புதுச்சேரி அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: யாருக்கு என்ன துறை?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கடந்த மாதம் 27ஆம் தேதி அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து இன்று முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
குறிப்பாக அமைச்சர் பதவியேற்ற பிறகும் கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்த நிலையில், இன்று அமைச்சர் இலாகா இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி அமைச்சர்களுக்கான துறைகளை குறித்த முழு விவரம் புதுச்சேரி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய அமைச்சரவை பட்டியல், இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு புதுச்சேரி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு 13 முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவரை தொடர்ந்து 5 அமைச்சர்களுக்கும் தலா 6 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி முதல்வர் மற்றும் 5 அமைச்சர்களின் துறைகள் பின்வருமாறு:
முதலமைச்சர் என்.ரங்கசாமி
ரகசியங்கள் மற்றும் அமைச்சரவை துறை
கூட்டுறவுத் துறை
வருவாய் துறை,
சுகாதாரத் துறை
துறைமுகம்,
உள்ளாட்சி துறை,
இந்து அறநிலையத்துறை,
குடும்பநலன்
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுசூழல்.
நகர் ஊரமைப்பு.
தகவல் மற்றும் விளம்பரம்
வக்ஃபு வாரியம்
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத பிற விவகாரங்கள்
அமைச்சர் நமச்சிவாயம்
உள்துறை,
மின்சாரம்,
கல்வி,
விளையாட்டு,
தொழில் மற்றும் வர்த்தகம்,
முன்னாள் படைவீரர் நலத்துறை.
அமைச்சர் லட்சுமி நாராயணன்
பொதுப்பணித்துறை,
மீன்வளம்,
சுற்றுலா,
சட்டத்துறை,
தகவல் தொழில்நுட்பம்,
காகிதம் மற்றும் பாடநூல்

அமைச்சர் ஜெயக்குமார்
வேளாண் துறை,
கால்நடைத் துறை
மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு,
சமூக நலத்துறை,
வனத்துறை,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.
அமைச்சர் சந்திர பிரியங்கா
ஆதி திராவிடர் நலத்துறை,
போக்குவரத்து,
வீட்டுவசதி வாரியம்,
தொழிலாளர் நலத்துறை,
கலை மற்றும் பண்பாட்டுத்துறை
பொருளாதரம் மற்றும் புள்ளியியல்
அமைச்சர் சாய் சரவணகுமார்
குடிமைப் பொருள்,
தீயணைப்பு,
சமூக மேம்பாடு,
சிறுபான்மையினர்,
கிராம வளர்ச்சித்துறை,
ஊரக வளர்ச்சித் துறை
பிற செய்திகள்:
- யார் இந்த அண்ணா? தமிழ்நாட்டு அரசியலில் அவர் ஏன் இவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறார்?
- நீலகிரி ஏழை மக்களுக்கு உதவும் 'ஆட்டோ ஆம்புலன்ஸ்' - மலையில் மலர்ந்த மனிதநேயம்
- பழங்கால மெசபடோமிய நகரான பாபிலோன் வரலாறு உங்களுக்கு தெரியுமா?
- 'அமித் ஷா வருகிறார்; கதவுகளை மூடி வையுங்கள்' - கடிதம் எழுதிய குஜராத் காவல்துறை
- இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, சலுகைகள் ரத்து - உ.பி. அரசு திட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












