அதிமுக vs பா.ஜ.க. கூட்டணியில் என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, அதிமுக vs பா.ஜ.க. - தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கிறது?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அஇஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் ஊழலில் ஈடுபட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர்களே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகக் குறிப்பிடும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் அண்ணாமலைக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை வாசித்துக் காட்டினார். ஆனால் பத்திரிகையாளர்கள் கேள்வி எதையும் எதிர்கொள்ள மறுத்துவிட்டார்.

அதிமுக vs பாஜக

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: