உசிலம்பட்டியில் 7 நாட்களே ஆன குழந்தை கொலை - பாட்டி கைது

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதிக்கு பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் குழந்தையின் பாட்டி நாகம்மாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உடல்நிலை சரியில்லை என கூறி இந்த குழந்தையை வியாழக்கிழமை நள்ளிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அதன் பெற்றோர் கொண்டு வந்தாக கூறப்படுகிறது.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

இந்த நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதே சமயம், குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததை கண்ட மருத்துவர், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மருத்துவமனை உள்ள புறக்காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த காவலர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி உடல் கூராய்விற்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், பெண் குழந்தை இறப்பு குறித்து உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பெண் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தை உள்ள சூழலில் முகத்தில் காயங்களுடன் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில், குழந்தையின் பாட்டி நாகம்மாளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் குழந்தைக்கு பால் ஆகாரங்கள் கொடுக்காமல் இருந்து வந்ததாகவும் குழந்தை மீது தலையணையை அழுத்தி மூச்சுத் திணறடித்து அதை கொலை செய்துள்ளதாக நாகம்மாள் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: