புரெவி புயல்: வலுவிழந்தாலும் ஓயாமல் பெய்யும் கன மழை - என்ன நடக்கிறது?

சென்னை வெள்ளம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து, நேற்று (வியாழக்கிழமை) மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இதைத்தொடர்ந்து, தென்மேற்கு திசையில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் இருந்து தென்மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாம்பனிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த சில மணிநேரங்களில் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடிக்கு இடைப்பட்ட பகுதியை கடக்கும்போது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என்றும் கணித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் வலுவிழந்தாலும், தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிக முதல் அதீத கன மழை இருக்கும் என்றும், வட தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான இடங்களில் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கன மழை பொழிந்து வருகிறது. மேலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

விமான நிலையம் மூடல்

புயல், மழை காரணமாக மதுரை விமான நிலையம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) காலை முதல் பகல் 12 மணி வரை மூடப்படுவதாகவும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே பயணிகள் விமான நிலையம் வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதே போல் புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் சென்னை மழை

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நிவர் புயலுக்கு பிறகு மீண்டும் கனமழையை எதிர்கொண்டு வரும் சென்னை மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் தத்தளிக்க தொடங்கியுள்ளதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதால் அதில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

குறிப்பாக, ட்விட்டரில் #chennairains என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி பலரும் தங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளின் நிலையை காணொளியாகவும், புகைப்படமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை முகப்பேர் பகுதியில் கனமழை பொழிந்து வருவதாக ஹரிஷ் என்ற பயனர் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அதேபோன்று, சென்னை கோயம்பேடு சந்தையில் கனமழை பொழிந்ததாக ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் பொழிந்த கனமழையில் அங்குள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை ட்விட்டர் பயனர் ஒருவர் காணொளி மூலம் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இதேபோன்று பலரும் சென்னையில் பொழிந்து வரும் மழை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

X பதிவை கடந்து செல்ல, 5

X பதிவின் முடிவு, 5

X பதிவை கடந்து செல்ல, 6

X பதிவின் முடிவு, 6

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :