You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பீட்டாவின் சைவ உணவு விளம்பரத்தில் நடிகை சன்னி லியோன்
விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவிற்கு ஆதரவாக பிரச்சார விளம்பரத்தில் நடித்துள்ள சன்னி லியோனின், `வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்` என்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்காக, விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவுடன் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கைகோர்த்துள்ளார்.
சைவ உணவிலேயே, வீகன் வகை உணவு என்றழைக்கப்படும், பால் பொருட்களையும் தவிர்க்கும் உணவுக்கு ஆதரவாக பீட்டாவின் பிரச்சார விளம்பரத்தில் நடித்துள்ள சன்னி சைவ உணவாளராக மாறிடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்புடைய செய்தி :
இதுகுறித்து பீட்டா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சன்னி லியோனின் சிறிய பேட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அதில், தனக்கு அதிகமாக சக்தி இருப்பதை தான் கவனித்திருப்பதாகவும், அதிகமாக காய்கறிகளை சாப்பிட்டு வருவதாகவும் சன்னி லியோன் கூறியுள்ளார்.
மேலும், இறைச்சி தொழிலில் விலங்குகள் வதைபடுவதுதான் மோசமான மிகவும் மோசமான விஷயம் என்றும் அதில் கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு பீட்டாவின் சிறந்த நபராக சன்னி லியோன் தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
பீட்டாவின் நாய் - கருத்தடை பிரசாரத்திலும் சன்னி லியோன் பங்கேற்றுள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்