விண்ணில் உள்ள செயற்கைக்கோள் தொகுப்புகளுக்கு எதிராக வானியலாளர்கள் குரல் கொடுப்பது ஏன்?

பட மூலாதாரம், MIKE LEWINSKI/CC
- எழுதியவர், ஜோனதன் அமோஸ்
- பதவி, அறிவியல் நிருபர்
ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் வானில் இருக்கும் நிலையில், வானியல் துறை இறுதியாக வானின் நலன்களைப் பாதுகாக்க ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தெரிவித்துள்ளது.
அங்கு அதிகப்படியான விண்கலங்கள் ஏவப்படுகின்றன. அவை அண்டம் குறித்து தெளிவான பார்வையைப் பெறுவதை கடினமாக்குகின்றன.
மேலும், குறைந்த சுற்றுப்பாதையில், வேகமாக நகரும் இந்த செயற்கைக்கோள்கள் பல ஆண்டுகளாக தொலைநோக்கியில் பிரகாசமான கோடுகளை விட்டுச்செல்கின்றன.
இதுகுறித்து சமூகத்தின் கருத்துகளை மையப்படுத்தி ஒரு புதிய மையத்தை சர்வதேச வானியல் ஒன்றியம் நிறுவுகிறது.
இது தொடர்பான பணியை, அரிசோனாவின் டக்சன் பகுதியுள்ள அமெரிக்க தேசிய ஒளியியல்-அகச்சிவப்பு வானியல் ஆராய்ச்சி ஆய்வகமும், பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள ஸ்கொயர் கிலோமீட்டர் அரே நிறுவனம் வழிநடத்தும். இதில் பிரிட்டன் அமைப்பு, கதிர்வீச்சு வானியல் மீதான செயற்கைக்கோள்களின் விளைவுகள் குறித்து அதிக கவனம் செலுத்துகிறது.
செயற்கைக்கோள் தொகுப்புகளின் குறுக்கீட்டிலிருந்து இருண்ட மற்றும் அமைதியான வானத்தை பாதுகாப்பதற்கான வானியல் துறையின் ஒருமித்த குரலாக இந்த புதிய மையம் செயல்பட முயற்சிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இது செயற்கைக்கோள் நிறுவனங்களுடன் இணைந்து, அவர்கள் உருவாக்கும் ஒளி மாசுபாட்டைக் குறைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள ஊக்குவிக்கும். ஆனால், இது உலகம் முழுவதும் உள்ள கொள்கை உருவாக்குபவர்களுடன் இணைந்து, சுற்றுப்பாதையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறை என்ன என்பதற்கான விதிமுறைகளை கடுமையாக்கும்.
"இந்த தாக்கங்களைக் குறைக்கும் ஒரு தன்னார்வ கார்ப்பரேட் கலாசாரத்தை நிறுவுவதும், இதன் துறையில் கூட்டுறவு அணுகுமுறையை மேற்கொள்வதுமே ஐ.ஏ.யூவின் (IAU) முதன்மை பணி", என்று அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கிரீன் கூறுகிறார்.
செயற்கைக்கோள்களை உருவாக்கும் செலவு குறைப்புக்கும் விண்ணில் செலுத்தப்படும் ஏவுகணைகளின் செலவு குறைப்புக்கும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இது விண்ணில் புதிய உள்கட்டமைப்பை உருவாக்கும் அவசரத்திற்கு வழிவகுத்துள்ளது.

பட மூலாதாரம், T. HANSEN/IAU OAE/CC
விண்வெளியில் இருந்து பிராட்பேண்ட் இணைய வசதிகளை வழங்க வடிவமைக்கப்பட்ட செயற்கோள் தொகுப்புகள் உடனடி கவனத்தில் உள்ள ஒன்று. பூமியில் இருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில், பல நூறு முதல் பல ஆயிரம் செயற்கைக்கோள்களை நிறுத்துவது இதில் அடங்கும்.
இந்த உயரத்தில், அவை விரைவாக வானத்திற்கு குறுக்கே நகர்கின்றன. மேலும் சூரியன் அடிவானத்தின் கீழ் இருக்கும்போது, அதாவது விடியற்காலை மற்றும் அந்தி நேரத்தில் ஒளியைப் பிடித்து, தொலைநோக்கியின் வெளிப்பாடு மூலம் ஒரு பிரகாசமான கோட்டைக் அமைக்கும்.
செயற்கைக்கோள்களின் அலைபரப்புகள், இறுக்கமாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், வானியல் கதிர்வீச்சு அலைக்கம்பங்களால் பயன்படுத்தப்படும் அலைவெண்களில் பாதிக்கப்படலாம்.
அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மற்றும் பிரிட்டன் தலைமையிடமாகக் கொண்ட ஒன்வெப் (OneWeb) ஆகிய இரண்டு பிராட்பேண்ட் திட்டங்கள், புதிய செயற்கைக்கோள் தொகுப்புக்களுக்கு வழிவகுக்கின்றன. மேலும், அவற்றுக்கிடையே 2,000 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இவை ஏவியுள்ளன. ஆனால், இரண்டு நிறுவனங்களும் மேலும் பல திட்டங்களைக் கொண்டுள்ளன.
இவற்றைப் போலவே மற்ற நிறுவனங்களும் நாடுகளும் செயல்படுகின்றன. அமேசான்.காம் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது கைபர் நெட்வொர்க்கை (Kuiper Network) தயார் செய்து வருகிறார். மேலும், ஐரோப்பிய ஒன்றியம், உதாரணமாக, இந்த தசாப்தத்தின் நடுப்பகுதியில் சுற்றுப்பாதையில் அதன் சொந்த பிராட்பேண்ட் நெட்வொர்க்கை உருவாக்க விரும்புகிறது.
அனைவருக்கும் இலவசம் என அனுமதிக்கப்பட்டால் முக்கியமான அறிவியல் ஆபத்தில் இருக்கும் என்கிறார் புதிய மையத்தின் இணை இயக்குநரும், எஸ்.கே.ஏ.ஒ (SKAO) அமைப்பைச் சேர்ந்தவருமான ஃபெடரிகோ டி வ்ருனோ.
காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணியை ஆய்வு செய்யும் ரேடியோ டிடெக்டர்களை பற்றி அவர் குறிப்பிடுக்கிறார். இவை வானில் உள்ள மிகவும் பழமையான ஒளி; பெருவெடிப்புக்கு (Big Bang) பிறகு, பிரபஞ்சத்தின் அமைப்பு மற்றும் உள்ளடக்கங்களைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. இந்த கண்டறியும் கருவிகள் செய்றகைக்கோள் தொகுப்புகளின் கீழ் உள்ள இணைப்புகளால் மறைக்கப்படலாம், என்றார். ஒளியியல்/தெரியக்கூடிய (Optical/Visible) வானியலில், கிரகங்களின் பாதுகாப்பு பிரச்னையை குறித்து டாக்டர் டி வ்ருனோ சுட்டிக்காட்டுகிறார்.
"ஒளியியல் அலைநீளங்களில், நீண்ட வெளிப்பாடு நேரங்களைக் கொண்ட கணிப்புகள் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாக அந்தி நேரம் நெருங்கும் சமயங்களிலும், அடிவானத்தில் கீழ் இருக்கும்போதும் இவ்வாறு நடக்கும். சர்வதேச சிறுகோள் எச்சரிக்கை வலையமைப்பு மூலம் செய்யப்படும் அபாயகரமான சிறுகோள் ஆராய்ச்சி ஒரு முக்கிய எடுத்துக்காட்டு என்று அவர் விளக்குகிறார்.
"செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கணிப்புகளின் போது, குறுக்கீடு அதிகரிக்கும் ஒரு தருணத்தை வானியல் எதிர்கொள்கிறது. இது அறிவியலுக்கும் இழப்பு", என்று நோயர்லாப் (NOIRLab) சேர்ந்த கோனி வாக்கரும், புதிய மையத்தின் இணை இயக்குநர் ஒருவரும் கூறுகின்றனர் .
"ஒரு தசாப்தத்தின் முடிவில், ஒரு பொதுவான இருண்ட- வான்வெளியின் கண்காணிப்பு இடத்தில், எந்த நேரத்திலும் 5,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் அடிவானத்திற்கு மேலே இருக்கும். இந்த செயற்கைக்கோள்களில் சில நூறு முதல் பல ஆயிரம் வரை சூரியனால் ஒளிரும். இந்த செயற்கைக்கோள்கள் இரவின் நேரம், பருவநிலை பொறுத்து மிகச்சிறிய ஒளியியல் அல்லது அகச்சிவப்பு தொலைநோக்கிகளால் கூட கண்டறிய முடியும்." என்று அவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், M. LEWINSKY/CC
வானியல் கவனிப்புக்களைத் திட்டமிடும்போது அவற்றின் நகர்வுகளை எதிர்பார்க்கக்கூடிய வகையில், அவற்றின் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புகள் குறித்த துல்லியமான, புதுப்பித்த தகவலை வழங்க வேண்டியதன் அவசியத்தை இந்த புதிய மையம், நிறுவனங்களுக்கு உணர்த்தவிருக்கிறது.
தொலைநோக்கியின் உருவகங்களை 'சுத்தம்' செய்யப் பயன்படும் மென்பொருளை உருவாக்கவும், தொகுத்து வழங்குவும் அறிவு வங்கியாக இந்த மையம் மாறும்.
மேலும், விமர்சன ரீதியான பார்வையில், செயற்கைக்கோள்களின் ஊடுருவலைக் குறைக்க செயல்படுத்தக்கூடிய தன்னார்வ நடவடிக்கைகளுடன் கலந்துரையாடுவதற்கான ஒரு குழுவாக இது செயல்படும். பல்வேறு பூச்சுகள் அல்லது சூரியக் கவசங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் விண்கலத்தின் பிரதிபலிப்புத்தன்மையை எவ்வாறு குறைக்கலாம் என்பதைப் பற்றி விவாதிக்க ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஒன்வெப் நிறுவனங்கள் விரும்புவது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
"விதிமுறைகள் வழியாகச் செல்வதை விட இத்தகைய ஒப்பந்தங்களைச் செய்வது நல்லது. ஆனால், சில சமரசங்கள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று டாக்டர் வாக்கர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












