You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''யாழ் குடாநாடு ஒரு பாலைவனமாக மாறும் ஆபத்து'' : எச்சரிக்கும் நகர அபிவிருத்தி அமைச்சர்
எதிர் வரும் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் குடாநாடு ஒரு பாலைவனமாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்தார்.
வட கடல் பகுதியில் உஷ்ணம் அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர் ரணவக்க அங்கு காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக அப்பகுதியில் தற்போது வறட்சி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர் வரும் ஐம்பது ஆண்டுகளுக்குள் யாழ் குடாநாடு பாரிய வறட்சியினால் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக அமைச்சர் ரணவக்க தெரிவித்தார்.
எனவே, நிலையான நீர் முகாமைத்துவ திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் சூழல் பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் மாத்திரமே இதனை மட்டுப்படுத்தப்பட்ட முடியுமென்று அவர் தெரிவித்தார்.
எனவே, சுய நிர்ணய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை தவிர்த்து யாழ் குடாநாட்டை வறட்சியிலிருந்து காப்பதற்கு சகலரும் முன்வர வேண்டுமென்றும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.
பிற செய்திகள் :
- பீட்டாவின் சைவ உணவு விளம்பரத்தில் நடிகை சன்னி லியோன்
- சர்வதேச எழுத்து கூட்டும் போட்டியில் சாதித்து காட்டிய இந்திய வம்சாவளி சிறுமி
- நால்வர் மரணத்திற்கு பின் முகாமுக்கு அனுப்பப்பட்ட கோவை யானை
- பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: உலக நாடுகளின் பார்வை
- காற்றில் கலந்த கவிக்கோ ; அப்துல் ரஹ்மான் காலமானார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்