நிவர் புயல் - வெறிச்சோடிய நகரங்கள் - கள புகைப்படங்களின் தொகுப்பு

நிவர் புயல் வியாழக்கிழமை அதிகாலையில் கரையை கடக்கும் நிலையில், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களின் முக்கிய சாலைகள் புதன்கிழமை பிற்பகலுக்குப் பிறகு வெறிச்சோடிக் காணப்பட்டன. கடலோர பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய நாளில் பதிவான களத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

புதுச்சேரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதுச்சேரி கடல் சீற்றத்தை நடைமேடையில் இருந்தவாறு பார்க்கும் உள்ளூர்வாசி
புதுச்சேரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதுச்சேரியில் இயல்புநிலையை முடக்கிய நிவர் புயலுக்கு முந்தைய தாக்கம்
புதுச்சேரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதுச்சேரியில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்கும் கடல் பகுதி
புதுச்சேரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதுச்சேரியில் கன மழைக்கு முன்பாக முடங்கிய இயல்பு வாழ்க்கையால் மூடப்பட்டிருக்கும் கடை வீதி
புதுச்சேரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதுச்சேரி தற்காலிக நிவாரண மாகமாக மாற்றப்பட்ட பள்ளியில் உடைமைகளுடன் காத்திருக்கும் மூதாட்டி
புதுச்சேரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதுச்சேரி நிவாரண முகாமில் உணவு உட்கொள்ளும் உள்ளூர்வாசிகள்
சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் புதன்கிழமை கன மழைக்கு முன்பாக சாலைகளில் நோக்கி திரும்பும் பொதுமக்கள்
புதுச்சேரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் மழை காரணமாக கரைப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டுள்ள மீனவ படகுகள்.
இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 58 கி.மீ தூரத்தில் உள்ள பெருவலா கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்
சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் கடல் சீற்றத்துக்கு நடுவே இளைஞர்கள்
கோவளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையை அடுத்த கோவளத்தில் கரைக்கு அருகே கடல் சீற்ற அலையில் துள்ளிக் குதிக்கும் உள்ளூர் இளைஞர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :