இலங்கை : இயற்கை பேரிடரால் நிகழ்ந்த பலி எண்ணிக்கை 224ஆக உயர்வு

அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மரணமடைந்தோரின் எண்ணிக்கை 224ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 16 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது. 78 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் இன்று சனிக்கிழமை இரவு வெளியிட்ட தகவல் அறிக்கை கூறுகின்றது.

ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 805 குடும்பங்களை சேர்ந்த 7 லட்சத்து 4 ஆயிரத்து 815 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலான மரணங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அங்கு இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 86ஆக பதிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 65 மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 31 பேர் இறந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்த அனர்த்ததில் 72 பேர் காயமடைந்துள்ளனர்.

சீரற்ற காலநிலை இன்னும் நீடித்து வருவதால் களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா,இரத்னபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்ட நிலச்சரிவு தொடர்பான எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கட்டட ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

காணொளி: இலங்கை மழையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்

இந்த செய்திகளை நீங்கள் விரும்பலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்