ரோமப் பேரரசு வரலாறு: பிரிட்டனில் 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமாபுரி வர்த்தக நகரம் கண்டுபிடிப்பு

HS2 அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய தளங்களில் இதுவும் ஒன்று என்று ஜேம்ஸ் வெஸ்ட் கூறினார்

பட மூலாதாரம், HS2

படக்குறிப்பு, HS2 அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய தளங்களில் இதுவும் ஒன்று என்று ஜேம்ஸ் வெஸ்ட் கூறினார்

பிரிட்டனில் HS2 என்று அழைக்கப்படும் 'ஹை ஸ்பீடு - 2' ரயில் பாதை அமையவுள்ள இடத்தில் அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு ஒரு வளம் மிகுந்த, பரந்த ரோமானிய வர்த்தகக் குடியிருப்பு ஒன்று இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

தெற்கு நார்தம்ப்டன்ஷையரில் உள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 80 தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை கொண்டுள்ள அந்த குழு, கடந்த ஓராண்டாக அந்த இடத்தில் அகழாய்வு செய்து 300க்கும் மேற்பட்ட ரோமப் பேரரசு கால நாணயங்கள் உள்பட ஏராளமான கலைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

அகழ்வாராய்ச்சியின் தள மேலாளர் ஜேம்ஸ் வெஸ்ட் "இது அசாதாரணமானது. இங்கு வாழ்ந்த மக்களைப் பற்றி அதிகம் கூறுகிறது" என்றார்.

அங்கு கருப்பு மண் அதிகம் இருப்பதால் ப்ளேக் க்ரவுண்ட்ஸ் (Blackgrounds) என்று அழைக்கப்படும் தளம், எட்கோட் மற்றும் சிப்பிங் வார்டன் கிராமங்களுக்கு அருகில் உள்ளது.

HS2

பட மூலாதாரம், HS2

30க்கும் மேற்பட்ட சுற்று வீடுகளால் உருவாக்கப்பட்ட இந்த இரும்புக் கால கிராமம், கி.மு 400 இல் நிறுவப்பட்டதாக நம்பப்படுவதாகவும், இது ஒரு பணக்கார ரோமானிய வர்த்தக நகரமாக வளர்ந்துள்ளது என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் குடியிருப்பு காலப்போக்கில் விரிவடைந்து, ரோமாபுரி பேரரசின் ஆட்சிக் காலத்தில் மிகவும் செழிப்பாக மாறியது, புதிய கல் கட்டடங்கள் மற்றும் சாலைகள் கட்டப்பட்டன என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

அகழ்வாராய்ச்சி குழு 10மீ (33அடி) அகலமான ரோமப் பேரரசு கால சாலையைக் கண்டுபிடித்தது. அந்த அளவு "வழக்கமான சாலைகளைப் போல் அல்லாதது" என்று விவரித்தனர். இச்சாலை அகழாய்வுத் தளத்தின் வழியாக செல்கிறது.

HS2

பட மூலாதாரம், HS2

HS2 தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பட்டறைகள், சூளைகள், "அழகாகப் பாதுகாக்கப்பட்ட கிணறுகள்" ஆகியவை இருந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் நெருப்பின் சிவப்பு நிறத்தில் உள்ள மண்ணாலான பொருட்கள் ஆகியவற்றைக்க் கண்டறிந்தனர். இது ரொட்டி தயாரித்தல் மற்றும் உலோக வேலைகள் அங்கு நடந்ததைக் குறிக்கிறது.

நாணயங்களுடன், கண்ணாடி பாத்திரங்கள், அலங்கார மண்பாண்டங்கள், நகைகள் மற்றும் ஒப்பனைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஒப்பனைக்காக எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தப்பட்ட கலினா (லெட் சல்பைடு) எனும் கனிமத்தின் தடயங்கள் ஆகியவை அகழாய்வுத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

HS2

பட மூலாதாரம், HS2

படக்குறிப்பு, HS2

லண்டன் தொல்பொருள் அருங்காட்சியகம் ( Museum of London Archaeology- MOLA) கண்டறிந்த "மிகவும் ஈர்க்கக்கூடிய தளங்களில்" இதுவும் ஒன்று என்று HS2-இல் கண்டறிந்ததைவை குறித்து வெஸ்ட் கூறினார்.

இந்த ப்ளேக் க்ரவுண்ட்ஸ் அகழாய்வுத் தளம் "பல காலகட்டங்களில் பரவியுள்ளது" என்றும் பல "உயர்தர கண்டுபிடிப்புகளை" தங்கள் அணிக்கு வழங்கியது என்றும் அவர் கூறினார்.

" ப்ளேக் க்ரவுண்ட்ஸ் அகழாய்வுத் தளம் உண்மையில் இந்த பிராந்தியத்திலும் , அதற்கு அப்பாலும் ரோமப் பேரரசு கால நிலப்பரப்பு பற்றிய நமது புரிதலை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: