சர்க்கஸ் நடத்துகிறாரா நிர்மலா சீதாராமன்? கடுமையாக சாடிய எதிர்கட்சிகள் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் சிறுசேமிப்பு வட்டி சதவீத குறைப்பு அறிவிப்பு தொடர்பான உத்தரவு வெளியிடப்பட்ட சில மணி நேரத்திலேயே அது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அவசரகதி நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமூக ஊடகங்களிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்தியாவில் ஏழை மற்றும் எளிய மக்கள் தங்கள் பணத்தைச் சேமித்து வைக்கும் அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை நிர்ணயிக்கும்.
சேமிப்பு டெபாசிட், ஓராண்டு முதல் ஐந்து ஆண்டு கால டெபாசிட், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள், மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு, தேசிய சேமிப்புச் சான்றிதழ், பிபிஎஃப், கிசான் விகாஸ் பத்திரம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுக்கு நிர்ணயித்து, அறிவிப்பை வெளியிட்டது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரத் துறை.
அந்த அறிவிப்பில் எல்லா திட்டங்களுக்கும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு வருட கால சேமிப்புத் திட்டத்துக்கு 1.1%, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கு 0.9%, மாதாந்திர வருமான கணக்குக்கு 0.9%, தேசிய சேமிப்புப் பத்திரம், 0.9%, பிபிஎஃப் திட்டங்களுக்கு 0.7% என வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை இணை இயக்குநர் ராஜேஷ் பன்வார் கையெழுத்திட்டு இருக்கிறார்.
இந்த செய்தி, அச்சேமிப்புத் திட்டங்களை நம்பி இருப்பவர்களுக்கு மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்நிலையில், "சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், 2020 - 21 நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் எவ்வளவு இருந்ததோ அதே வட்டி விகிதங்கள் தொடரும். தற்போது வட்டி விகிதம் தொடர்பாக வெளியான உத்தரவு திரும்பப் பெறப்படும்" என இன்று காலை 7.54 மணியளவில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
31.03.2021 வரையான அரசின் வட்டி விகிதங்கள் மற்றும் புதிய வட்டி விகிதங்களை இந்த இணைப்பில் காணலாம்: https://dea.gov.in/budgetdivision/interest-rates
எனவே சேமிப்பு டெபாசிட் திட்டங்கள் 4.0%
ஓராண்டு கால சேமிப்பு டெபாசிட் 5.5%
இரண்டு ஆண்டு கால சேமிப்பு டெபாசிட் 5.5%
மூன்று ஆண்டு கால சேமிப்பு டெபாசிட் 5.5%
ஐந்து ஆண்டு கால சேமிப்பு டெபாசிட் 6.7%
ஐந்து ஆண்டு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் 5.8%
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள் 7.4%
மாதாந்திர வருமான கணக்கு 6.6%
தேசிய சேமிப்புப் பத்திரம் 6.8%
பிபிஎஃப் திட்டம் 7.1%
கிசான் விகாஸ் பத்திரம் (124 மாத காலத்தில் முதிர்ச்சி) 6.9%
செல்வமகள் சேமிப்புத் திட்டம் 7.6% என்றே தொடரும்.
கடந்த மூன்று காலாண்டுகளில், சிறுசேமிப்பு வட்டி விகித குறைப்பு தொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட முதலாவது அறிவிப்பாக இது பார்க்கப்பட்டது. ஆனால், உத்தரவு வெளிவந்த ஒரே நாள் இரவுக்குள்ளாக அது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை ஏதோ தவறு நடந்ததாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினாலும், எதிர்கட்சிகள் இந்த செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எதிர்கட்சிகள் எதிர்வினை
மேலும், இரவில் வெளிவந்த உத்தரவு என்பதை ஆங்கிலத்தில் குறிக்கும் ஓவர்நைட் என்பதற்கு பதிலாக, ஓவர்சைட் என தட்டச்சு தவறால் மேற்பார்வை என பொருள்படும் வகையில் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட வார்த்தையும் ட்விட்டர் பயனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த செயல்பாடுகளை விமர்சித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரக் ஓ பிரெய்ன், "மீண்டும் ஒருமுறை தர்மசங்கடமாகன நிலைமை. ஏனென்றால் தேர்தல் கூட்டங்களில் டிரக்குகளில் இருந்தவாறு பூமாரி பொழிவதிலும் போலி வாக்குறுதிகளை தந்து ஏப்ரல் தின முட்டாள் ஜோக்குகளை செய்வதிலும் மோ ஷா (மோடி - ஷா) பிஸி ஆக இருக்கிறார்கள்," என கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "உண்மையிலேயே சிறுசேமிப்பு வட்டி சதவீத குறைப்பு அறிவிப்பு தவறாக நடந்ததா இல்லை தேர்தலை கருத்தில் கொண்டு அந்த புரிதல் பின்னர் வந்ததா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, "மிகப்பெரிய ஏப்ரல் முட்டாள்கள் தின ஜோக் எது?" - அது சிறுசேமிப்பு வட்டி விகித குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது ஓவர்சைட் நடவடிக்கையா அல்லது இந்த நாட்டின் நிதியமைச்சராக இருப்பது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தானா என்பதுதான். அந்த உத்தரவை திரும்பப் பெற்றது ஓவர்சைட் நிர்மலா சீதாராமனா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜிவாலா, "மதிப்புக்குரிய நிதியமைச்சரே, நீங்கள் கோடிக்கணக்கானோரை பாதிக்கும் வகையிலான முடிவு தவறாக எடுக்கப்படும்போதே, நாட்டின் பொருளாதார நிலையை மக்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நிதியமைச்சராக அந்த பதவியில் தொடரும் உரிமையை நீங்கள் இழந்து விட்டீர்கள். நீங்கள் அரசு நடத்துகிறீர்களா, சர்க்கஸ் நடத்துகிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் முடிந்தவுடன் ஏற்கெனவே பெட்ரோல்-டீசல் விலை மூலம் சுரண்டப்பட்டது. வட்டி குறைப்பை செய்வதன் மூலம் நடுத்தர வகுப்பினரின் நலன்கள் பறிக்கப்படுகிறது. பொய்கள் மூலம் ஏற்கெனவே இந்த அரசு மக்களிடம் இருந்து ஏராளமானவற்றை சுருட்டியிருக்கிறது," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
பிற செய்திகள்:
- ரஜினிக்கு தாதா சாஹிப் பால்கே விருது: இந்திய அரசு அறிவிப்பு
- புதுச்சேரியில் பரிதவிக்கும் திருநங்கைகள்: கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்
- கோவைக்கு வந்த யோகி ஆதித்யநாத்: கடைகள் மீது கல்வீச்சு, என்ன நடந்தது?
- ஒரு துளி மனித ரத்தம் கலந்து தயாரிக்கப்பட்ட சாத்தான் ஷூ - ஒரு வணிகப் பரபரப்பு
- வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: