சேலம் எட்டு வழிச்சாலை திமுக தேர்தல் வாக்குறுதியில் இருந்ததா? - அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்தும் உண்மையும்

திமுக தேர்தல் வாக்குறுதியில் 8 வழிச்சாலை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த அரசின் ஆய்வு நடைபெற்றது. அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு "8 வழிச்சாலை போடக்கூடாது என்று திமுக சொல்லவே இல்லை" என்று கூறினார். இது உண்மையா?

பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் எ.வ.வேலு, "திமுக சாலை போடுவதற்கு எதிரியல்ல. விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களுக்கு என்ன தேவை எனப் புரிந்துகொண்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள், அல்லது மாற்று வழி காணுங்கள் என்பதைத்தான் திமுகவின் கொள்கையாக வைத்திருந்தோமே ஒழிய எட்டு வழிச்சாலையைப் போடக்கூடாது என்று திமுக எந்தக் காலத்திலும் சொல்லவே இல்லை" என்று பேசியுள்ளார்.

எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டதை ஏற்கெனவே சட்டமன்றத்தில் அமைச்சர் பதிவு செய்துள்ளார். இருப்பினும், முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இதை முழுமையாக எதிர்த்ததா இல்லையா என்ற விவாதத்தை அவருடைய இந்தப் பேச்சு தொடங்கி வைத்துள்ளது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கண்டித்த ஸ்டாலின் அறிக்கை

திமுகவின் முரசொலி நாளிதழில் குறிப்பிட்டுள்ளதன்படி, 2018, ஜூலை மாதம் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "சேலம் பசுமை விரைவுச் சாலை திட்டத்தை மக்களின் ஒத்துழைப்பும் ஒப்புதலுமின்றி சர்வாதிகார மனப்பான்மையுடன் அரச பயங்கரவாதத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்றிட முடியாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உணர வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்கு அடுத்த நாளே திமுகவினர் சேலத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும், "நீர் ஆதாரமே தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிற நிலையில், இந்தத் திட்டத்தால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளம், குட்டைகள் அழித்து நாசமாக்கப்படும் என்று வெளிவரும் செய்திகளை, கடமை உணர்வும் பொறுப்பும் உள்ள, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசு புறந்தள்ளிவிட்டு, இத்திட்டத்தை நீர் ஆதாரங்களை அழித்து மண் மேடாக்கி நிறைவேற்றத் துடியாய்த் துடிப்பது ஏன்?" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

அதோடு, "விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ, பசுமை நிறைந்த மலைகளோ பாதிக்கப்படாத வகையில், இந்த சென்னை-சேலம் பசுமை விரைவுச்சாலை திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு ஏற்றதொரு திட்டத்தைத் தயாரிக்க அல்லது இப்போது பயன்பாட்டிலுள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறென்," என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக திட்டத்தைக் கைவிட வலியுறுத்தல்

2018 ஆகஸ்ட் மாதத்தில், சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதித்தது. அதுகுறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், "சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன். அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை அராஜகப் போக்கில் கைப்பற்றிய அதிமுக அரசுக்கு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியிருக்கிறது. இனியாவது மாற்றுவழி குறித்து சிந்திக்க வேண்டும்," என்று ட்வீட் செய்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அதுமட்டுமின்றி, எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "சேலம் 8 வழிச்சாலையைத் தொடரலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது," எனக் கூறியவர், அப்போதைய அரசு இந்தத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதுகுறித்து அப்போது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரம், நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவான கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு எடுத்து வைக்கவில்லை. பாஜக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று வாதிட்டது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக பாஜக-அதிமுக அரசுகள் கூட்டணி வைத்துச் செயல்படுகின்றன. மக்கள் மன்றம் உரிய பாடத்தை வாக்குச் சீட்டு மூலம் கற்பிக்கும்.

கமிஷன் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தி விவசாயிகளின் மீது தடியடி நடத்தினார் முதலமைச்சர். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மீண்டும் எந்தவித முயற்சியும் செய்யக்கூடாது. மத்திய அரசின் திட்டம் என்று சொல்லி தப்பித்துக்கொள்ள நினைக்காமல் கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்," என்று தெரிவித்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

தேர்தல் வாக்குறுதியில் எட்டு வழிச்சாலை

திமுக ஆட்சிக்கு வந்து, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகும், 2021ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்து வழங்கிய மனுவில், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தைக் கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்தது.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

இவை அனைத்தையும் விடக் குறிப்பாக, திமுகவின் 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு அதில், 43, 367, 500 ஆகிய வாக்குறுதிகளில் திருத்தங்களைச் செய்து வெளியிட்டனர். வாக்குறுதி 43, "விவசாயிகளுக்கு எதிரான சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது" என்று திருத்தப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் பக்கத்திலேயே வெளியிட்டார்.

அதுபோக 367-வது வாக்குறுதியைத் திருத்தி, "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 நிராகரிக்கப்படும்; காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது" என்று அறிவிக்கப்பட்டது. 500வது வாக்குறுதியைத் திருத்தி, "இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் நாடற்ற இலங்கை தமிழர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, ராமநாதபுரம்: மாணவர்களுக்காக தனிஒருவனாக கிணறு தோண்டிய வார்டன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :