அண்ணாமலையிடம் ரூ.500 கோடி கேட்டு திமுக நோட்டீஸ்

காணொளிக் குறிப்பு, அண்ணாமலையிடம் ரூ.500 கோடி கேட்டு திமுக நோட்டீஸ்

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பார்தியின் சார்பில் அனுப்பப்பட்ட அந்த நோட்டீஸில், "DMK files என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் திமுக கட்சி மீது பல தவறான ஆதாரமற்ற அவதூறான கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தீர்கள்.

திமுகவின் சில சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி, தொடர்பில்லாத சொத்துக்கள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுக கட்சிக்கு மொத்தம் 1408.94 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த நோட்டிஸில், வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த தகவல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அண்ணாமலை

சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். திமுகவினருக்குச் சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3478.18 கோடி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மதிப்பு ரூ.34,184.71 கோடி என்பது பொய்யானது என்றும் ஒருவர் திமுகவின் உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், `தமிழ்நாடு முதலமைச்சர் பண மோசடியில் ஈடுபடவே துபாய்க்குச் சென்றார் எனவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இழப்பீட்டு தொகையாக ஐந்நூறு கோடி ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்.

48 மணி நேரத்திற்குள் இவற்றைச் செய்ய தவறினால் உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்கப்படும்` என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: