கொரோனா வைரஸ்: 17 எம்.பிக்களுக்கு தொற்று உறுதி; முதல் நாளிலேயே விஸ்வரூபம் எடுத்த நீட் விவகாரம்

பட மூலாதாரம், Getty images
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கொரோனா "நெகடிவ்" அறிக்கையை காட்டவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், செய்தி சேகரிக்க அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியாது என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
எந்தெந்த எம்.பி.க்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருந்தது என்பதை மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
எனினும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி மீனாக்ஷி லேகி, கொரோனா வைரஸ் தொற்று தனக்கு ஏற்பட்டது பரிசோதனையில் தெரிய வந்ததால், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தமது டிவிட்டர் பக்கம் வாயிலாக கேட்டுக் கொண்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
கொரோனா நிலவரம்: ஹர்ஷ்வர்தன் விளக்கம்
இந்த நிலையில், இன்று கூட்டத்தொடரின் முதல் நாளில் கொரோனா தொற்றை இந்தியா கையாண்ட விதம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.
"கொரோனா தொற்றை பொருத்த வரை இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 3,328 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதேபோல 55 பேர் உயிரிழந்துள்ளனர்.இது பிற நாடுகளைக் காட்டிலும் மிக குறைந்த எண்ணிக்கையாகும்" என ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார், டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, ஒடிஷா, அசாம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா தொற்றால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்து பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு
திமுக எம்.பி டிஆர்.பாலு, நீட் தேர்வு குறித்தும் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் குறித்தும் அவையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.
“அவர்கள் அனைவரும் கிராமப் புற மாணவர்கள். மாநில பாடத்திட்டம் மூலம் படித்து பிளஸ் 2 தேர்ச்சி பெறுகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு முழுக்க மத்திய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. ப்ளஸ் 2 முடித்து ஒரே மாதத்தில் அவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். அது அவர்களுக்கு கடினமாக உள்ளது. இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்” என அவர் பேசினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
கேள்வி நேரம் குறித்த கேள்வி
கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் செளத்ரி கேள்வி எழுப்பினார், கேள்வி நேரம்தான் பொன்னான நேரம் ஆனால் அது நடைபெறாது என சொல்கிறீர்கள். நீங்கள் ஜனநாயகத்தை நசுக்குகிறீர்கள்,” என அவர் தெரிவித்தார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

பின் அதுகுறித்து பேசிய பாஜக எம்.பி. பிரஹல் ஜோஷி, இது ஒரு அசாதாரண சூழல், சட்டசபைகள் ஒரு நாள் கூட கூடும் சூழல் இல்லாத நிலையில், நாம் இங்கு 800-850 எம்.பிக்களை கூட்டியுள்ளோம். அரசை கேட்க பல வழிகள் உள்ளன. அரசு எங்கும் ஓடிவிடப்போவதில்லை. விவாதிக்க தயாராகவே உள்ளது என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், DMK
முன்னதாக நீட் தேர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுன்ற வளாகத்தில் முகப்பு வாயிலுக்கு முன்பாக உள்ள காந்தி சிலை பகுதியில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தியாவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் மதிப்பீடு தாக்க அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள், பிறகு அவைக்குள்ளும் நீட் விவகாரம் தொடர்பாக எழுப்பினார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: