ஏக்நாத் ஷிண்டே: இன்று மகாராஷ்டிர முதல்வர், அன்று பீர் ஆலை தொழிலாளி - இவரது பின்னணி என்ன?

ஏக்நாத் சாம்பாஜி ஷிண்டே, மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னவிஸ் மாநில துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மாநிலத்தில் பெரும் அரசியல் நெருக்கடிக்கு காரணமான ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கிய சிவசேனையில் உள்கட்சி பிளவைத் தூண்டியவர் ஏக்நாத் ஷிண்டே. பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆதரவுடன் ஆளும் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனை கட்சி எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் திரும்பிய நிலையில், புதிய முதல்வர் ஆக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரும் வியக்கும் வகையில், ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக இருப்பார் என்று தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அவர், ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் துணை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், ஜூன் 30ஆம் தேதி முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அதே மேடையிலேயே ஃபட்னவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சரவையில் இடம் பெறுவோர் யாரும் இந்த நிகழ்வில் பதவியேற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் துணை முதல்வர் தேவந்திர ஃபட்னவிஸுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

X பதிவின் முடிவு, 3
முன்னதாக, மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகளின் 10 சமீபத்திய முன்னேற்றங்களையும், யார் இந்த ஏக்நாத் ஷிண்டே என்பதையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?
மகாராஷ்டிர மாநில அரசியலில் இப்போது மைய இடத்துக்கு வந்துள்ள ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சிவசேனை கட்சி எம்எல்ஏக்களை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும்வரை அந்த மாநிலத்தின் கேபினட் அமைச்சராக இருந்தார். அந்த அமைச்சரவையில் மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். மகாராஷ்டிராவின் கோப்ரி-பச்பகாடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகவும் அவர் இருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
2004, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் மகாராஷ்டிர சட்டமன்ற தொகுதியில் இருந்து அவர் நான்கு முறை தொடர்ந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏக்நாத் ஷிண்டே 1964ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி சதாராவில் பிறந்தார். சிறு வயதிலேயே தாணேவில் இவரது குடும்பம் குடியேறியது. அங்குள்ள மங்களா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியில் 11ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். அதற்கு மேல் அவர் படிப்பைத் தொடரவில்லை. பிறகு குடும்பத்தை நடத்துவதற்காக கிடைத்த வேலைகளை செய்தார். அதில் ஒன்று உள்ளூர் பீர் ஆலை தொழிலாளி பணி. அதைத்தொடர்ந்து ஆட்டோ ரிக்ஷா தொழிலாளியாகவும் சில ஆண்டுகள் இருந்தார்.

அப்போதுதான் அவருக்கு சிவசேனையுடனான தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்புகள், சிவசேனை தலைவர் பாலாசாஹேப் தாக்கரேவின் தாக்கம் ஆகியவற்றால் 1980களின் நடுப்பகுதியில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனை கட்சியில் சேர்ந்தார், அந்த நேரத்தில், அவர் பெல்காவியின் நிலை தொடர்பாக மகாராஷ்டிரா - கர்நாடகா இடையே நடந்த பல போராட்டங்களில் பங்கேற்றார். இதற்காக அவர் 40 நாட்கள் வரை சிறையில் இருந்தார்.
அதன் பிறகு பொது நல பிரச்னைகளில் தீவிரமாக பங்கெடுத்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு, கட்சியின் மேலிட தலைவர்களின் நேரடி அறிமுகம் கிடைத்தது. அது அவரது அரசியல் வாழ்க்கையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்ள உதவியது.

அரசியல் வாழ்க்கை

சிவசேனையின் நோக்கத்துக்கான அவரது அர்ப்பணிப்பு மேலிடத்தலைவர்களால் பல தருணங்களில் கவனிக்கப்பட்டது. அதன் விளைவாக 1997இல், தாணே முனிசிபல் கார்ப்பரேஷன் (TMC) தேர்தலில் கவுன்சிலாக போட்டியிடும் வாய்ப்பை ஏக்நாத் ஷிண்டே பெற்றார், அந்த தேர்தலில் அவர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
2001இல், அவர் அதே முனிசிபல் கார்பரேஷனில் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 வரை தொடர்ந்து அந்தப் பதவியில் ஏக்நாத் ஷிண்டே இருந்தார். ஆனால், தாணே மாநகராட்சி பிரச்னைகளைத் தாண்டி அவர் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த நலன்களில் அக்கறை காட்டிக் கொள்ளும் நோக்குடன் தமது அரசியல் எல்லை மற்றும் தொடர்புகளை விரிவுபடுத்தினார்.
2004ஆம் ஆண்டில், பாலாசாகேப் தாக்கரேவால் தாணே சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டிலேயே, 2005இல், தாணே மாவட்ட சிவசேனை தலைவர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2009, 2014 மற்றும் 2019ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
2014 தேர்தலுக்குப் பிறகு, சிவசேனை கட்சியின் சட்டமன்ற தலைவராகவும், பின்னர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து ஒரே மாதத்திற்குள், சிவசேனா மாநில அரசாங்கத்தில் சேர முடிவு செய்ததால், அவர் பொதுப்பணித் துறை (பொது நிறுவனங்கள்) அமைச்சராகப் பதவியேற்றார், ஜனவரி 2019இல் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பையும் இவர் கவனித்தார்.
குடும்பம்

ஏக்நாத் ஷிண்டே லதா ஷிண்டேவை மணந்தார். இந்த தம்பதிக்கு டாக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே என்ற மகன் இருக்கிறார். அவர் ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், இவர் கல்யாண் தொகுதியில் இருந்து மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், சிவசேனாவிலிருந்து விலகிய என்சிபியின் ஆனந்த் பரஞ்சபே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் ராஜு பாட்டீலை தோற்கடித்தார்.

முதல்வரான ஏக்நாத் ஷிண்டே - இதுவரை நடந்தது என்ன?
சிவசேனை கட்சியில் ஏக்நாத் ஷிண்டே அடுத்த மகாராஷ்டிரா முதல்வராக இருப்பார் என்று பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் வியாழக்கிழமை மாலையில் தெரிவித்தார், அந்த மாநிலத்தில் ஒரு நாளுக்கு முன்பு ஆட்சியில் இருந்த உத்தவ் தாக்கரேவை பதவியில் இருந்து வெளியேற சிவசேனை கட்சியினரை தூண்டியவர் ஃபட்னவிஸ்.
ஆனால், ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தபோதும், அவர் முதல்வராக தேர்வாகாமல் உத்தவ் தாக்கரே அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பதவியேற்பார் என வெளியிட்ட அறிவிப்பு அனைவரது புருவங்களையும் உயர்த்தியது.
இந்த நிலையில், ஷிண்டே அமைச்சரவையில் ஃபட்னவிஸ் துணை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்ததாகவும் அதை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
இதே கருத்தை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதிப்படுத்தி.னார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அதே மேடையிலேயே தேவேந்திர ஃபட்னவிஸ் துணை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகளின் 10 சமீபத்திய முன்னேற்றங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
"நான் அரசாங்கத்துக்கு வெளியே இருந்து அது சுமூகமாக நடப்பதை உறுதி செய்வேன்," என்று ஃபட்னாவிஸ் தெரிவித்தார். அம்மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7:30 மணிக்கு பதவியேற்றார். அவருடன் தேவேந்திர ஃபட்னவிஸும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக, முதல்வர் பதவியேற்க மாட்டேன் என்று அறிவித்த ஃபட்னவிஸ், "இந்த அரசு சரியாக செயல்படுவதை உறுதி செய்வது எனது பொறுப்பாகும். இது அதிகாரத்துக்கான போராட்டம் அல்ல, இந்துத்துவாவுக்கான போராட்டம்," என்றார்.
ஆளுநரை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே
முன்னதாக, மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை தேவேந்திர ஃபட்னாவிஸுடன் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஏக்நாத் ஷிண்டே. இதைத்தொடர்ந்து பேசிய அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பிற பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பட மூலாதாரம், @maha_governor
"என்னை முதல்வராக்க அவர்கள் எடுத்த முடிவு அவர்களின் பெருந்தன்மை. அவர்களுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இருந்தது, ஆனால் அவர்கள் என்னை முதலமைச்சராக்க முடிவு செய்தனர். இப்படியொரு செயலை யாரால் செய்ய முடியும்?" என்றார் ஏக்நாத் ஷிண்டே.
"பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் இருந்தாலும், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்கவில்லை. பாலாசாகேப்பின் சைனிக்கை (கட்சி ஊழியர்) மாநிலத்தின் முதல்வராக்கிய பிரதமர் மோதி, அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்களுக்கு எனது நன்றிகள்," என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
மகாராஷ்டிர முதல்வர் பதவி வகித்த உத்தவ் தாக்கரே, ஆட்சியில் நீடிக்க தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சிறிது நேரத்திலேயே அவர் ஜூன் 29 (புதன்கிழமை) தமது பதவியில் இருந்து விலகினார்.
ஆளும் கட்சியான சிவசேனையில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியில் பலரும் சேர்ந்த பிறகு உத்தவ் தாக்கரேவுக்கு 13 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் மீதான அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு முதலில் சொகுசுப் பேருந்துகளில் குஜராத்தின் சூரத்துக்குச் சென்றனர். பிறகு ஓர் வாடகை விமானத்தில் அசாம் மாநிலம் குவாஹத்திக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு தங்களுடைய பலத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன் இவர்கள் புதன்கிழமை மாலையில் கோவாவுக்கு வந்தனர்.
"தாக்கரேவுக்கு துரோகம் செய்யவில்லை"

பட மூலாதாரம், Getty Images
மறுபுறம் சிவசேனையைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், "நாங்கள் யாரும் உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் செய்யவில்லை. இன்னும் அவர் மீது அன்பும் மரியாதையும் இருக்கிறது. "சிவசேனையில் யாரும் தாக்கரே குடும்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல," என்று அவர் கூறியுள்ளனர்.
"உண்மையான சிவசேனை யார் என்பது கேள்வி அல்ல. எங்களிடம் இப்போது சட்டபூர்வ பெரும்பான்மை உள்ளது, எனவே எங்களுடையது தான் சட்டமன்ற கட்சி," என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவில் இருக்கும் தீபக் கேசர்கார் கூறினார்.
சிவசேனை கட்சியில் ஆளும் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சொந்த கட்சி எம்எல்ஏக்கள் திரும்பிய பிறகு அதிருப்தியாளர்கள் குழுவுடன் முன்னாள் முதல்வரான தேவேந்திர ஃபட்னாவிஸ் இரண்டு முறை ஆலோசனை நடத்தினார். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு அந்த எம்எல்ஏக்கள் குழுவினர் கொண்டு செல்லப்பட்டனர். ஆனாலும், சிவசேனை கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஆட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் தமது பங்கு ஒன்றுமில்லை என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறி வருகிறார்.
இரண்டு சந்திப்புகளை ஃபட்னாவிஸ் நடத்திய பிறகு அவரை சந்திப்பதற்காக குவாஹத்தியில் இருந்து வதோதராவுக்கு ஏக்நாத் ஷிண்டே அழைக்கப்பட்டார். அங்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் மட்டுமின்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் ஏக்நாத் ஷிண்டே சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், அவரையே அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக இருக்க பெரும்பான்மை பலத்தை பெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்