முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு.
படக்குறிப்பு, முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
படக்குறிப்பு, முந்தைய வருடங்களைப் போல் அல்லாமல் இவ்வருடம் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படக்குறிப்பு, கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
படக்குறிப்பு, பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்ககளும் தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மதத் தலைவர்களும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
படக்குறிப்பு, கண்ணீர் விட்டு அழுத பெண்களின் துயரம்
படக்குறிப்பு, முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.