புதிர் வரலாறு: நியாண்டர்தால்களுடன் உடலுறவு கொண்ட நவீன மனிதன் - அதிர்ச்சி கண்டுபிடிப்புகள்

நியாண்டர்தால் உலகம்
    • எழுதியவர், ஜாரியா கோர்வெட்
    • பதவி, பிபிசி

அது ருமேனியாவின் கரடுமுரடான மலை நிலப்பரப்பு. அங்குதான் அந்த இருவரது கண்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் சந்தித்தன.அந்த ஆண், ரோமத்தாலான தலைப்பாகையைத் தவிர ஆடையேதும் இல்லாமல் நிர்வாணமாக இருந்தார். நல்ல உடல்வாகையும் வெளிர்நிற தோலையும் கொண்டிருந்தார்.

ஒருவேளை சூரிய ஒளியால் அவரது தோல் சிறிது சிவந்திருக்கலாம். அவரது தடிமனான, தசைகள் கொண்ட புஜம் ஒன்றைச் சுற்றி அவர் கழுகு-தாலான்களின் வளையலை அணிந்திருந்தார். அவர் ஓர் ஆரம்பக்கால நவீன மனிதராக இருந்தார்.

ஓநாய்-உரோம அலங்காரத்துடன் விலங்கு-தோல் கோட் அணிந்திருந்தார்.

மறுபுறம் அவளோ கருமையான தோல், நீண்ட கால்கள், மற்றும் ஜடை தரித்தது போன்று தலைமுடியைப் பின்னியிருந்தாள். இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டபோது, அவன் தொண்டையை கணத்துக் கொண்டு, அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்,

மேலும் ஓர் அபத்தமான உயர்ந்த, நாசிக் குரலில் முணுமுணுத்தபோது அவள் அவனை வெறுமையாகத் திரும்பிப் பார்த்தாள். அந்த இருவருக்கும் அவரவர் மொழிகள் பரஸ்பரம் புரிந்திருக்கவில்லை.

இருவரும் அசடு வழிவது போல சிரித்தனர். அடுத்து என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் ஊகிக்க முடியும்.

இரு துருவங்களின் காதல் கிளர்ச்சி

நியாண்டர்தால் உலகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிகாகோவின் இல்லினாய்ஸ் ஃபீல்ட் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியில் ஒரு நியாண்டர்டால் குடும்பத்தின் இனப்பெருக்க வரலாறை காட்சிப்படுத்தும் ஓவியப்படும்

இருவரின் காதல் வெளிப்பாடு ஓர் உணர்ச்சியூட்டக்கூடிய காதல் நாவலில் இருந்த ஒரு காட்சிக்கு சளைக்காதது போல இருந்திருக்கலாம்.

ஒருவேளை அந்தப் பெண், நியண்டர்தால் இனத்தைச் சேர்ந்தவராகவும், அந்த ஆண் நம் இனத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அவர்களின் உறவு சாதாரண, நடைமுறை வகையாகக் கூட இருக்கலாம்.

இந்த சந்திப்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதை நாம் ஒருபோதும் அறிய வாய்ப்பில்லை - ஆனால், மற்றவர்கள் இது போன்ற ஜோடி இப்படித்தான் ஒன்று சேர்ந்தது என உறுதியாக இருப்பார்கள்.

இனி அறிவியல்பூர்வ கதைக்கு வருவோம்.

சுமார் 37,000-42,000 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 2002 இல், ருமேனிய நகரமான அனினாவுக்கு அருகிலுள்ள தென்மேற்கு கார்பாத்தியன் மலைகளில் உள்ள நிலத்தடி குகை அமைப்பில் இரண்டு ஆய்வாளர்கள் ஓர் அசாதாரண கண்டுபிடிப்பை மேற்கொண்டனர்.அங்கு சாமானிய மனிதர்கள் செல்வது எளிதான காரியம் இல்லை.

நியாண்டர்தால் உலகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜிப்ரால்டரில் கண்டுபிடிக்கப்பட்ட நியண்டர்டாலின் புதைபடிம மண்டை ஓடு லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

முதலில் அவர்கள் 200 மீ (656 அடி) நிலத்தடி ஆற்றில் கழுத்து ஆழத்தளவு நீரோட்டத்தில் சென்றனர். பின்னர் நீருக்கடியில் 30 மீ (98 அடி) ஒரு ஸ்கூபா டைவ் செய்தனர். அதைத் தொடர்ந்து 300-மீட்டர் (984 அடி) போர்ட்டா அல்லது "மவுஸ் ஹோல்" எனப்படும் துவாரம் வழியாக ஏறினர் - அதன் வழியாக அவர்கள் முன்பு அறியப்படாத அறைக்குள் நுழைந்தனர்.அந்த இடம்தான் "எலும்புக் குவியல்களின் குட்டிக் குகை" என அழைக்கப்படுகிறது.

அதற்குள் ஆயிரக்கணக்கான பாலூட்டிகளின் எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மனிதன்-விலங்குகளின் நீண்ட வரலாற்றில், இது அறியப்பட்ட முதன்மையான குகையாக இருக்கக் கூடும். இங்கு ஆண் கரடிகள் வசித்ததாக கருதப்படுகிறது.

அங்கே பழுப்பு கரடியின் அழிந்துபோன உறவுகளின் எச்சங்கள் இருந்தன. அவற்றின் மேற்பரப்பில் ஒரு மனிதனின் தாடை எலும்பு இருந்தது.

அது ஐரோப்பாவில் உள்ள 'ரேடியோ-கார்பன் டேட்டிங்' முறையில் அறியப்பட்ட பழமையான ஆரம்பகால நவீன மனிதர்களில் ஒருவருடையது என தெரியவந்தது. எச்சங்கள் இயற்கையாகவே குகைக்குள் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டிருக்கலாம்.

அந்த நேரத்தில் குகைக்குள் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றை கவனித்தனர்.

அந்த தாடை எலும்பு அதன் தோற்றத்தில் தவறாமல் நவீனமாக இருந்தாலும், அது சில அசாதாரணமான, நியாண்டர்தால் போன்ற அம்சங்களையும் கொண்டிருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அனுமானம் உறுதிப்படுத்தப்பட்டது.2015ஆம் ஆண்டு கண்டுபிடிப்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரபணு கூறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, ​​அந்த தாடைக்குரிய நபர் ஆண் என்றும், 6-9% நியாண்டர்தால் இனத்தவராக அவர் இருக்கலாம் என்றும் கண்டறிந்தனர்.

இது ஆரம்பகால நவீன மனிதனில் இதுவரை காணப்படாத மிக உயர்ந்த செறிவு ஆகும், மேலும் தற்போதைய ஐரோப்பியர்கள் மற்றும் ஆசியர்களில் காணப்படும் அளவு போல அது மூன்று மடங்கு அதிகமாகும், அதன் மரபணு அமைப்பு தோராயமாக 1-3% வரை நியண்டர்தால் அம்சத்தை கொண்டிருந்தது.

நியாண்டர்தால் உலகம்

பட மூலாதாரம், BBC Earth

படக்குறிப்பு, நியண்டர்தால்கள் கழுகுகளைப் பிடித்து அவற்றின் இறகுகளை அலங்காரத்திற்குப் பயன்படுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

தாடை எலும்பைத் தவிர, இதேபோன்ற அம்சங்களின் கலவையைக் கொண்டிருந்த அதே குகையில் மற்றொரு நபரின் மண்டை ஓடு துண்டுகளை ஆய்வாளர்கள் குழு கண்டறிந்தது.

ஆராய்ச்சியாளர்களால் இன்னும் அதன் எச்சங்களிலிருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்க முடியவில்லை, ஆனால் தாடை எலும்பைப் போலவே, அவை நியாண்டர்தால் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அப்போதிலிருந்து, ஆரம்பகால நவீன மனிதர்களுக்கும் நியண்டர்தால்களுக்கும் இடையிலான உடலுறவு ஓர் அரிய நிகழ்வு அல்ல என்பதற்கான சான்றுகள் பெருகி வருகின்றன.

Short presentational grey line
Short presentational grey line

ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட, நியண்டர்தால் டிஎன்ஏவை இன்று உயிருடன் உள்ள அனைவரிடமும் காணலாம், அவர்களின் மூதாதையர்கள் இந்தக் குழுவுடன் நேரடியாக தொடர்பு கொண்டதாக கருதப்படவில்லை.

2016ஆம் ஆண்டில், சைபீரியாவில் உள்ள அல்தாய் மலைகளில் இருந்து நியண்டர்தால்கள் சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நவீன மனிதர்களின் மூதாதையர்களுடன் தங்கள் மரபியலில் 1-7% பகிர்ந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மனித வரலாற்றில் இந்த அதிர்ச்சியூட்டும் அத்தியாயத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது தெரிந்து கொள்ள விரும்பினால் மேலே படிக்கவும்.

முத்தம் பரிமாறிய நியாண்டர்தால்கள்

நியாண்டர்தால் உலகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுமார் 130,000 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது குரோஷியா ஆக அறியப்பட்ட பகுதியில், நியாண்டர்தாலிடம் இருந்து எடுக்கப்பட்ட கழுகின் கால் விரலில் இருந்து துண்டாக வெட்டப்பட்ட நகப் பகுதி.

2017ஆம் ஆண்டில், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் லாரா வெய்ரிச் - வரலாற்றுக்கு முந்தைய பல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும் 48,000 ஆண்டுகள் பழமையான ஹிட்ச்ஹைக்கர் என்ற கொடிய கிருமியின் தடயத்தை கண்டுபிடித்தார்.

"பண்டைய நுண்ணுயிரிகளை கடந்த காலத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கான ஒரு வழியாக இதை நான் பார்க்கிறேன், மேலும் பண்டைய மனிதர்களுக்குள் வாழ்ந்த நுண்ணுயிரிகளை புனரமைப்பதற்கான ஒரே நம்பகமான வழி பல் கால்குலஸ் தான்" என்று வெய்ரிச் கூறுகிறார்.

Short presentational grey line
Short presentational grey line

நியாண்டர்தால்கள் என்ன சாப்பிடுகிறார்கள் மற்றும் அவர்கள் தங்கள் சூழலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அறிய லாரா ஆர்வமாக இருந்தார்.

அவர் இந்த உண்மையை கண்டுபிடிக்க, மூன்று வெவ்வேறு குகைகளில் காணப்பட்ட பற்களில் உள்ள பற்களின் டிஎன்ஏவை வரிசைப்படுத்தினார்.

வடமேற்கு ஸ்பெயினில் உள்ள எல் சிட்ரானில் காணப்பட்ட 13 நியாண்டர்தால்களில் இருந்து இரண்டு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த நபர்களில் பலர் பிறவி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

அதாவது தவறான முழங்கால்கள், முதுகெலும்புகள் மற்றும் குழந்தைப் பருவத்திற்குப் பிறகு நீண்ட காலமாக இருந்த குழந்தை பற்கள் போன்ற குறைபாடுகளை இந்த குழு கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது,

இவர்கள் நீண்ட கால இனவிருத்திக்குப் பிறகு மரபணு பின்னடைவால் இந்த பாதிப்பை கொண்டிருக்கலாம். அவர்களின் எலும்புகள் அவர்கள் நரமாமிசம் உண்பதற்கான அறிகுறிகளுடன் இருந்தன. இந்த ஆய்வைக்கொண்டு பூமியில் நடமாடிய கடைசி நியண்டர்தால்கள் கூட்டமாக இவர்கள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.வெய்ரிச்சின் ஆச்சரியத்திற்கு, எல் சிட்ரானின் பற்களில் ஒன்றில், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளான மெத்தனோபிரெவிபாக்டர் ஓரலிஸின் மரபணு தடயம் கண்டறியப்பட்டதே காரணம்.

நியாண்டர்தால் உலகம்

பட மூலாதாரம், Sabena Jane Blackbird

படக்குறிப்பு, நியண்டர்டால்கள் (வலது) தனித்துவமான முக அம்சங்களைக் கொண்டிருந்தனர், ஆனால் சில மண்டை ஓடுகள் மனித பண்புகளின் கலவையுடன் கண்டறியப்பட்டுள்ளன.

இது இன்றுவரை மனிதர்களின் வாயில் காணப்படும் இயல்பான நுண்ணுயிரி. நியண்டர்தால் பதிப்பை ஆரம்பகால நவீன மனிதப் பதிப்போடு ஒப்பிடுவதன் மூலம், சுமார் 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்று கலந்து விட்டு இருவரும் பிரிந்து சென்றிருக்கலாம் என வெய்ரிச்சால் மதிப்பிட முடிகிறது.

Short presentational grey line
Short presentational grey line

"என்னை ஈர்த்த விஷயம் என்னவென்றால், மனிதர்களுக்கும் நியாண்டர்தால்களுக்கும் இடையில் இனப்பெருக்கம் செய்வதை விவரித்த முதல் காலகட்டங்களில் இதுவும் ஒன்றாகும்" என்கிறார் வெய்ரிச்.

"ஒரு நுண்ணுயிர் இத்தனை ஆண்டுகளாக அந்த லட்சோபலட்ச ஆண்டுகள் பழமையான எச்சத்தில் புதைந்திருப்பது அற்புதம்."ஒருவரின் பல்லில் இருந்த நுண்ணுயிரி மற்றொருவரின் பற்களில் காணப்படுவதற்கு அவர்களுக்கு இடையே நடந்த வாய்வழி பரிமாற்றமே ஒரே சாத்தியமான வழி. அதுதான் முத்தப்பரிமாற்றம் என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் லாரா வெய்ரிச்.

அவர் தமது கண்டுபிடிப்பை மேலும் விவரிக்கிறார்.

"நீங்கள் ஒருவரை முத்தமிடும்போது, ​​​​வாய்வழி நுண்ணுயிரிகள் உங்கள் வாய்களுக்கு இடையில் முன்னும் பின்னுமாக செல்லும். இது ஒரு முறை நடந்திருக்கலாம், ஆனால் இது பரவலாக காணப்படுவதால் அவர்களுக்குள் முத்தப்பரிமாற்றம் அடிக்கடி நிகழும் ஒன்றாகவும் இருக்கலாம்," என்கிறார் லாரா.

ஆண் அல்லது பெண் நியாண்டர்தால்கள்

நியாண்டர்தால் உலகம்

பட மூலாதாரம், Lambert/Ullstein Bild/Getty Images

படக்குறிப்பு, ஆண் மற்றும் பெண் நியாண்டர்டால்கள் இருவரும் நவீன மனித முன்னோர்களுடன் கலவியில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது

இது பெரும்பாலும் பெண் நியண்டர்தால்கள் ஆரம்பகால நவீன மனித ஆண்களுடன் சேர்ந்த பிறகு நடந்ததா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது - ஆனால் இந்தக் கூற்றை மெய்ப்பிக்க சில தடயங்கள் உள்ளன.2008ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ரஷ்யாவின் அல்தாய் மலைகளில் உள்ள டெனிசோவா குகையில் உடைந்த விரல் எலும்பு மற்றும் ஒற்றை மோலார் பல் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

அதில் இருந்து மனிதனின் புத்தம் புதிய கிளையினங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

பல ஆண்டுகளாக, "டெனிசோவன்கள்" இந்த தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில மாதிரிகளிலிருந்து மட்டுமே அறியப்பட்டனர். அவற்றின் டிஎன்ஏ மரபு கிழக்கு ஆசிய மற்றும் மெலனேசிய வம்சாவளியினரின் மரபணுக்களில் இன்றுவரை தொடர்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

டெனிசோவன்கள் இன்றைய மனிதர்களை விட நியாண்டர்தால்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள். இரண்டு கிளையினங்களும் ஆசியாவில் நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றுடன் ஒன்று உறவைக் கொண்டிருக்கலாம்.

2018ஆம் ஆண்டில், நியாண்டர்தால் தாய் மற்றும் டெனிசோவன் தந்தையைக் கொண்ட டென்னி என்ற புனைப்பெயர் கொண்ட ஓர் இளம் பெண்ணின் எலும்புத் துண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இது தெளிவாகத் தெரிந்தது.

இதன் விளைவாக, நியாண்டர்தால்களின் ஆண் பாலின குரோமோசோம்கள் டெனிசோவன்ஸைப் போலவே இருந்தால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் 38,000-53,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூன்று நியாண்டர்தால்களின் டிஎன்ஏவை வரிசைப்படுத்தியபோது, ​​அவர்களின் Y குரோமோசோம்கள் ஆரம்பகால நவீன மனிதர்களுடன் மிகவும் பொதுவானதாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.நியண்டர்தால்கள் மற்றும் ஆரம்பகால நவீன மனிதர்களுக்கு இடையே "வலுவான மரபணு ஓட்டம்" இருப்பதற்கான ஆதாரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நியாண்டர்தால் உலகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்பெயின் நிலப்பரப்பில் காணப்படும் குகை ஓவியங்கள், நவீன மனிதர்கள் ஐரோப்பாவிற்கு வருவதற்கு 20,000 ஆண்டுகளுக்கு முன்பே, நியாண்டர்தால்களால் சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

உண்மையில், நியாண்டர்தால்களின் எண்கள் அவற்றின் இருப்பு முடிவில் குறைந்து வருவதால், அவர்களின் Y குரோமோசோம்கள் 'இல்லாமல்' போயிருக்கலாம். அவை அழிந்து, முழுவதுமாக நமது சொந்தமாக மாற்றப்பட்டது. இது கணிசமான எண்ணிக்கையிலான 'மூதாதையர் மனித ஆண்கள்' பெண் நியண்டர்தால்களுடன் உடலுறவு கொண்டிருந்ததை வெளிப்படுத்துகிறது.

ஆனால் கதை இத்துடன் முடியவில்லை.

2,70,000 முதல் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் பெரும்பாலும் ஆப்ரிக்காவில் மட்டுமே இருந்தபோது, ​​இனக்கலப்பு நிகழ்ந்திருக்கலாம்.

பால்வினை நோய்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு, வீல் பிமென்ஆஃப் பாலியல் ரீதியாக பரவும் மனித பாப்பிலோமாவைரஸ் (HPV) தொற்று பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ​​வித்தியாசமான ஒன்றைக் கவனித்தார்.பாப்பிலோமா வைரஸ்கள் கரடிகள், டால்பின்கள், ஆமைகள், பாம்புகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட விலங்குகள் மத்தியில் எங்கும் காணப்படுகின்றன - உண்மையில், அவை அவற்றுடன் தொடர்பில் இருந்த பிற உயிரினங்களிலும் காணப்படுகின்றன.

மனிதர்களில் மட்டும், 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு விகாரங்கள் புழக்கத்தில் உள்ளன, அவை உலகளவில் 99.7% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களுக்குக் காரணமாகின்றன. இவற்றில், கொடியது HPV-16 வைரஸ் ஆகும், இது பல ஆண்டுகளாக உடலில் நிலைத்திருக்கும், ஏனெனில் அது பாதிக்கக்கூடிய செல்களை அமைதியாக சிதைக்கிறது.

உண்மையில், நியண்டர்தால்களுடனான உடலுறவு, எச்.ஐ.வியின் பழங்கால தொடர்பு உட்பட பல வைரஸ்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நியாண்டர்தால் உலகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்சில் உள்ள Chapelle-aux-Saints பகுதியில் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட நியாண்டர்தால் எலும்புக்கூடு எச்சங்களின் உருவக ஜோடிப்பு காட்சி

பாலியல் உறுப்புகள்

நியாண்டர்தால் ஆண்குறிகள் மற்றும் பிறப்புறுப்புகள் எப்படியிருந்தன என்று ஆச்சரியப்படுவது முட்டாள்தனமாகத் தோன்றினாலும், பல்வேறு உயிரினங்களின் பிறப்புறுப்புகள் பரந்த அளவிலான அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை.

எழுதும் நேரத்தில், கூகுள் ஸ்காலரில் "ஆணுறுப்பு பரிணாமம்" என்று தேடினால் 98,000 முடிவுகள் கிடைத்தன, அதே சமயம் "யோனி பரிணாமம்" 87,000 முடிவுகளை அளித்தது.ஒரு விலங்கின் பாலியல் உறுப்புகளை கொண்டு அவற்றின் வாழ்க்கை முறை, இனச்சேர்க்கை உத்தி மற்றும் பரிணாம வரலாறு பற்றிய வியக்கத்தக்க அளவுகளை வெளிப்படுத்த முடியும் - எனவே அவற்றின் உறுப்புகள் பற்றி ஆழமான கேள்விகளைக் கேட்பது அவற்றைப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு வழியாகும்.ஆனால், மனித ஆண்குறிகள் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும். அவை மென்மையானவை. மனித இனத்தின் நெருங்கிய உறவாகக் கருதப்படும் பொனோபோ சிம்பன்சிகள் - மனித டிஎன்ஏவில் 99% பகிர்ந்து கொள்கிறது.

"ஆணுறுப்பு முதுகெலும்புகள்". தோல் மற்றும் முடி (கெரட்டின்) போன்ற அதே பொருளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சிறிய பார்ப்கள், ஆண்களின் விந்தணுக்களை வெளியேற்றுவதற்காக அல்லது பெண்ணின் யோனியை லேசாகத் துடைப்பதற்காகவும், மீண்டும் உடலுறவில் ஈடுபடுவதை சிறிது நேரம் தள்ளிவைப்பதற்காகவும் உருவானதாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, 2013ஆம் ஆண்டில், ஆண்குறி முதுகெலும்புகளுக்கான மரபணு குறியீடு நியண்டர்தால் மற்றும் டெனிசோவன் மரபணுக்களில் இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

நியாண்டர்தால் உலகம்

பட மூலாதாரம், Getty Images

இது நவீன மனிதர்களிடமிருந்து உள்ளது, இது குறைந்தது 8,00,000 ஆண்டுகளுக்கு முன்பு நமது கூட்டு மூதாதையர்களிடமிருந்து மறைந்துவிட்டதாக அந்த ஆய்வு கூறுகிறது.

Short presentational grey line
Short presentational grey line

அதிகம் தூங்கிய நியாண்டர்தால்கள்

இருப்பினும், நியண்டர்தால்கள் நவீன மனிதர்களை விட அதிகமாக உறங்கினார்கள் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.கருவில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஆண்ட்ரோஜன்கள் கருப்பையில் இருப்பது ஒரு நபரின் "இலக்க விகிதத்தை" பாதிக்கும் என்று கருவில் உள்ள ஆய்வுகள் காட்டுகின்றன. இது அவர்களின் ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல்களின் நீளம் எவ்வாறு என ஒப்பிட பயன்படுத்தப்பட்டது.

இரண்டாவதாக. அதிக டெஸ்டோஸ்டிரோன் சூழலில், மக்கள் குறைந்த விகிதங்களுடன் உறக்கத்துக்கு ஆளாயினர். உயிரியல் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் இது பரவலாகவே ஒப்புக் கொள்ளப்படும் உண்மை.

இந்த கண்டுபிடிப்பிலிருந்து, இலக்க விகிதங்கள் மற்றும் முக கவர்ச்சி, பாலியல் நோக்குநிலை, ஆபத்து வழிமுறைகள், கற்றல் செயல்திறன், பெண்கள் எவ்வளவு எளிதாக வசப்படுத்தப்பட்டனர், ஆண்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களின் விந்தணுக்களின் அளவு ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனாலும், இந்த கண்டுபிடிப்புகள் பரந்த ஆய்வுச் சமூகத்தின் மத்தியில் இன்னும் சர்ச்சையாகவே இருக்கின்றன.

(ஜனவரி 6, 2022ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: