அதிமுக தேர்தல் அறிக்கை 2021: `வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை`

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளது அதிமுக. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் அதில் அடங்கும்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய வாக்குறுதிகள்:
- அனைவருக்கும் வீடு
- குலவிளக்கு திட்டம்,
- பேருந்தில் மகளிருக்கு சலுகை
- ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
- விலையில்லா ஆறு கேஸ் சிலிண்டர்
- அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் சிலிண்டர்
- கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி
- வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி
- விலையில்லா அரசு கேபிள்
- தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம்
- எழுவர் விடுதலை
- தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை
- காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு
- நம்மாழ்வர் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம்
- பெட்ரோல் டீசல் விலை குறைப்பு
- 100 நாட்கள் வேலை 150 நாட்களாக உயர்வு
- மதுமான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்
- சிஏஏ-ஐ கைவிட வலியுறுத்தல்
- கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தல்
- அம்மா வாஷிங் மெஷின் திட்டம்
- மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி
- கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன்
- வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை
- மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்
- அனைத்து மினி ஐடி பார்க்
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 2500ஆக உயர்த்தப்படும்
- நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
- கைத்தறிக்கு GST வரி விலக்கு
- பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக, த.மா.க போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தினருக்கு 196 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை
- தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி - வெற்றி யாருக்கு?
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








