‘இந்தி எப்போதும் நமது தேசிய மொழிதான்’ – நடிகரின் ட்விட்டர் பதிவால் இணையத்தில் எழுந்த விவாதம்

சுதீப்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ச. ஆனந்தபிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தி தேசிய மொழி இல்லை எனில் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என நடிகர் சுதீப் கிச்சாவுக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்வீட் செய்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கன்னட மொழி திரைப்படமான 'கே.ஜி.எஃப்2' சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்திற்கு முன்பு வெளியான 'புஷ்பா', 'ஆர்.ஆர்.ஆர்.' படங்களும் பான் இந்தியா படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில், ஒரு திரைப்பட விழா ஒன்றில் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சுதீப் கலந்து கொண்டார். அதில் கன்னட திரைப்படம் ('கே.ஜி.எஃப்2') பான் இந்தியா திரைப்படமாக வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுதீப், 'பான் இந்தியா படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டதாக சொன்னீர்கள். ஒரு திருத்தம். இந்தி இனி தேசிய மொழி கிடையாது. பாலிவுட்டிலும் பான் - இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். அவர்கள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்கும் வெற்றி பெறுகிறோம்" என பேசி இருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இந்தியில் பதிவிடப்பட்டிருந்த அந்த ட்வீட்டில், 'அன்பு சகோதரரே, உங்கள் கூற்றுப்படி இந்தி தேசிய மொழி இல்லை எனில் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி எப்பொழுதும் நம்முடைய தாய் மொழி! தேசிய மொழியாக இருந்துள்ளது. எப்போதும் இருக்கும். ஜன கண மண!' என அதில் குறிப்பிட்டிருந்தார்.

அஜய் தேவ்கனின் இந்த ட்வீட்டுக்கு சுதீப் உடனே ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

'நான் எந்த அர்த்தத்தில் அந்த கருத்தை வெளியிட்டேனோ அது முற்றிலும் வேறு விதமாக உங்களை வந்தடைந்திருக்கிறது என கருதுகிறேன். இந்த கருத்தை எதற்காக நான் கூறினேன் என்பதை நேரில் உங்களை சந்திக்கும் போது நிச்சயம் விளக்குகிறேன். இது யாரையும் புண்படுத்தவோ, தூண்டி விடவோ, விவாதத்தை கிளப்பவோ கிடையாது. நான் ஏன் அதை செய்ய போகிறேன். நம் நாட்டின் ஒவ்வொரு மொழியையும் நான் விரும்புகிறேன். இதற்கு மேல் இதை விவாதமாக தொடர விரும்பவில்லை. நான் அங்கு வெளிப்படுத்திய கருத்தின் அர்த்தமே வேறு. உங்களுக்கு என்னுடைய அன்பு. விரைவில் உங்களை சந்திப்பேன் என நம்புகிறேன்' என சுதீப் தெரிவித்துள்ளார்.

அஜய் தேவ்கன்

பட மூலாதாரம், Getty Images

மேலும், 'அஜய்தேவ்கன் சார், நீங்கள் இந்தியில் போட்ட ட்வீட்டை நான் படித்து புரிந்து கொண்டேன். நாங்கள் இந்தியை மதித்து விரும்பி கற்று கொண்டதே இதற்கு காரணம் ஆகும். இதை நான் குற்றமாக சொல்லவில்லை, ஒருவேளை நான் உங்களுக்கான இந்த பதிலை கன்னடத்தில் ட்வீட் செய்திருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி இருக்கும் என ஆச்சரியப்படுகிறேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் இல்லையா?' எனவும் கேள்வி எழுப்பி உள்ளார் சுதீப்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

சுதீப்பின் இந்த பதிவுக்கு அஜய்தேவகன் பதில் கொடுத்துள்ளார். அதில், 'சுதீப், நீங்கள் என்னுடைய நண்பர். என்னுடைய தவறான புரிதலை விளக்கியதற்கு நன்றி. நான் எப்பொழுதும் அனைத்து மொழி சினிமாக்களையும் ஒன்றாகவே பார்க்கிறேன். நாங்கள் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம் அதுபோலவே, எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஒருவேளை, மொழிப்பெயர்ப்பில் ஏதேனும் விடுபட்டிருக்கலாம்' என ட்வீட் செய்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, இந்தி மொழி சர்ச்சை: கன்னட நடிகருடன் மோதிய பாலிவுட் நட்சத்திரம்

அஜய் தேவ்கனின் கருத்துக்கு பலரும் இணையத்தில் பல்வேறு விதமான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழணங்கு ஓவியத்தை தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை இணைப்பு மொழியாக ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து ஏ. ஆர். ரஹ்மானிடம் கேட்டபோது தமிழ்தான் இணைப்பு மொழி என்றும் தெரிவித்திருந்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :