டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி

பட மூலாதாரம், Getty Images
குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி போலீசார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு இன்று (ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை) காலை தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தன. இதையடுத்து, போராட்டக்காரர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதில் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த கைகலப்பில் 86 அதிகாரிகள் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம், போராட்டக்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
சுமார் 6-7 இடங்களில் இருந்து தனித்தனியே புறப்பட்ட டிராக்டர் பேரணிகளில் ஒன்று பகல் சுமார் 12 மணி அளவில் மத்திய டெல்லியின் ஐ.டி.ஓ. பகுதி வரையும், அடுத்து மதியம் இரண்டு மணியளவில் செங்கோட்டை பகுதியையும் அடைந்தன.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், டிக்ரி எல்லையில் இருந்து புறப்பட்ட பேரணியின் நீளம் மட்டும் 30 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் என்பதாக விவசாயிகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தியாளர் கூறினார்.
இந்த நிலையில், விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணியை முடித்துகொள்வதாகவும், இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
"அனைத்து பங்கேற்பாளர்களும் உடனடியாக தங்களது முந்தைய போராட்ட களத்துக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம். எனினும், விவசாயிகளின் போராட்டம் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெறும். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்" என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
முன்னதாக, டெல்லியில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் திரும்பும் இயல்புநிலை

பட மூலாதாரம், ANI
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான விவசாயிகள் தாங்களாக முந்தைய போராட்ட களத்திற்கு சென்றுவிட்ட நிலையில், சில இடங்களில் காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, டெல்லியில் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்த சில சாலைகளில் மீண்டும் பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மேலதிக பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் டெல்லி முழுவதும் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, கிழக்கு டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையில் எட்டு பேருந்துகள் மற்றும் 17 வாகனங்கள் சேதமானது தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர் ஒருவர் பலி

டெல்லி ஐ.டி.ஓ. பகுதியில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் கீர்த்தி துபே தெரிவிக்கிறார். எனினும், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து எதுவும் தெரியவில்லை.
இந்த நிலையில், போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதை உறுதிசெய்த மற்றொரு பிபிசி செய்தியாளரான விகாஸ் பாண்டே, அந்த விவசாயியின் பெயர் நவ்நீத் சிங் என்றும் அவர் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுவதாக தெரிவிக்கிறார்.

"உயிரிழந்தவரின் உடலை மற்ற விவசாயிகள் துணியை கொண்டு மூடி வைத்துள்ளனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து இவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும், இதை உறுதிப்படுத்த முடியவில்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஹரியாணாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
டெல்லியை போன்று அருகிலுள்ள ஹரியாணாவில் வன்முறை எதுவும் நிகழாமல் இருக்க, சட்டம் மற்றும் ஒழுங்கை மிகுந்த எச்சரிக்கையுடன் உறுதிசெய்யுமாறு அதன் முதல்வர் மனோஹர் லால் கட்டார் காவல்துறை உயரதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போலிச் செய்திகளின் பரவலை தடுப்பதற்காக ஹரியாணா மாநிலத்திலுள்ள சோனிபட், பல்வால் மற்றும் ஜஜ்ஜார் மாவட்டங்களில் நாளை மாலை 5 மணி வரை இணையம் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லி காவல்துறை வேண்டுகோள்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
போராட்டக்காரர்கள் அமைதியாக டெல்லியில் இருந்து எல்லைப்பகுதிக்கு திரும்ப வேண்டுமென்று டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
"போராட்டக்காரர்கள் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் காவல்துறையை சேர்ந்த பலர் காயமடைந்தனர்; பொது சொத்துக்களும் சேதமடைந்தன. தேவைப்பட்ட சூழ்நிலையில் மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்பட்டனர். ஏற்கனவே, திட்டமிடப்பட்ட சாலைகள் வழியாக திரும்பி அமைதியை காக்குமாறு போராட்டக்காரர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று டெல்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியான ஈஷ் சிங்கால் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள டெல்லியின் காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா, "டிராக்டர் பேரணிக்கான நேரம் மற்றும் வழிகள் பல சுற்று கூட்டங்களுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. ஆனால் விவசாயிகள் டிராக்டர்களை மாற்று வழித்தடங்களிலும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பும் பேரணியை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையின் காரணமாக காவல்துறையினர் பலர் காயமடைந்தனர்" என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்த வன்முறையால் பொது சொத்துக்களும் சேதமடைந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் வன்முறையில் ஈடுபட வேண்டாம், அமைதியை நிலைநாட்டவும், திட்டமிடப்பட்ட சாலைகள் வழியாகவும் திரும்ப நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"எல்லைக்கு திரும்புக"
டெல்லியில் நிலவும் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சிலர் வன்முறையில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது விவசாயிகளின் அமைதியான போராட்டத்தால் உருவான நல்லெணத்தை சீர்குலைக்கும். வன்முறை சம்பவங்களிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் டிராக்டர் பேரணியை நிறுத்தியுள்ளனர். எனவே, நான் அனைத்து உண்மையான விவசாயிகளையும் டெல்லியிலிருந்து கிளம்பி எல்லைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போக்குவரத்து துண்டிப்பு - இணைய சேவை முடக்கம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மேற்கொண்ட டிராக்டர் பேரணி சில இடங்களில் வன்முறையாக உருவெடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் பெரும்பாலான பிரதான சாலைகள் மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீவிரமடைந்து வரும் போராட்டத்தை கருத்திற்கொண்டு டெல்லியின் முக்கிய பொதுப் போக்குவரத்தான மெட்ரோ ரயில் சேவையும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கிரே நிற வழித்தடம் முழுவதும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில் பதற்றம் நிலவும் பல்வேறு இடங்களில் இன்று நள்ளிரவு வரை இணைய சேவையை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுளளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

"சமூக விரோதிகள் ஊடுருவினர்"
"முன்னெப்போதுமில்லாத வகையில் இன்று நடைபெற்ற விவசாயிகளின் குடியரசு தின பேரணியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறோம். எனினும், இந்த பேரணியின்போது நிகழ்ந்த ஏற்றுக்கொள்ளமுடியாத, விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வருத்தமும் கண்டனமும் தெரிவிக்கிறோம்" என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"எங்களது அனைத்து முயற்சிகளையும் மீறி சில அமைப்புகளும், தனிநபர்களும் திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி பேரணியை முன்னெடுத்ததுடன், கண்டனத்துக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அமைதியாக நடந்து வந்த பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர். அமைதியே எங்களது மிகப் பெரிய பலம் என்றும் அதை மீறும் எந்தவொரு செயலும் போராட்டத்தை பாதிக்கும் என்பதையும் நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்" என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
டெல்லி விவசாயி மரணத்திற்கு தமிழக விவசாயிகள் கண்டனம்

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளை கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், சென்னை-கன்னியாகுமாரி நெடுஞ்சாலையை டிராக்டர் வண்டிகளை நிறுத்தி சுமார் மூன்று மணிநேரம் மறித்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை திருச்சி காவல்துறையினர் கைது செய்து உத்தமர்காந்தி சாலையில் உள்ள மண்டபத்தில் வைத்துள்ளனர்.
பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு, டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளது கண்டனத்திற்கு உரியது என்றார். ''இந்தியா ஒரு விவசய நாடு. குடியரசு தினத்தன்று இத்தனை ஆயிரம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது எங்களின் வலி மற்றும் வேதனையை காட்டுகிறது. புதிய வேளாண் சட்டத்தை உடனடியாக அரசாங்கம் பின்வாங்கவேண்டும். டெல்லியில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார் என்பது வருத்தப்படவைக்கிறது. மேலும் இதுபோன்ற இறப்புகள் நடக்கக்கூடாது,'' என்றார் அய்யாக்கண்ணு.

பட மூலாதாரம், PTI
"போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி"
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் விவசாயிகளின் டிராக்டர் பேரணி விவசாய சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித்தொடர்பாளரான ராகேஷ் திக்காயத், "எங்களது போராட்டத்தில் குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்பவர்களை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். அரசியல் கட்சிகளை சேர்ந்த அவர்கள் போராட்டத்தை திசைதிருப்பி அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர்" என்று கூறியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
செங்கோட்டையை அடைந்த பேரணி

பட மூலாதாரம், ANI
டெல்லி காவல்துறையின் தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு முன்னேறிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி, குடியரசு தின அணிவகுப்பு நிறைவுறும் செங்கோட்டையை அடைந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றான செங்கோட்டைக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்கும் வகையில், அதன் வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தங்களது வசமிருந்த கொடியை அங்குள்ள கம்பத்தில் ஏற்றி அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

பட மூலாதாரம், ANI
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வாகனங்கள் செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில்தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கைகலப்பு

பட மூலாதாரம், ANI
ஐ.டி.ஓ. பகுதியில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு தரப்பை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் இருந்தவர்கள் ஒரு டெல்லி போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றை அடித்து உடைத்து, கவிழ்க்க முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதே ஐ.டி.ஓ. பகுதியில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சிலர் வேண்டுமென்றே காவல்துறையினரை அச்சுறுத்தும் நோக்கில் அவர்களை நோக்கி டிராக்டர்களை ஓட்டியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
வெவ்வேறு இடங்களில் இருந்து புறப்பட்ட பல்வேறு குழுக்களில் இரண்டு குழுக்கள் மட்டும் "பேரணியை ஒப்புக்கொண்டபடி வெளிப்புற சுற்றுச் சாலையில் மட்டும் நடத்துவோம். குடியரசு தின அணிவகுப்புக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம். பேரணி முடிந்த பிறகு எல்லைப் பகுதிக்கே திரும்பிச் செல்வோம்" என்று பிபிசியிடம் தெரிவித்தன.
இந்தப் பதற்ற நிலை காரணமாக, டெல்லியில் பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

பட மூலாதாரம், PTI
ஆனால், இந்தப் பேரணியை நாங்கோலி - நஜஃப்கர் சந்திப்பில் பேரணியை விவசாயிகளே நிறுத்திவிட்டதாக சொல்கிறார் பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா.
விவசாயிகள் கையில் தேசியக் கொடியோடு வந்திருக்கிறார்கள். பேரணியில் மோதல் ஏதும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
கண்ணீர் புகை குண்டு வீச்சு
சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் மீது சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் அருகே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக சொல்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை. இதற்கான ஒரு காணொளியையும் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறது ஏ.என்.ஐ.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
அதே போல காசிபூசிர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது போலீஸ். டெல்லி - நொய்டா, டெல்லி - காசியாபாத் சாலைகளில் அக்ஷரதாம் கோயில் அருகே போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் படங்கள் வெளியாகியுள்ளன.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு
இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக டெல்லி எல்லைப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை மறித்துப் போராடி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தில் இந்தியத் தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
முதலில் இந்தப் பேரணியைத் தவிர்க்க நினைத்தது அரசு. ஆனால், சில நாள்களுக்கு முன்பு டெல்லி போலீசார் இந்தப் பேரணிக்கு அனுமதி அளித்தனர். எனினும், டெல்லி குடியரசு தின அணி வகுப்பு முடிந்த பிறகு 10 மணிக்கு மேல்தான் இந்தப் பேரணி தொடங்க வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர்.
சிங்கு, டிக்ரி உள்ளிட்ட விவசாயப் போராட்டங்கள் பெருமளவில் நடக்கும் எல்லைப் பகுதிகளில் இருந்துதான் இந்த டிராக்டர்கள் டெல்லிக்குள் வரவேண்டும். ஆனால், இந்த எல்லைப் பகுதிகளில் போலீசார் பெரிய தடுப்பரண்களை உருவாக்கி வைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
சாலையின் நடுவில் வைக்கும் காங்கிரீட் பிளாக்குகளையும், மண் ஏற்றிய டாராஸ் போன்ற லாரிகளையும் சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்தனர்.
"ஜேசிபி போன்ற மண் வாரி இயந்திரங்களும், பல வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டன" என்கிறார் டிக்ரி எல்லையில் இருக்கும் பிபிசி ஹிந்தி சேவையின் பகுதி நேர செய்தியாளர் சமீராத்மஜ் மிஸ்ரா.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
கிரேன்கள் உதவியோடு தடுப்பரண்கள் உருவாக்கப்பட்டன.
சாலைகளில் பயன்படுத்தும் பேரிகேடுகளும் தடுப்பரண்களில் பயன்படுத்தப்பட்டன.
தடுப்பரண்கள் உடைத்துக் கிளம்பிய பேரணி

பட மூலாதாரம், Getty Images
ஆனால், குறிப்பிடப்பட்ட காலை 10 மணிக்கு முன்னதாகவே விவசாயிகள் தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு தங்கள் டிராக்டர்களோடு எல்லையைக் கடந்து டெல்லிக்குள் நுழைந்தனர்.
விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்தவுள்ள டிராக்டர் பேரணி டெல்லியின் தான்சா எல்லைப் பகுதியில் தொடங்கியது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
டிக்ரி எல்லைப் பகுதியில் போலீஸ் தடுப்பரண்களை விவசாயிகள் உடைத்தெறிந்தனர்.
30 கிலோ மீட்டருக்கு மேல் நீளும் பேரணி
டிக்ரி எல்லைப் பகுதியில் இருக்கும் பிபிசி இந்தி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா அந்த இடத்தை பேரணி கடக்கத் தொடங்கி அரை மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது என்கிறார். இந்தப் பேரணி எவ்வளவு தூரம் நீள்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை என்று கூறும் அவர், விவசாயிகள் அது 30 கிலோ மீட்டருக்கு மேல் நீளமாக இருக்கும் என்று தெரிவித்ததாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Reuters
சாலையின் ஒரு பக்கத்தில் டிராக்டர்கள் அணி வகுப்பதாகவும், மறுபக்கத்தில் விவசாயிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இது தவிரவும், டிராக்டர்களில் நிறைய விவசாயிகள் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன டிராக்டர் பேரணியில் இருந்து வரும் படங்கள்.
அமைதிகாக்க சொல்லும் விவசாய சங்கம்
முன்னதாக "இந்தப் பேரணியின்போது விவசாயிகள் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும். இது போராட்டத்தின் கடைசி நாளல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். விஷமிகள் ஊடுருவி பேரணிக்கு கெட்ட பேரை ஏற்படுத்தலாம். அதைப்போன்ற சக்திகளை அடையாளம் கண்டு விலக்கி வைக்கவேண்டும். அமைதியைக் கடைபிடிக்கவேண்டும்" என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிசான் ஏக்தா மஞ்ச் என்ற விவசாயிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
(விவசாயிகள் பேரணி தொடர்பான தொடர்ந்த செய்தி ஓட்டங்களை இதே பக்கத்தில் சேர்த்து வருகிறோம். தொடர்ந்து இந்த செய்தியை பின் தொடர விரும்பும் நேயர்கள் இந்தப் பக்கத்தில் இணைந்திருக்கலாம்)
பிற செய்திகள்:
- திறந்து ஒன்றரை மாதத்தில் உடைந்த தென்பெண்ணையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை
- ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா?
- வியட்நாம் போரில் அமெரிக்காவின் 'ஏஜென்ட் ஆரஞ்ச்' தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை
- துப்பாக்கி சுடுதல்: ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபட்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








