அறிவியல் ரகசியம்: சூடான ரத்தம் கொண்ட நீர்மூழ்கி விலங்கு கடுங்குளிர் நீரில் வேட்டையாடுவது எப்படி?

பட மூலாதாரம், R A MACARTHUR/K L CAMPBELL
உலகிலேயே மிகச் சிறிய நீர்மூழ்கிப் பாலூட்டிகளான வாட்டர் ஷ்ரூவ்களைக் குறித்து ஆராய்ச்சியாளர்கள் சில ஆச்சர்யத் தகவல்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர்.
உயிரியலாளர்கள் உலகின் மிகச்சிறிய நீர்மூழ்கிப் பாலூட்டிகளின் மரபணு ரகசியங்களை கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு உயிரினம் மற்ற உயிரினங்களோடு எப்படி தொடர்புடையதாக இருக்கிறது என்பதைக் காண பரிணாம வளர்ச்சி மரத்தை உருவாக்குவார்கள். அப்படி இதன் மரபணு மாதிரிகளைப் பயன்படுத்தி உருவாக்கிய போது, இந்த உயிரினக் குழுக்களின் டைவிங் நடத்தை ஐந்து முறை வெளிப்பட்டது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
வாட்டர் ஷ்ரூவ்கள் பூச்சிகளை உணவாக உண்ணும் பாலூட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் குளிர்ந்த நீரில் மூழ்கி வேட்டையாடும் இந்த சிறிய, சூடான இரத்தம் கொண்ட வாட்டர் ஷ்ரூவ் உயிரினத்தின் திறன் அடிப்படை பரிணாம கொள்கைகளை மீறுவதாகத் தெரிகிறது.
இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டு பிடித்த விவரங்கள் 'இ-லைஃப்' என்கிற இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், R A MACARTHUR/K L CAMPBELL
இந்த ஆச்சரியமான பரிணாம வளர்ச்சிப் பயணத்தைக் கண்காணிக்க, விஞ்ஞானிகள் 71 வெவ்வேறு உயிரினங்களிலிருந்து மரபணு மாதிரிகளை சேகரித்தனர்.
அம்மாதிரிகள் அனைத்தும் பூச்சிகளை உணவாக உண்ணும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. அக்கூட்டம் யூலிபோடிஃப்லா என்று அழைக்கப்படுகிறது.
அந்த கிரேக்க சொல் "உண்மையான கொழுப்பு மற்றும் குருட்டு" என்கிற பொருளைத் தருகிறது. இது பாலூட்டிகளின் குழு, அதில் ஹெட்ஜ்ஹாக், மோல், ஷ்ரூவ் போன்ற உயிரினங்களும் அடங்கும்.
"நாங்கள் உலகம் முழுவதிலும் இருந்து மாதிரிகளை சேகரித்தோம்" என லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் முனைவர் மைக்கேல் பெரன்ப்ரிங்க் கூறினார்.
அவரும் அவரது சகாக்களும் தங்கள் யூலிபோடிஃப்லா குடும்ப மரத்தை உருவாக்கிய உடன் - ஒவ்வொரு இனத்திற்கும் இடையிலான உறவின் விரிவான படமாக மரபணு குறியீட்டை உருவாக்குகிறார்கள். அவ்விவரங்களைப் பயன்படுத்தி டைவிங் நடத்தையின் பரிணாமம் குறித்த விவரங்களைப் பெற முடிந்தது.
"தசையில் ஆக்ஸிஜனை சேமித்து வைக்கும் மயோகுளோபின் எனப்படும் ஒற்றை புரதத்தின் பரிணாமத்தை நாங்கள் வரைபடமாக்கினோம்" என முனைவர் பெரன்ப்ரிங்க் விளக்கினார்.
"இந்த மயோகுளோபின் என்கிற முக்கிய புரதம் விலங்குகளின் தசைகளில் ஏராளமாக அதிகரிக்கும் போது ஒரு மரபணு குறியீட்டை அதன் [டி.என்.ஏவில்] காணலாம்."
ஒரு விலங்கு தன் தசைகளில் அதிக அளவிலான ஆக்ஸிஜனை சேமித்து வைத்துக் கொள்ள தேவையான மாற்றம் இது என அவர் விளக்கினார்,
எனவே அந்த உயிரினத்தால், தன் சுவாசத்தை தண்ணீருக்கு அடியில் கட்டுப்படுத்தி, வேட்டையாட முடியும்.
அந்த "டைவிங் குறியீடு" இந்த விலங்குகளின் குழுவில் ஐந்து முறை தனித்தனியாக வெளிப்பட்டது.
"இக்குறியீடு மூன்று முறை ஷ்ரூவிலும், இரண்டு முறை மோல்ஸ் உயிரினங்களிலும் உருவானது" என முனைவர் பெரன்ப்ரிங்க் கூறினார்.
"ஒரு புரதத்தின் மரபணு வரிசை, புதை படிவங்களிலிருந்து நம்மால் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்களை, இந்த விலங்குகளின் வாழ்க்கை முறையைப் பற்றி நமக்கு அதிகம் கூறுகிறது."
"நீரில் மூழ்குவதற்குத் தோதான விஷயங்களை மிகக் குறைவாக பெற்ற உயிரினம்" பாலூட்டிகள்தான் என பரிணாம வளர்ச்சி குறித்த மரபணு ஆய்வு நமக்கு கூறியுள்ளது" என்கிறார்.
"அவை உருவத்தில் மிகச் சிறியவை, அவை வெப்பத்தை மிக விரைவாக இழக்கின்றன, மேலும் அவ்வுயிரினம் தன் ஆற்றலை அதிக அளவில் எரிக்கின்றன" என அவர் விளக்கினார்.
"இப்படி நீருக்குள் அதிக ஆற்றலை செலவழித்துச் செல்வதால், அந்த உயிரினங்கள் நதி மற்றும் நீரோடைகளில் வாழும் பூச்சிகள் மற்றும் லார்வாக்களை உணவாகப் பெறுகின்றன."
"இயற்கையால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை இது நமக்கு தெளிவாகக் காட்டுகிறது." என்கிறார் முனைவர் பெரன்ப்ரிங்க்.
பிற செய்திகள்:
- "இபிஎஸ் ஒரு சர்வாதிகாரி, அதிமுகவை மீட்போம்" - கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி பேட்டி
- கொரோனா மரணம் என குறிப்பிட்டு சான்றிதழ் தர மருத்துவமனைகள் தயங்குவது ஏன்?
- ஓபிஎஸ் சமரசம் ஆனது ஏன்? அதிமுக கூட்டத்தில் கடைசி நேர அதிரடி
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
- விஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது?
- பாதி நேரம் ஐடி வேலை, மீதி நேரம் சமூக சேவை: வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை
- யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? இணையத்தில் தேடப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












