You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை பரிசீலித்து நடவடிக்கை : பீட்டா
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் புதிய அவசர சட்டத்தின் வரைவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என்று விலங்குகள் நல அமைப்பான, பீட்டா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு சார்பில் வழக்கறிஞர் பி.ஸ்ரீனிவாசா வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில், ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் நிலுவையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
விலங்குகள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு கொடுமை விளைவிப்பது தார்மீக ரீதியில் அருவறுப்பானது என்பதே பீட்டா இந்தியப் பிரிவின் நிலைப்பாடு என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த நாட்டின் வளர்ச்சி மற்றும் அதன் அறநெறி முன்னேற்றம் என்பது விலங்குகளை நடத்தும் விதத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என்று மகாத்மா காந்தி தெரிவித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
பயந்து கிடக்கும் காளைகள் மீது ஆண்கள் பாய்வதும், சில நேரங்களில் காளைகளுக்கு சாரயம் கொடுத்து, வேண்டுமென்றே அதன் வால்களை உடைத்து, அதன் கண்களில் மிளகாய் பொடிகளை தூவி, அது தப்பியோட முயற்சிக்கும் போது காளைகளீன் எலும்புகளை நொறுக்குவது, மேலும் பயமுறுத்தப்பட்ட காளைகளால் மனிதர்கள் காயமடைவது, கொல்லப்படுவது போன்ற புகைப்படங்களை பார்க்கும் போது நம் தேசம் பற்றிய கருத்து என்னவாக இருக்கும் என்று பீட்டா கேள்வி எழுப்பியுள்ளது.
உலக அளவில் ஒரு நாள் அனைத்து ரத்தம் சிந்தும் விளையாட்டுகளும் வரலாற்று புத்தகங்களிலிருந்து இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் அகற்றப்படும் என்று பீட்டா நம்புகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்