You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிழக்கு இலங்கையில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரப் பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை பெட்ரோல்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெரிய கடை ஜும்மா பள்ளிவாசல் மீதான இந்த தாக்குதலின் போது, வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள் வெடித்து தீ பரவியதில் தரை விரிப்புகள் எரிந்து நாசமாகின.
தற்போது இஸ்லாமியர்களின் ரம்ஸான் நோன்பு காலமாகும். பள்ளிவாசலில் அதிகாலை தொழுகைக்கு பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அங்கு எவரும் இருக்கவில்லை என கூறப்படுகின்றது.
பெட்ரோல் நிரப்பப்பட்ட நான்கு பாட்டில்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ அதற்கான காரணங்களோ தமது ஆரம்ப கட்ட விசாரனணகளில் கண்டறியப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அண்மைக் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஆங்காங்கே நடைபெற்றுள்ளன.
இப்படியான சூழ்நிலையில் மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்றுள்ள இந்த தாக்குதல் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்