கங்கனா, அனுராக் காஷ்யப், டாப்ஸி: தேச விரோதிகள், அர்பன் நக்சல்ஸ் - ட்விட்டரில் மோதிக்கொள்ளும் பாலிவுட் நட்சத்திரங்கள்

பட மூலாதாரம், Getty Images
பாலிவுட் நட்சத்திரங்கள் ட்விட்டரில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் எனக்கு இந்த புதிய கங்கனாவை தெரியாதென்று கூறி உள்ளார்.
தமிழில் ஜீவா இயக்கத்தில் `தாம் தூம்` திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கங்கனா. இவர் கடந்த சில தினங்களாக திரைத்துறையில் நெப்போட்டிசம் இருப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் நெபோடிசம் குறித்து கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்து வந்தார்.
குறிப்பாக டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர், மற்றும் அனுராக் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
கங்கனா இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் ஆதரவாளராக அறியப்படுகிறார். பல சந்தர்ப்பங்களில் மோதியை இவர் பாராட்டி இருக்கிறார்
என்ன நடக்கிறது அங்கே?
டீம் கங்கனா எனும் ட்விட்டர் கணக்கு தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களைக் குற்றஞ்சாட்டி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதனை அடுத்து அனுராக் இந்தியில் பகிர்ந்து ட்வீட்டுகளில், "கங்கனா எனக்கு ஒரு சமயத்தில் நல்ல நண்பராக இருந்தார். என்னுடைய படங்களுக்கு வருவார். எனக்கு இந்த புதிய கங்கனாவை தெரியாது. அவர் மனிகர்ணிகா படங்களுக்கு பிறகுதான் இவ்வாறான பேட்டிகளை கொடுக்க தொடங்கிவிட்டார்," என ட்வீட் செய்துள்ளார்.
கங்கனா நேற்று ஓர் ஊடகத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அதை குறிப்பிட்டே அனுராக் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மேலும் அனுராக், "வெற்றியின் போதை, அந்த வெற்றியின் மமதை அனைவரையும் மயக்கும். 'என்னை போல இருங்கள். என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்,' என்கிறார். இது போன்ற வார்த்தைகளை 2015ஆம் ஆண்டுக்கு முன்பு நான் அவரிடமிருந்து கேட்டதில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சமயத்தில் கங்கனாவை கண்டு பிரமித்தவர்கள் கூட, இப்போது அவரிடமிருந்து விலக தொடங்கிவிட்டனர் என ட்வீட் செய்துள்ளார்.
'பி கிரேட் நடிகைகள்'
அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், டாப்ஸி மற்றும் ஸ்வரா பாஸ்கரை 'பி கிரேட் நடிகைகள்' என்றும், வெளியாட்கள் என்றும் கங்கனா குறிப்பிட்டு இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அதில், "நீங்கள் அலியா பட் மற்றும் அனன்யாவைவிட சிறப்பான தோற்றத்தில் இருக்கிறீர்கள். பின் ஏன் உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. உங்கள் இருப்பே இங்கு நெபோடிசம் இருப்பதற்கான சான்று," என குறிப்பிட்டுள்ளார்.
டாப்ஸி கங்கனா பேரை குறிப்பிடாமல் ட்வீட் பகிர்ந்துள்ளார். "மன கசப்போடு இருக்காதீர்கள்; சிறப்பாக இருங்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் அவர், "பள்ளிக்குக்கு பிறகு இங்குமா கிரேட் முறையை பயன்படுத்துகிறோம்," என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வரா பாஸ்கர் பகிர்ந்துள்ள ட்வீட்டில் நக்கல் தொனியில் கங்கனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மினி மகேஷ் பட்
அனுராக் காஷ்யப் ட்வீட்டை ரிட்வீட் செய்த கங்கனா, அனுராகை மினி மகேஷ் பட் என வர்ணித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
அதில், "நான் போலி மனிதர்களால் சூழப்பட்டுள்ளதாகவும், அவர்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் மினி மகேஷ் பட் கூறுகிறார். தீவிரவாதிகளைக் காக்கும் அர்பன் நக்சல்ஸ், தேச விரோதிகள் இப்போது சினிமா மாஃபியாகளை காக்கிறார்கள்," என குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :