இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் பயணம் (புகைப்படத் தொகுப்பு)

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா, சர்ச்சைக்குரிய ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தை செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டார்.

அவருடைய உண்ணாவிரதப் பயணத்தை கடந்த சில ஆண்டுகளாக மிக நெருக்கமாக பின்பற்றி வந்த புகைப்படக் கலைஞர் இயன் தாமஸ் ஜான்சென்-லொண்குஸ்ட் எடுத்த இரோம் ஷர்மிளாவின் புகைப்படத் தொகுப்பு

ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக இரோம் ஷர்மிளா 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்
படக்குறிப்பு, ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக இரோம் ஷர்மிளா 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்
ஒரு தசாப்த காலமாக ஷர்மிளாவுக்கு மூக்கில் பொருத்தப்பட்ட ஒரு குழாய் வழியாக கட்டாயமாக உணவு வழங்கப்பட்டு வந்தது
படக்குறிப்பு, ஒரு தசாப்த காலமாக ஷர்மிளாவுக்கு மூக்கில் பொருத்தப்பட்ட ஒரு குழாய் வழியாக கட்டாயமாக உணவு வழங்கப்பட்டு வந்தது
மணிப்பூரில் 10 பொது மக்கள் இந்தியப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, ஷர்மிளா இந்த உண்ணாவிரத்தை தொடங்கினார்
படக்குறிப்பு, மணிப்பூரில் 10 பொது மக்கள் இந்தியப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, ஷர்மிளா இந்த உண்ணாவிரத்தை தொடங்கினார்
தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்தது
படக்குறிப்பு, தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்தது
இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மணிப்பூர் உயர்நீதிமன்றம் சென்று தன்னுடைய போராட்டத்தை அவர் உறுதிசெய்து வந்திருக்கிறார்
படக்குறிப்பு, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மணிப்பூர் உயர்நீதிமன்றம் சென்று தன்னுடைய போராட்டத்தை அவர் உறுதிசெய்து வந்திருக்கிறார்
போராட்டம் உலக அளவில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அம்னெஸ்டி சர்வதேச சபை ஷர்மிளாவை மனசாட்சியின் கைதி என்று வர்ணித்துள்ளது
படக்குறிப்பு, போராட்டம் உலக அளவில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அம்னெஸ்டி சர்வதேச சபை ஷர்மிளாவை மனசாட்சியின் கைதி என்று வர்ணித்துள்ளது
உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை இந்த செயற்பாட்டாளர் ஈர்த்துள்ளார்
படக்குறிப்பு, உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை இந்த செயற்பாட்டாளர் ஈர்த்துள்ளார்
பெண்கள் மற்றும் சிவில் உரிமைகள் குழுக்களின் ஆதரவையும் ஷர்மிளா பெற்றிருக்கிறார்
படக்குறிப்பு, பெண்கள் மற்றும் சிவில் உரிமைகள் குழுக்களின் ஆதரவையும் ஷர்மிளா பெற்றிருக்கிறார்
இந்தியப் படையினரால் கொல்லப்பட்ட 10 பொதுமக்களின் நினைவாக, சம்பவம் நடந்த இடத்தில் நினைவகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது
படக்குறிப்பு, இந்தியப் படையினரால் கொல்லப்பட்ட 10 பொதுமக்களின் நினைவாக, சம்பவம் நடந்த இடத்தில் நினைவகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது