கங்கனா ரனாவத்துக்கு மத்திய படை பாதுகாப்பா? கொந்தளிக்கும் மகாராஷ்டிரா அமைச்சர்

கங்கனா

பட மூலாதாரம், Getty Images

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதற்கு தமது அதிருப்தியை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பதிவில், மகாராஷ்டிராவையோ மும்பையையோ அவமதிக்கும் ஒருவருக்கு ஒய் பிரிவு மத்திய படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதை கேட்கும்போது ஆச்சரியமும் வலியும் ஏற்படுகிறது. மகாராஷ்டிரா என்பது தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அல்லது சிவசேனை கட்சிக்கு மட்டுமல்ல. அது பாஜகவுக்கும் பொதுமக்களுக்குமானது. மகாராஷ்டிராவை அவமதிக்கும் எவரையும் அனைத்துக் கட்சியினரும் கண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இதற்கிடையே, தற்போது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இருக்கும் கங்கனா ரனாவத்துக்கு "ஒய்" பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இது தொடர்பாக இந்திய உளவுத்துறை வழங்கும் மதிப்பீடு அடிப்படையில் எவ்வளவு பேர், எத்தகைய சூழலில் கங்கனா ரனாவத்துக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்பது தீர்மானிக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

தொழில்முறை பயணமாக கங்கனா ரனாவத் அடிக்கடி மும்பைக்கு செல்ல வேண்டியிருப்பதால் அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பு வழங்கப்படலாம் என்று உள்துறை அமைச்சக உயரதிகாரி கூறினார்.

இதற்கிடையே, மத்திய பாதுகாப்பு தொடர்பான தகவல் இன்னும் கங்கனா ரனாவத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்படாத நிலையில், தேசிய நாளிதழ் செய்தியாளர் ஒருவர் வெளியிட்ட டிவிட்டர் தகவலை தமது இடுகையில் இணைத்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி தெரிவித்துள்ளார்.

"எனது தேசப்பற்று குரலை எந்தவொரு பாசிஸ சக்தியாலும் ஒடுக்க முடியாது என்பதற்கு இதுவே உதாரணம். அமித்ஷாவுக்கு எனது நன்றி. அவர் வேண்டுமென்றால் சில நாட்கள் கழித்து நான் மும்பைக்கு செல்ல அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால், இந்த நாட்டின் குடிமகளின் வார்த்தைகளுக்கு அவர் மதிப்பளித்துள்ளார்" என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

முன்னதாக, கங்கனா ரனாவத்துக்கு வெளிப்படையாகவே சிவசேனை தலைவர்கள் மிரட்டல் விடுத்ததால் அவர் வரும் 9ஆம் தேதி மும்பை செல்லும்போது அவருக்கு பாதுகாப்பு வழங்க ஹிமாச்சல பிரதேச அரசு பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், அவருக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்தி படை

பட மூலாதாரம், Getty Images

இசட் பிளஸ், இசட் பிரிவு, ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் பாதுகாப்பு நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இசட் பிளஸ் பிரிவு, இசட் பிரிவு, ஒய் பிரிவு, எக்ஸ் பிரிவு.

இது தவிர, பிரதமர் பதவி வகிப்போருக்கும் முன்னாள் பிரதமர்களுக்கும் சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்பிஜி) பாதுகாப்பு வழங்கும். 1988இல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, இந்த சிறப்புப் பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டது. இந்த படைக்காக ஆண்டுதோறும் ரூ. 300 கோடிவரை பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகவும் தொழில்சார்ந்த முறையில் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பயிற்சி பெற்ற வீரர்கள் வரிசையில், எஸ்பிஜி பாதுகாவலர்கள் முன்னோடியாக உள்ளனர்.

எஸ்பிஜி

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலும் இசட் பிளஸ் பிரிவு மற்றும் இசட் பிரிவு பாதுகாப்பு, உயிருக்கு நேரடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

இசட் பிரிவு பாதுகாப்புப் பணியை மத்திய படைகளான தேசிய பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப்படை, இந்தோ திபெத்திய காவல் படை ஆகியவை வழங்கும். இதில் குறைந்தபட்சம் 36 வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். சில இடங்களில் மாநில அரசுகளே அவற்றின் ஆயுதப்படையினர் அல்லது கமாண்டோ படை வீரர்கள் மூலம் மத்திய அரசு வழங்கும் இசட் பிளஸ் அல்லது இசட் பிரிவுக்கு நிகரான பாதுகாப்பை மிக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும். தமிழ்நாட்டில் முதல்வர் பழனிச்சாமிக்கு இப்படிப்பட்ட பாதுகாப்புதான் வழங்கப்படுகிறது.

ஒய் பிரிவு பாதுகாப்பு பெறுவோருக்கு அதிகபட்சமாக 11 பேர் கொண்ட அணி பாதுகாப்பு வழங்கும். இதில் இரண்டு தனி பாதுகாவலர்கள் அடங்கும். குறிப்பிட்ட நபருக்கு இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தில் அச்சுறுத்தல் நிலவினால் அங்கு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

எக்ஸ் பிரிவு பாதுகாப்பு, மாநில அமைச்சர்கள், உயர் பொறுப்புகளில் பாதுகாப்பு அவசியம் தேவைப்படும் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திரைப்பட நடிகர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும்.

மத்திய படை வழங்கும் பாதுகாப்புக்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான பாதுகாப்பு ஆய்வுக்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து யாருக்கெல்லாம் மத்திய பாதுகாப்பு வழங்கலாம், யாருக்கு பாதுகாப்பை விலக்கலாம் என்பதை தீர்மானிக்கும். இந்திய உளவுத்துறை அளிக்கும் அறிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும்.

மாநில அளவிலான பாதுகாப்பு, மாநில உள்துறைச் செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர் தலைமையிலான குழு மூலம் தீர்மானிக்கப்படும்.

பொதுவாகவே திரை நட்சத்திரங்கள், தங்களுக்கான தனிப்பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்களை வைத்திருப்பார்கள். ஆனால், ஷூட்டிங் செல்லும்போது ரசிகர்கள் நெருங்காமல் தடுப்பது, பொது நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசலில் சிக்காமல் தவிர்ப்பது போன்ற பணிகளை மட்டுமே அவர்கள் மேற்கொள்வார்கள்.

ஆனால், தற்போதைய விவகாரம் அரசியல் கட்சி தொடர்புடையது என்பதால், தனியார் பாதுகாவலர்களின் பணி வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். அசம்பாவிதம் நேரும் சூழலில் அவர்களால் எதிர் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாகவே, கங்கனா தரப்பில் ஹிமாசல பிரதேச மாநில அரசிடம் பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

என்ன பிரச்னை?

33 வயதாகும் கங்கனா ரனாவத், சமீப காலமாக பல்வேறு பொது விவகாரங்கள் தொடர்பான கருத்துகளை வெளிப்படையாக தமது சமூக ஊடக தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் மீதான மும்பை காவல்துறையின் விசாரணை தொடர்பாக அவர் பதிவிட்ட கருத்துகள், சமூக ஊடகங்களில் வைரலாகின.

பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தெடார்பாக சில தினங்களுக்கு முன்பு நடிகை கங்கனா ரனாவத் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டார்.

அதில் அவர் "சஞ்சய் ரெளட் என்னை வெளிப்படையாக மும்பைக்கு வரக்கூடாது என்று மிரட்டியுள்ளார், மும்பையில் தெருக்களில் காணப்படும் விடுதலை தொடர்பான சுவரோவியங்கள் மற்றும் இப்போது உள்ள அச்சுறுத்தல் ஆகியவற்றால் மும்பை ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உணரப்படுகின்றது?" என்று குறிப்பிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

அவரது கருத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் சிவசேனை கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ரெளட், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோர் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து கண்டிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டனர்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், "மகாராஷ்டிரா மற்றும் மும்பை காவல்துறை மீதான கங்கனாவின் குற்றச்சாட்டுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மாநிலம் முழுவதும் பணியாற்றவும் சட்டம் ஒழுங்கை பின்பற்றி நடப்பதிலும் எங்கள் காவலர்கள் துணிச்சல் மிக்கவர்கள். மும்பையில் இருப்பது பாதுகாப்பற்றது என கங்கனா கருதினால், அவர் இங்கு தங்கியிருக்க உரிமை கிடையாது" என்று கூறியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

சிவசேனை கட்சி எம்எல்ஏ பிரதாப் சாரனிக், தேசவிரோத சட்டத்தின்கீழ் கங்கனா ரனாவத்தை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மும்பைக்கு வந்தால், துணிச்சலான மராட்டிய பெண்கள், அவரது கன்னத்தில் அறை விடாமல் விடக்கூடாது என்று கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: