அமித் ஷாவுக்கு ஸ்டாலின், குமாரசுவாமி பதிலடி: "ஹிந்தியை காக்காமல் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும்"

பட மூலாதாரம், M.K.STALIN FB
ஹிந்தி மொழியால் நாடு ஒன்றிணைகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொளி வாயிலாக வலியுறுத்திய கருத்துக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
ஹிந்தி மொழிகள் தினத்தையொட்டி அமித் ஷா வெளியிட்ட பதிவு செய்த காணொளியில், அந்த மொழியின் அவசியம், அது எவ்வாறு அரசுத்துறைகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும், பிற மாநிலத்தவர்கள், தாய்மொழியுடன் சேர்த்து கூடுதல் மொழியாக ஹிந்தியை ஏன் தேர்வு செய்ய வேண்டும் போன்ற அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமித் ஷாவின் கருத்துக்கு தமது டிவிட்டர் பக்கம் வாயிலாக ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
#StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குடன் ஸ்டாலின் பதிவிட்ட கருத்தில், "இந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது! இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்!" என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதே விவகாரத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி, தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக அமித் ஷாவின் கருத்துக்கு விரிவாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"பன்முகம் வாய்ந்த கலாசாரம், பாரம்பரியம் வாய்ந்த இந்தியாவில் கன்னடத்தவர்கள் உட்பட ஹிந்தி பேசாத பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது" என்று தொடங்கி 10 இடுகைகளை அவர் பதிவிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு எல்லா மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்தையே வழங்கியுள்ளது. ஹிந்தி மொழி ஒருபோதும் தேசிய மொழியாக இருந்ததில்லை. எனவே, டெல்லியில் இருப்பவர்கள் அதை வேறு மாதிரியாக புரிந்து கொள்ளக்கூடாது என்று குமாரசுவாமி கூறியுள்ளார்.
எனவே ஹிந்தி திவஸ் என்ற பெயரில் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்ச்சி, மென்மையாக ஹிந்தி மொழியை திணிப்பதே தவிர வேறு அல்ல. எனவே, முதலும் முடிவுமாக அதை நான் எதிர்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளும் அவற்றுக்கு என தனி வரலாறு, கலாசாரத்தைக் கொண்டுள்ளன. அது ஹிந்தி மொழியை திணிக்கும் சிலரது முயற்சிக்காக அந்த மாண்புகள் தியாகம் செய்து கொள்ளப்படாது என்று குமாரசுவாமி கூறியுள்ளார்.
இந்திய அரசு ஹிந்தி திவஸ் என்பதற்கு பதிலாக இந்திய மொழிகள் தினம் என்ற பெயரில் ஒரு தினத்தை கடைப்பிடிக்கலாம். அந்த நாளில் நாட்டில் உள்ள எல்லா மொழிகளும் அவற்றின் பெருமைகளை கொண்டாடினால், அதை நான் நிச்சயமாக ஆதரிப்பேன் என்று குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால் அதை வைத்துக் கொண்டு ஹிந்தி மொழியை, புதிய கல்விக்கொள்கையில் உள்ள மும்மொழிக்கொள்கை வாயிலாக கர்நாடகாவில் புகுத்தலாம் என்று பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. அந்த முயற்சி கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ளும்."
"கர்நாடகா மாநிலத்தவர்கள் மென்மையானவர்கள் என்றாலும், தங்கள் மீது யாராவது எதையாவது திணிக்க முற்பட்டால் அவர்கள் முழு பலத்துடன் அந்த முயற்சியை எதிர்கொள்வார்கள். இதை பாரதிய ஜனதா கட்சி மறந்து விட வேண்டாம்" என்று குமாரசுவாமி கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- "ஒரு பாலின திருமணத்துக்கு இதுவரை சட்ட அங்கீகாரம் இல்லை": நீதிமன்றத்தில் இந்திய அரசின் வாதம் - முழு விவரம்
- கொரோனா வைரஸ்: 17 எம்.பிக்களுக்கு தொற்று உறுதி; முதல் நாளிலேயே விஸ்வரூபம் எடுத்த நீட் விவகாரம்
- அமித் ஷா பார்வையில் எது பெரிய மொழி? தாய்மொழியா ஹிந்தியா? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய குறிப்புகள்
- இந்தியா - சீனா இடையில் தற்காலிக அமைதி உருவானது எப்படி?
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: கேள்வி நேரம் என்றால் என்ன?
- ஜப்பான் மக்களின் வெற்றியின் ரகசியம்: 'இக்கிகை' தத்துவம்
- எந்த சமையல் எண்ணெய் ஆரோக்கியமானது? எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?
- சீனா விஷயத்தில் நேரு செய்த அதே தவறை பிரதமர் மோதியும் செய்கிறாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: