ஜிகா வைரஸ்: '1970களில் செய்த தவறுக்கான தற்போதைய தண்டனை'

கொசுக்களை ஒழிப்பதில் ஏற்பட்ட சுணக்கமே ஜிகா வைரஸ் பரவலாக வளர்ந்திருப்பதாக எச்சரிக்கை

பட மூலாதாரம், .

படக்குறிப்பு, கொசுக்களை ஒழிப்பதில் ஏற்பட்ட சுணக்கமே ஜிகா வைரஸ் பரவலாக வளர்ந்திருப்பதாக எச்சரிக்கை

கொசுக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கொள்கையில் 1970களில் நேர்ந்த மிகப்பெரிய தோல்வியே தற்போது உலக அளவில் ஜிகா வைரஸ் பரவலுக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

1960களில் முன்னெடுக்கப்பட்ட கொசுக்களை அழிக்கும் செயற்திட்டத்தின் வெற்றியை தொடராமல் கைவிட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கரெட் சான் தெரிவித்திருக்கிறார்.

கொசு ஒழிப்பில் உலக நாடுகள் உரிய அக்கறை காட்டவில்லை என்றும் விமர்சனம்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, கொசு ஒழிப்பில் உலக நாடுகள் உரிய அக்கறை காட்டவில்லை என்றும் விமர்சனம்

கொசுக்களிடம் படிப்படியாக அதிகரித்த கொசுமருந்துக்கான எதிர்ப்பும் கொசுக்களை அழிப்பதற்குத் தேவையான அரசியல் தலைமைகளின் முன்னெடுப்பு இல்லாமையும் சேர்ந்து கொசுக்களையும் அவற்றின் மூலம் பரவும் நோய்களையும் புதிய வீரியத்துடன் திரும்ப வருவதற்கான காரணங்களாக மருத்துவர் சான் பட்டியலிட்டிருக்கிறார்.

உலக அளவில் அறுபது நாடுகளுக்கும் அதிகமாக தற்போது ஜிகா வைரஸ் பரவியுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தைகளை ஜிகா வைரஸ் பாதிப்பதால் பெரும் கவலை

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கருவில் இருக்கும் குழந்தைகளை ஜிகா வைரஸ் பாதிப்பதால் பெரும் கவலை

இந்த கோடைகாலத்தில் ஐரோப்பாவுக்கும் இது பரவக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கருவில் இருக்கும் குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்க காரணமாக இந்த ஜிகா வைரஸ் காரணமாக அமைவதாக அண்மைய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

ஜிகா வைரஸ் உலக சுகாதார நெருக்கடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.