பாபர் மசூதி தீர்ப்பு: நரேந்திர மோதியும் அமித் ஷாவும் மெளனம் காப்பது ஏன்?

பாபர் மசூதி தீர்ப்பு குறித்து நரேந்திர மோதியும் அமித் ஷாவும் மெளனம் காப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அபூர்வா கிருஷ்ணா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்த நாட்கள் பல கடந்தபோதும், அது தொடர்பான கருத்துகளை இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதுவரை வெளியிடவில்லை.

ஆனால், தீர்ப்பு வெளிவந்த 2020, செப்டம்பர் 30ஆம் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வாழ்த்துச் செய்தியை பகிர்ந்திருந்தார்.

அது.. பிரமோஸ் சூப்பர்சானிக் க்ரூயிஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கானது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இந்த டிவீட் செய்த அதே நேரத்தில் பிரதமர் மற்றொரு டிவீட்டையும் வெளியிட்டார். அதில் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் கூட்டத்தில் காணொளி மூலமாக கலந்து கொண்டதாகவும், கோயில் தொடர்பான விரிவான அம்சங்கள் பற்றி விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும் ஷீதல் பாலோடியா என்ற அதிக ஆர்வமுள்ள ஒரு பயனர், இந்த டிவீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, பகவத்கீதையின் 'யதா யதாஹி தர்மஸ்ய' என்ற ஸ்லோகத்துடன் கூடவே, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களின் புகைப்படங்களையும் அதில் வெளிட்டார்.

பிரதமரின் டிவீட்டை திறந்தவுடனேயே, இந்த புகைப்படம் தான் நமது கவனத்தை ஈர்க்கிறது.

Presentational grey line --
Presentational grey line --

பிரதமர் மோதியை போலவே, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிரமோஸ் ஏவுகணை சோதனைக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சோம்நாத் அறக்கட்டளை குறித்த பிரதமரின் டிவீட்டை அவர் மறு டிவீட் செய்திருந்தார். காந்தி நகரில் உள்ள 100 குயவர் குடும்பங்களுக்கு, மின்சாரம் மூலம் இயங்கும் சக்கரங்கள் விநியோக விழாவின் படங்களையும் வெளியிட்டார்.

பாபர் மசூதி தீர்ப்பு குறித்து அவரும் அமைதியாகவே இருந்தார்.

இந்த மெளனத்தின் பொருள் என்ன என்ற கேள்வி பலருடைய மனதிலும் தோன்றியிருக்கக்கூடும்.

கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி ராமர் கோவில் குறித்து வெளியான தீர்ப்பின்போதும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதேபோல் அமைதியாக இருந்தார்களா என்ற யோசனையும் வந்திருக்கும்.

இந்த இரண்டாவது கேள்விக்கான பதில் தெளிவாக உள்ளது.

பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அயோத்தியின் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

பிரதமர் டிவீட் செய்ததோடு மட்டுமல்லாமல், தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையும் நிகழ்த்தினார்.

"இந்த தீர்ப்பை, ஒருவருடைய தோல்வியாகவோ வெற்றியாகவோ பார்க்கக்கூடாது. இது ராமர் பக்தி அல்லது ரஹீம் பக்தி என்று எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் தேச பக்தியின் உணர்வை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. அமைதியையும், நல்லிணக்கத்தையும் , ஒற்றுமையையும் பேணுமாறு நான் நாட்டு மக்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அப்போது இவ்வாறே டிவீட் செய்தார்.

"ஸ்ரீ ராம ஜென்மபூமி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பை சாதாரண முறையில் அமைதியுடன் ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நல்லிணக்கம் நிறைந்த 'ஒரு இந்தியா-சிறந்த இந்தியா' என்ற உங்கள் உறுதிமொழியில் உறுதியாக இருங்கள்."

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இப்போது மெளனம் சாதிப்பது ஏன்?

ஆனால், இப்போது ஏன் இந்த மெளனம்? - அரசியல் ஆய்வாளர்கள் இந்த கேள்வியில் எந்த குழப்பத்தையும் அடையவில்லை.

நன்கு சிந்தித்து திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே பிரதமரும் உள்துறை அமைச்சரும் மெளனம் காத்து வருவதாக அவர்கள் உணர்கிறார்கள்.

அதற்கு முதல் காரணம், செப்டம்பர் 30 அன்று வெளியான தீர்ப்பை இறுதித்தீர்ப்பு என்று அழைக்க முடியாது, ஏனெனில் மேல்முறையீடு செய்ய இடம் உள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு அயோத்தி வழக்கில் இருந்து வேறுபட்டது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

"அயோத்தி பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தே அரசியல் ரீதியிலானது. அங்கு கோவில் கட்டுவதால் அரசியல்சாசன பிரச்சனை ஏதும் இல்லை. அதுபற்றி வெளிப்படையாக பேசப்பட்டு அதற்கான பொறுப்பும் ஏற்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு ஒரு குற்றவியல் நடவடிக்கை தொடர்பானது" என்று மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் கூறுகிறார்.

பாபர் மசூதி வழக்கு ஒரு குற்றவியல் வழக்கு, அயோத்தி சர்ச்சை ஒரு சிவில் வழக்கு. அங்கு நிலத்தின் உரிமை யாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதே முடிவு செய்யப்படவேண்டியிருந்தது என்று மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங் குறிப்பிட்டார்.

Presentational grey line --
Presentational grey line --

"பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு கட்டிடத்தை இடித்தது பற்றியது, இது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றமும் கூறியது . எனவே சட்டவிரோத நடவடிக்கைகளை பிரதமர் பகிரங்கமாக எவ்வாறு ஆதரிக்க முடியும்?"என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு, உண்மையான பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாக பலர் நினைக்கக்கூடும் என்றும் ஆய்வாளருடன் கருதுகின்றனர்.

"கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது மற்றும் பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேலும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பிரச்சனையை மேலும் புதுப்பிக்க அவர்கள் விரும்பவில்லை"என்று பிரதீப் சிங் கூறுகிறார்.

அத்வானி குறித்தும் மெளனம்

அத்வானி குறித்தும் மெளனம்

பட மூலாதாரம், Getty Images

பாபர் மசூதி இடிப்பு வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இருண்ட நிழல் போல மூடப்பட்டிருந்தது. அதில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சங்க பரிவார அமைப்பின் பல மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களில் மிகவும் முக்கியமானவர் எல்.கே.அத்வானி.

சமீபத்திய விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் அத்வானி மற்றும் வேறு 31 குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் பல மூத்த தலைவர்களுக்கு கிடைத்த நிம்மதி குறித்து, உற்சாகமான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.

மோதி அரசின் மூத்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அத்வானியின் வீட்டிற்குச் சென்றார். கட்சியின் மூத்த தலைவரும் இந்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் இந்த தீர்ப்பை வரவேற்று, தாமதமானாலும் நீதி வென்றது, என்று கூறினார்.

ஆனால் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் பின்னணியில் உள்ள காரணங்களும் தெளிவாக உள்ளன, இது சிந்தித்து செய்யப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"தங்கள் உண்மையான வாக்காளர்களிடையே இது குறித்து எந்தவிதமான சங்கடமும் இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள். ராமர் கோயில் குறித்த கற்பனை இப்போது நனவாகிவிட்டது. இந்த அரசியல் பணி முழுமையடைந்து விட்டது என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே இப்போது அவர்களின் ஆதரவாளர்கள் அத்வானி பற்றி எதுவும் கேட்கமாட்டார்கள். சபாநாயகர் முதல் குடியரசு தலைவர் பதவிகளை அத்வானிக்கு வழங்கக்கூடிய நிலை இருந்தபோதிலும், அவருக்கு எதுவுமே தரப்படாதது பற்றி பாஜகவுக்குள் எந்த ஒரு எதிர் குரலும் ஒலிக்கவில்லை. அப்படி இருக்கும்போது இப்போது இதற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை," என்று ரஷீத் கித்வாய் குறிப்பிட்டார்.

மோதி மற்றும் அத்வானி

பட மூலாதாரம், Getty Images

"ஜின்னா குறித்த அறிக்கைக்குப் பிறகுதான் அத்வானியின் நிலை பலவீனமடைந்தது. 2009 ஆம் ஆண்டில் அவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என கட்சியில் ஒரு பிரிவினரால் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் அதன் பின்னர் அவர் ஆண்டுதோறும் ஓரங்கட்டப்பட்டார். தற்போதைய அரசியலில், அவருக்கு முக்கியத்துவமே இல்லை," என்று பிரதீப் சிங் கூறுகிறார்.

ராகுல் காந்தியின் மெளனம்

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர், இதுவரை எதுவும் பேசாமல் மெளனம் காப்பது பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மட்டுமில்லை.

காங்கிரஸின் முன்னாள் தலைவரும், அதன் மிகவும் செல்வாக்குமிக்க தலைவருமான ராகுல் காந்தியும் அமைதியாக இருந்தார். இருப்பினும், அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சி நிச்சயமாக நீதிமன்ற முடிவை விமர்சித்தது.

"அரசியலமைப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தை நம்புகிற அனைவரும், பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தின் இந்த நியாயமற்ற தீர்ப்பை எதிர்த்து மாநில மற்றும் மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பாரபட்சமற்ற விதத்தில், அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு உகந்த வகையில் அவை செயல்படும் என்று நம்புகிறோம்," என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூர்ஜிவாலா குறிப்பிட்டார்.

ஆனால் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி ராகுல் காந்தி மெளனமாக இருந்தார், அயோத்தி தீர்ப்பிற்கு பிறகு அவர் இவ்வாறு எழுதினார், "அயோத்தி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை மதிக்கும்போது நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும்." இது நம் அனைவருக்கும் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பின் காலமாக இருக்கும்."

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சி இதை ஆதரித்தால், எவ்வளவு ஆதரிக்க வேண்டும்? எதிர்ப்பு தெரிவித்தால், எந்த அளவிற்கு. போகவேண்டும்? என்பதே அக்கட்சியின் பிரச்சனை என்று மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங் கூறுகிறார்.

"காங்கிரஸ் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கமுடியாமல் இருபக்கமும் சாய்வதால், நீண்ட மற்றும் பெரிய அரசியல் இழப்பை அது சந்தித்து வருகிறது. எனவே இது தவறு என்று அவர்கள் சொன்னால், நீதிமன்றத்திற்கு எதிராக பேசுவதாக ஆகிவிடும். அதே நேரம் இது சரி என்று சொன்னால், சங் அமைப்புகள் மற்றும் பாஜகவுடன் நிற்பதாக பார்க்கப்படும்," என்று அவர் தெரிவிக்கிறார்.

அவரது மெளனம் நன்கு சிந்தித்து எடுக்கப்பட்டது. ஏனெனில் இது பகுதி-2 என்பது அவருக்கும் தெரியும். ராமர் கோவிலின் தீர்ப்பு வந்தபோது பகுதி-1 ஏற்கனவே முடிந்துவிட்டது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் அதை வரவேற்றனர் என்று மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் தெரிவிக்கிறார்.

"உண்மையில் ராகுல் காந்தி ஏதாவது சொன்னால், பின்னர் பிரச்சனைகளின் பெட்டி திறந்துவிடும். நரசிம்மராவ் என்ன செய்தார்? 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) என்ன செய்தது? போன்ற கேள்விகள் எழலாம். பின்னர் அந்த விஷயங்கள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகவே வந்துவிடலாம். ராகுல் காந்தி பேசவில்லை என்று ஒரு சிறிய கண்டனம் மட்டுமே இப்போது இருக்கும். ஆனால் நூறில் எண்பது சதவிகிதத்தை விட, நூறில் பத்து சதவிகிதம் சேதம் இருந்தால் பரவாயில்லை என்று அவர் நினைக்கக்கூடும்," என்று ரஷீத் கித்வாய் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: