இந்திய அரை வம்சாவளியரான லியோ வரத்கார் அயர்லாந்தின் பிரதமராவதற்கு வாய்ப்பு

இந்திய அரை வம்சாவளியரான, லியோ வரத்கார் அயர்லாந்து குடியரசின் அடுத்த பிரதமராகவிருக்கிறார்.

ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான, ஃபைன் கேல் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் வரத்கார் வெற்றி பெற்றுள்ளார்.

கட்சி தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில், வீட்டு வசதித் துறை அமைச்சரான சைமொன் கொவ்னியைத் தோற்கடித்த, 38 வயதான இவர் , அயர்லாந்தின் முதல் ஒரு பாலுறவுக்கார பிரதமராவார்.

இன்னும் சில வாரங்களில், இந்த மத்திய வலது சாரிக் கட்சியின் தற்போதைய தலைவரான, எண்டா கென்னடிக்கு அடுத்த தலைவராகிறார் லியோ வரத்கார்.

அயர்லாந்தை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கும், இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் மகனாக பிறந்தார் லியோ. லியோ வரத்காரின் தேர்தல் வெற்றியை காட்டிலும் அவருடைய குடும்ப பின்னணி, வயது மற்றும் பாலியல் குறித்து செய்திகளிலே பெரும்பாலான ஊடகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

வட அயர்லாந்தின் முன்னாள் முதல் மந்திரியும், ஜனநாயக ஒன்றிய கட்சியின் தலைவருமான அர்லீன் ஃபோஸ்டெர் வரத்காருடன் தொலைப்பேசியில் பேசி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரீஸா மேவிடமிருந்து வாழ்த்து கடிதம் ஒன்றையும் வரத்கார் பெற்றுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்