You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரபல சிங்களப் பாடகி கொலை: கணவர் கைது
இலங்கையின் பிரபல சிங்களப் பாடகி பிரியாணி ஜயசிங்க அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்ததாகத் தெரிவித்த போலீசார், பாடகியின் கணவரை கைது செய்துள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்தரிக்கோல்களையும் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :