இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வட்டி விகிதம் என்றால் என்ன? இதனால் நமக்கு என்ன பயன்? RBI

நிர்மலா சீதாராமன், சக்தி காந்ததாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிர்மலா சீதாராமன், சக்தி காந்ததாஸ்

இன்று (டிசம்பர் 4-ம் தேதி) இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு, ரெப்போ ரேட் விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்து இருக்கிறது. எனவே உள்ளபடி ரெப்போ ரேட் விகிதம் 4.0 சதவீதமாகவும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் வட்டி 3.35 சதவீதமாகவும் தொடரும் என ஆர்பிஐ ஆளுநர் கூறியிருக்கிறார்.

குறைந்தபட்சமாக, இந்த நிதி ஆண்டின் இறுதி வரை அல்லது அடுத்த ஆண்டு தொடக்கம் வரையாவது இதே ரெப்போ விகிதத்தைத் தொடர்வதென ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மொத்த உள்நாட்டு உற்பத்தி

அடுத்த (2020 - 21) நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1% வளர்ச்சி காணலாம், நான்காவது காலாண்டில் 0.7% வளர்ச்சி காணலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டு இருக்கிறார். 2020 - 21 நிதி ஆண்டு முழுமைக்குமான உண்மையான ஜிடிபி மைனஸ் 7.5 சதவீதமாக சுருங்கலாம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ரெப்போ ரேட் என்றால் என்ன?

இந்தியாவில் இருக்கும் வணிக வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்குச் செலுத்தும் வட்டி தான் ரெப்போ ரேட்.

ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்றால் என்ன?

ரிசர்வ் வங்கி இலச்சினை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரிசர்வ் வங்கி இலச்சினை.

இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடம் இருந்து பெறும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி தான் ரிவர்ஸ் ரெப்போ ரேட்.

ரெப்போ ரேட் மாறினால் நமக்கு என்ன?

பொதுவாக ரிசர்வ் வங்கி தன் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால், நாம் வங்கிகளில் வாங்கும் கடன்களின் வட்டி விகிதங்கள் குறையும். ஏற்கனவே வாங்கி இருக்கும் கடன்களுக்கு நாம் செலுத்தும் வட்டி குறையும். அதோடு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குக்கான வட்டி விகிதங்களும் குறையும்.

இதுவே ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி அதிகரித்தால், வங்கிகளில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்கும், அதே போல, ஏற்கனவே நாம் வாங்கி இருக்கும் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம்.

மற்ற நாடுகளில் வட்டி விகிதங்கள்

இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐயின் ரெப்போ வட்டி 4 சதவீதமாக இருக்கிறது.

சில நாடுகள் இந்த வட்டி விகிதத்தை பாலிசி ரேட் என்று அழைக்கிறார்கள்.

டிரேடிங் எகனாமிக்ஸ் என்கிற வலைதளத்தில் காணப்படும் தகவலின்படி

ஜப்பானின் பாலிசி ரேட் -0.1%

பிரிட்டனின் பாலிசி ரேட் 0.1%

அமெரிக்காவின் பாலிசி ரேட் 0.25%

ரஷ்யாவின் பாலிசி ரேட் 4.25% ஆக இருக்கின்றன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :