டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு தேடுதல் நோட்டீஸ்: “எங்கு வரவேண்டும் என சொல்லுங்க மோதிஜி” என பதில்

பட மூலாதாரம், Getty Images
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ தேடுதல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி வெளியானவுடன், மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோதியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய மதுபானக் கொள்கை குறித்து விசாரிக்குமாறு நேரடியாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் பெயரையும் இணைத்து, டெல்லியின் துணைநிலை ஆளுநர் சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அதைத் தொடர்ந்து, புதிய மதுபானக் கொள்கை குறித்து சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது. மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 19-ம் தேதியன்று துணை முதல்வரின் வீடு உட்பட 31 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் ஆவணங்கள் கிடைத்ததாக தகவல் வெளியானது.


மதுபானக் கொள்கையும் முறைகேடு குற்றச்சாட்டும்
டெல்லியில் ஆம் ஆத்மி அரசின், புதிய மதுபானக் கொள்கை கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி முழுவதும் மதுபான மண்டலங்களை உருவாக்கி, 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனை மேற்கொள்ள தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. இது பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு, கடந்த மாதம் 31-ம் தேதியோடு நிறைவடைந்தது.
இதற்கிடையே, புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம் சாட்டினார். அதோடு இது குறித்த சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தார்.
இதைத் தொடர்ந்து, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை ஆயுதமாகப் பயன்படுத்தி ஆம் ஆத்மி அரசை மிரட்டுவதாக மத்திய அரசு மீது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
அப்போது தனது ட்விட்டரில் பதிவிட்ட மணிஷ் சிசோடியா, "கேஜ்ரிவாலை பார்த்து மோதி அஞ்சுகிறார். ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு நாடு முழுவதும் அதிகரிப்பதால் இனி அதிகமாகப் பொய் வழக்குகள் பாயும். ஆனால், எந்தச் சிறையும் கேஜ்ரிவாலையும் ஆம் ஆத்மி கட்சியையும் தடுக்க முடியாது," என்று குறிப்பிட்டார்.
மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாகக் கூறி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. அதில் டெல்லி துணை முதல்வர் உட்பட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாகக் கூறி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, 19-ம் தேதியன்று சோதனை செய்தது.

பட மூலாதாரம், Getty Images
சிபிஐ சோதனை நடத்திய நேரத்தில் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா அதுகுறித்துப் பேசியபோது, "மதுபானக் கொள்கை சரியாக இருந்திருந்தால், அதை ஏன் நிறுத்தினார்கள்? சிபிஐ அதை விசாரிக்கத் தொடங்கியதால் அதை நிறுத்தினார்கள். மதுபானக் கொள்கை ஒரு பெரிய முறைகேடு," என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டது.
மேலும், "இதுகுறித்த அவர்களுடைய டீலிங், தெலங்கானாவில் நடந்தது. டீலை முடிப்பதற்காக மணிஷ் சிசோடியா சென்றார். அரசு அதிகாரிகள், மணிஷ் சிசோடியா என்று இதில் 10 முதல் 15 பேருக்கு சம்பந்தம் இருக்கும் என்று கருதுகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் செய்தி
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாளில் டெல்லியில் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்தும் அதற்குப் பின்னணியில் இருந்த மணிஷ் சிசோடியா குறித்தும் முதல் பக்கக் கட்டுரை வெளியானது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்தச் சூழலிலேயே மத்திய அரசு ரெய்டுகளை ஏவியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சிபிஐக்கு வரவேற்பு விடுத்து முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகக் கூறியவர், முன்பும் இதுபோன்ற சோதனைகள் நடந்துள்ளன ஆனால், எதுவும் கிடைக்கவில்லை என்று ட்வீட் செய்தார்.
"இந்த மொத்த வழக்குமே பொய்யானது. எனக்கு சிசோடியாவை 22 ஆண்டுகளாகத் தெரியும். அவர் நேர்மையானவர். அவர் அமைச்சராகப் பதவியேற்ற போது, டெல்லியிலுள்ள பள்ளிகள் மோசமான நிலையில் இருந்தன. அவர் இரவு பகலாக உழைத்து, ஒரு நீதிபதியின் குழந்தையும் ரிக்ஷா ஓட்டுபவரின் குழந்தையும் ஒன்றாகப் படிக்கும் நிலைக்குக் கொண்டு வந்தார்.
நாங்கள் தேசிய அளவில் வளர்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த முயற்சியெல்லாம் செய்கிறார்கள். ஆனால், எங்களை எதுவும் தடுக்காது," என்று குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதைத் தொடர்ந்து, நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒரு விளம்பரக் கட்டுரை என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், சுதந்திரமான கள ஆய்வின் அடிப்படையிலேயே அந்தக் கட்டுரையை எழுதியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது என்று இந்தியா டுடே செய்தியாளர் அன்கித் கோமர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

தேடுதல் நோட்டீஸ்
இன்று, டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ தேடுதல் நோட்டீஸ் வெளியிட்டது என்று ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.
அதுகுறித்து ட்வீட் செய்துள்ள சிசோடியா, "உங்களுடைய சோதனைகள் தோல்வியடைந்தன. எந்தப் பணமும் உங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்போது மணிஷ் சிசோடியா தப்பிப்பதாகக் கூறி தேடுதல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளீர்கள். இது என்ன வித்தை, மோதி ஜி?
நான் சுதந்திரமாக டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்கள்? என்னால் உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமரைத் தாக்கி பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
சிபிஐ, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் 12 பேர் வெளிநாடு பயணிப்பதைத் தடை செய்வதற்காக, இந்த நோட்டீஸை வெளியிட்டுள்ளது. இது, வெளிநாடு செல்பவர் தேடப்படுபவராக உள்ளாரா என்பதை உறுதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
இது, சட்ட அமலாக்க அமைப்புகளால் தேடப்படும் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக வெளியிடப்படுகிறது. இது, பெரும்பாலும் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் கப்பல் துறைமுகங்களில் சோதனைச் சாவடிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஏழு மாநிலங்களிலும் டெல்லியில் 31 இடங்களிலும் சிபிஐ நடத்திய சோதனையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரைக் காணவில்லை என்பதால், 13 பேர் மீதும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை முதல்வர் சிசோடியா உட்பட 14 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சனிக்கிழமையன்று சிபிஐ குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலரை விசாரணைக்காக அழைத்திருந்தது. சிபிஐ அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசியபோது, " மணிஷ் சிசோடியாவின் வீடு உட்பட 31 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களை சிபிஐ ஆராய்ந்து கொண்டிருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













