ஒக்யூலஸ் க்வெஸ்ட் 2: மெய்நிகர் தளத்தில் குழந்தை பாதுகாப்பு - மெடா என்ன செய்யப்போகிறது?

மெய்நிகர் தளம்

பட மூலாதாரம், Getty Images

Oculus Quest 2 மெய்நிகர் தளத்தில் பெற்றோரின் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பது, குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என அதிகரித்து வரும் கவலைக்கு மத்தியில், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா, பிரிட்டனின் தரவுகள் கட்டுப்பாட்டு அமைப்புடன் ஆலோசனை நடத்தவிருக்கிறது. கட்டுப்பாட்டு வசதிகள் இல்லாமல் இயங்கும் ஓக்யூலஸ் க்வெஸ்ட் 2, குழந்தைகளின் பாதுகாப்புக் குறியீட்டை மீறுவதாக பிரசாரகர்கள் வாதிடுகின்றனர், இது குறஇத்து தகவல் ஆணையர் அலுவலகம் (ICO) மெடா நிறுவன நிர்வாகிகளுடன் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் கடந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்மஸ் பண்டிகையின்போது வழங்கப்பட்ட ஒரு பிரபலமான பரிசாக நிரூபிக்கப்பட்டது.

சமூக ஊடக உரிமையாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகள் இல்லாததால் அது தீங்கு விளைவிக்கலாம் என்ற கவலை அதிகரித்து வருகிறது.

குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய இணையதள சேவைகள், அவர்களின் பயன்பாட்டிற்கு பொருத்தமானவை என்பதை உறுதி செய்வதே இந்த Codeகின் நோக்கமாக உள்ளது.

தகவல் ஆணையர்களின் அலுவலகத்துடன் இணைந்து இந்த Codeஐ செயல்படுத்த வேலை செய்வதாக மெடா நிறுவனம் கூறுகிறது.

"கோடின் கீழ் உள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கும், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற அனுபவங்களை வழங்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்றும் அந்த நிறுவனம் கூறியது.

ஓக்யூலஸ் பயனர்கள் 13 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும், என நிறுவனத்தின் வழிகாட்டுதல் கூறுகிறது: "வயதானவர்கள் தங்கள் குழந்தைகள் எப்படி... ஓக்யூலஸ் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும்."

ஆனால் குழந்தைகள் கோடிங் வடிவமைப்பாளரான கிராஸ்பெஞ்ச் பியர் பீபன் கிட்ரான், இந்த கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை என்று தான் கவலைப்பட்டதாகக் கூறினார்.

"ஓக்யூலஸ் போன்ற மெய்நிகர் தளத்தை பயன்படுத்தும் குழந்தைகள், குறைந்தபட்ச வயதுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகக் கூறும் பாக்சை டிக் செய்வதன் மூலம், அரட்டை அறைகள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் பிற அம்சங்களை அணுகலாம்."

விஆர் சாட் (VR Chat)

சமீபத்தில், மெய்நிகர் தளத்தில் குழந்தை பாதுகாப்பு குறித்த பிரச்சனை இருப்பதாக டிஜிட்டல் வெறுப்பை எதிர்க்கும் மையத்தால் ( Center for Countering Digital Hate - CCDH) எழுப்பப்பட்டது. பிரச்சாரக் குழு விஆர் சாட் எனப்படும் பிரபலமான மூன்றாம் தரப்பு பயன்பாட்டைப் பார்த்தது.

மெய்நிகர் தளத்தின் ஹெட்செட்டின் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ஓக்யூலஸ் உட்பட பல தளங்களில் இந்த ஆப் வேலை செய்கிறது.

மெய்நிகர் தளம்

பட மூலாதாரம், Getty Images

CCDH மையம் தனது ஆராய்ச்சியில் 18 வயதுக்குட்பட்டவர்கள் சந்தித்த பிரச்னைகளாக கூறப்பட்டவை:

  • கிராஃபிக் வடிவில் பாலியல் தகவல்கள்
  • கொடுமைப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம்
  • இனவாத அவதூறுகள் மற்றும் தீவிரவாதப் பேச்சுகளை திரும்பத் திரும்ப பேசுதல்

விஆர் சாட் பயன்பாடு பயனர்களை மெய்நிகர் சூழல்களை (Virtual environment) அல்லது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள "உலகங்களை" உருவாக்க அனுமதிக்கிறது.

சிசிடிஎச் அறிக்கையின்படி, "செக்ஸ் கிளப் என கருப்பொருள் கொண்ட ஒரு பயனரால் கட்டமைக்கப்பட்ட சூழலை ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டனர், இருப்பினும் இது 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றது‌ என்று குறிப்பிடப்பட்டிருந்தது".

விஆர் சாட் பக்க கருத்துக்களை அறிய பிபிசி அவர்களை அணுகியுள்ளது.

விஆர் சாட் -இன் சமூக வழிகாட்டுதல்களின்படி, துன்புறுத்தல் அனுமதிக்கப்படாது, "ஆபாசம் மற்றும் நிர்வாணம் அனுமதிக்கப்படாது" மற்றும் "வெறுப்பூட்டும் பேச்சுகள், மொழி, சின்னங்கள் மற்றும் செயல்கள் உட்பட எதையும்" அனுமதிக்காது.

'தொடர் முயற்சி'

மெய்நிகர் தளம்

பட மூலாதாரம், Getty Images

ICO கூறிகையில் "ஓக்யூலஸ் தயாரிப்புகள் மற்றும் மெய்நிகர் தளத்தின் சேவைகளுக்கான வடிவமைப்பு அணுகுமுறைகள் மூலம் மெடாவுடன் இணைந்து அதன் குழந்தைகளின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்து மேலும் விவாதங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்."

குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்கான தேசிய அமைப்பின் குழந்தைப் பாதுகாப்பு இணையகொள்கையின் தலைவரான ஆண்டி பர்ரோஸ், மெய்நிகர் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தார்.

"ஓக்யூலஸ்ஐ பயன்படுத்தும் போது குழந்தைகள் தீங்கு விளைவிக்கும் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு வெளிப்படுத்தபடலாம்" என்று அவர் எழுதினார்.

ஒரு அறிக்கையில், : "ICO உடன் கலந்தாலோசித்து, வயதுக்கு ஏற்ற வடிவமைப்புக் குறியீட்டிற்குள் (குழந்தைகளுக்கான Codeஐ) தரங்களைச் செயல்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது எங்கள் பங்கில் தொடர்ச்சியான முயற்சியாகும், இது டிஜிட்டல் சூழலைச் சுற்றியுள்ள தொழில்நுட்பங்கள், வழிகாட்டுதல் மற்றும் புரிதல் மற்றும் இளைஞர்கள் அதனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்கிறது." என மெடா கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: