரத்திற்கு விரிவுபடுத்துகிறது, கரோனா மீண்டும் ஒருமுறை மறைக்கப்படுகிறது.
சூரிய கிரகணம்

நாசா என்ன செய்யப் போகிறது?

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசாவின் வாலோப்ஸ் தளத்தில் இருந்து கிரகணப் பகுதியில் இருந்து மூன்று ஆராய்ச்சி ராக்கெட்டுகள் ஏவப்படும்.

எம்ப்ரி ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரோஹ் பர்ஜாத்யா இந்தப் பரிசோதனையை முன்னின்று நடத்துகிறார். சூரிய கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த ராக்கெட் பதிவு செய்யும்.

மூன்று ராக்கெட்டுகளும் பூமியில் இருந்து 420 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்று பின்னர் பூமியில் விழுந்துவிடும். முதல் ராக்கெட் கிரகணத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பும், இரண்டாவது ராக்கெட் கிரகணத்தின் போதும், மூன்றாவது ராக்கெட் கிரகணம் முடிந்த 45 நிமிடங்களுக்குப் பிறகும் ஏவப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)