அமித் ஷா பார்வையில் எது பெரிய மொழி? தாய்மொழியா ஹிந்தியா? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய குறிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
தாய்மொழியுடன் சேர்த்து ஹிந்தி மொழியை பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
1949ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு, இந்தி திவஸ் (ஹிந்தி மொழி தினம்) ஆக கடைப்பிடித்து வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான ஹிந்தி தினத்தையொட்டி, பதிவு செய்த காணொளியை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் வலியுறுத்தும் 8 முக்கிய குறிப்புகளை உங்களுக்கு வழங்குகிறோம்.
1) பல கலாசாரங்கள் மற்றும் மொழிகளால் நிரம்பியுள்ள இந்தியாவில், கிழக்கில் இருந்து மேற்கு, தெற்கில் இருந்து வடக்கு என்று எல்லா பகுதிகளுக்கும் இடையே, தொடர்பை ஏற்படுத்தும் வேலையை மொழிகள் பல நூறாண்டுகளாக செய்து வருகின்றன. "ஹிந்தி" இவற்றில் முக்கிய மொழியாக உள்ளது.
2) ஹிந்தி மொழியின் சிறப்பு என்னவென்றால், அது எவ்வாறு பேசப்படுகிறதோ, அப்படியேதான் எழுதப்படுகிறது. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மைய நாடி, முக்கியமாக ஹிந்தி மொழியால் தான் பாதுகாப்பாக உள்ளது. ஹிந்தி மொழி,பிற பிராந்திய மொழிகளுக்கு வலு சேர்க்க முயற்சி செய்கிறது.
3) ஹிந்தி மொழிக்கு, மற்ற மொழிகளுடன் எப்போதுமே போட்டி இருந்ததில்லை. இந்தியர்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். மோதி அரசின் புதிய கல்விக்கொள்கைப்படி, ஹிந்தி மொழியுடன் சேர்த்து பிற இந்திய மொழிகள் மேம்படுத்தப்படும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
4) நாட்டின் அரசியல் சாசன பொறுப்பை நிறைவேற்ற, அரசு பணிகள், ஆவணங்கள், விண்ணப்பங்கள் போன்றவை அடிப்படையில் ஹிந்தியில் செய்யப்படுவது அவசியம். மற்ற பிராந்திய மொழிகளில் அவை, மொழிபெயர்பு செய்யப்படும். அரசின் எல்லா அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள், வங்கிகளின் மூத்த அதிகாரிகள், உள்ளுர் மொழியோடு சேர்த்து, அரசு பணிகளை ஹிந்தியில் செய்ய வேண்டும். அலுவலகத்தின் பிற பணியாளர்களின் பணியில் ஹிந்தியை பயன்படுத்த அது ஊக்கம் தரும்.
5) சர்வதேச அரங்குகளில் பிரதமர் மோதி ஹிந்தியில் ஆற்றிய உரைகளால், இந்த மொழிக்கு சர்வதேச அங்கீகாரம் வலுவடைந்துள்ளது. ஹிந்தி மொழியை விரும்புவோருக்கு உத்வேகமும் கிடைத்துள்ளது. வரவிருக்கும் தலைமுறைக்கு வாய்ப்பு வளங்களை அதிகபட்சமாக ஹிந்தியில் கிடைக்கச் செய்யவேண்டும்.
6) நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அலுவல் மொழியான ஹிந்தியை, மற்ற மொழிகளுக்கு சமமாக வைத்தபடி, நாட்டை தற்சார்பு பெறும் பாதையில் இட்டுச்செல்வோம். உள்ளுர் மொழியை பேசும் ஒருவர் உடனிருக்கும்போது, வேறு மொழியை பேசாமல்,இந்திய மொழிகளை பேசுங்கள்.
7) வீட்டிலும் குழந்தைகளுடன், இந்திய மொழிகளில் பேசும் பாரம்பரியத்தை உருவாக்குங்கள். நம் மொழியின் பயணத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். மோதி அரசின் புதிய கல்விக்கொள்கையில், இந்தியாவின் மற்ற மொழிகளும், ஹிந்திக்கு ஒப்பாக வளர்ச்சி பெறும்.
8) நம் அனைவரின் முயற்சிகளுடன்,ஹிந்தி நமது நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில், அறிவியல் மற்றும் அறிவுசார்ந்த பரிபூரண மொழியாக விளங்கும்.
இந்தி மொழியால் தொடரும் சர்ச்சை
இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் ஹிந்தி மொழியால் அடிக்கடி சர்ச்சை தொடர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு திமுக எம்.பி கனிமொழி, விமான நிலையத்தில் தனக்கு ஹிந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் பேசுமாறு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் கேட்டபோது, ஹிந்தி தெரியாது என்றால் இந்தியனா என்றவாறு கேட்ட சம்பவம் சர்ச்சையாகியது.
சமீபத்தில் திரைப்பட பிரபலங்கள், ஹிந்தி தெரியாது போடா என்ற டீ-சர்ட்டை அணிந்தவாறு அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு மொழி உணர்வை வெளிப்படுத்திய விவகாரம் ஆதரவும் எதிர்ப்பும் நிறைந்த செயலாக பார்க்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஹிந்தி திவஸ் நிகழ்ச்சியையொட்டி, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு. ஆனால், ஒரே மொழி இருப்பது அவசியமானது. அந்த ஒரு மொழி பலராலும் பேசப்படுவதாக இருக்க வேண்டுமானால், அது ஹிந்தி மொழியாகவே இருக்கும் என்று கூறியிருந்தார்.
அந்த விவகாரம் தமிழ்நாட்டில் சர்ச்சையான நிலையில், தனது டிவிட்ட கருத்துக்கு விளக்கம் அளித்த அமித் ஷா, தாய்மொழிக்கு பிறகு வேறு மொழியை படிக்க விரும்பினால் ஹிந்தியை தேர்வு செய்யுங்கள். நானே வேறு மாநிலத்தில் இருந்து வந்தவன். அந்த வகையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தாய்மொழி கல்விதான் சிறந்தது என்று கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












