நடிகை கங்கனாவின் சர்ச்சை கருத்து: "மும்பையில் வாழ உரிமை கிடையாது" - மிரட்டும் தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images
திரைப்பட நடிகையான கங்கனா ரனாவத் எழுதிய ட்வீட் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்கனா தனது டிவிட்டர் பக்கத்தில் மும்பையை, பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார்.
அவர் டிவிட்டரில் "சஞ்சய் ரெளட் என்னை வெளிப்படையாக மும்பைக்கு வரக்கூடாது என்று மிரட்டியுள்ளார், மும்பையில் தெருக்களில் காணப்படும் விடுதலை தொடர்பான சுவரோவியங்கள் மற்றும் இப்போது உள்ள அச்சுறுத்தல் ஆகியவற்றால் மும்பை ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உணரப்படுகின்றது?" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்த ட்வீட்டை கங்கனா டீம் ட்விட்டர் பக்க்தில் பதிவு செய்து, ஒரு தனியார் செய்தித்தாளின் செய்தியும் அதனுடன் இணைக்கப்பட்டது.
கங்கனா பின்னர் மற்றொரு ட்வீட்டில், "ஒரு பெரிய நட்சத்திரம் கொல்லப்பட்ட பிறகு, போதைப்பொருள் மற்றும் திரைப்பட உலகில் உள்ள மாஃபியா குறித்து நான் குரல் எழுப்பினேன். சுஷாந்த் சிங் ராஜ்புத் தொடர்பான புகாரை அவர்கள் புறக்கணித்ததால் மும்பை காவல்துறையை நான் நம்பவில்லை. அவர் கொல்லப்பட்ட போதிலும், அந்த மக்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர் கொல்லப்பட்டார். நான் பாதுகாப்பற்றவளாக உணர்கிறேன், இதன் அர்த்தம் என்னவென்றால் நான் திரையுலகையோ அல்லது மும்பையையோ வெறுக்கிறேன் என்பதல்ல என்று எழுதியுள்ளார். "
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதற்கிடையே, கங்கனா ரனாவத்தின் கருத்துகளுக்கு தமது டிவிட்டர் பக்கம் வாயிலாக மகராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதில் அளித்துள்ளார்.
அதில், "மகராஷ்டிரா மற்றும் மும்பை காவல்துறை மீதான கங்கனாவின் குற்றச்சாட்டுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மாநிலம் முழுவதும் பணியாற்றவும் சட்டம் ஒழுங்கை பின்பற்றி நடப்பதிலும் எங்கள் காவலர்கள் துணிச்சல் மிக்கவர்கள். மும்பையில் இருப்பது பாதுகாப்பற்றது என கங்கனா கருதினால், அவர் இங்கு தங்கியிருக்க உரிமை கிடையாது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இதேவேளை, கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகள் மற்றும் ஆமிர் கானின் செயல்பாடுகள் சமூக ஊடகங்களில் ஒப்பிடப்பட்டு வருகின்றன.
சமூக ஊடகங்களில், அவரது மற்றும் திரைப்பட நடிகர் அமீர்கானின் பழைய கருத்துக்கள் ஒப்பிடப்படுகின்றன மேலும் பல பாலிவுட் நடிகர்கள் மும்பை குறித்து ட்வீட் செய்துள்ளனர்.
நடிகர் சோனு சூத் ட்வீட் செய்துள்ளார், "மும்பை .. இந்த நகரம் விதியை மாற்றுகிறது. நீங்கள் வணக்கம் செலுத்தினால், உங்களுக்கு வணக்கம் கிடைக்கும்."
நடிகை தியா மிர்சா இது குறித்து ட்வீட் செய்துள்ளார், "மும்பை என் உயிருக்கு இனிய நகரமாகும். நான் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன், வேலை செய்கிறேன். சொந்தமாக வாழ்வதற்காக 19 வயதில் இங்கு வந்தேன். இந்த நகரம் என்னை இரு கைகளையும் நீட்டி அரவணைத்து என்னைப் பாதுகாத்தது. இந்த பெருநகரம், பன்முகத்தன்மை நிறைந்த அழகான நகரம். " என்று ட்வீட் செய்துள்ளார்.
நடிகை ஸ்வாரா பாஸ்கர் மும்பை மற்றும் மும்பை காவல்துறைக்கு ஆதரவாக பல ட்வீட் செய்துள்ளார். மற்றவர்களின் ட்வீட்களையும் மறு ட்வீட் செய்துள்ளார்.
மும்பையை தனது வாழ்க்கை என்று வருணித்து ஸ்வாரா எழுதியுள்ளார், "கடந்த பத்தாண்டுகளாக மும்பையில் சுயமாக பணியாற்றி வரும் ஒரு வெளியூர் பெண் என்ற முறையில், மும்பை வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் எளிதான மற்றும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்று நான் கூற விரும்புகிறேன். "மும்பையை பாதுகாப்பதற்கான உங்கள் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் சேவைக்கு மும்பை காவல்துறைக்கு நன்றி." என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4

X பதிவின் முடிவு, 5
ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா தனது வீட்டை 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன்' ஒப்பிட்டுப் பார்க்கும் உணர்வு எவ்வாறு வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்? எனது பல நிகழ்ச்சிகள் சூரத்தில் ரத்து செய்யப்பட்டன, பரோடாவிலும் ரத்து செய்யப்பட்டது. இந்த நகரங்களை நான் ஒருபோதும் இஸ்லாமாபாத்துடன் ஒப்பிடவில்லை அல்லது அவற்றை தோக்லா மாஃபியா என்று அழைக்கவில்லை. நீங்கள் அதிகாரத்துடன் உடன்படாமல் போகலாம், ஆனால் இது அபத்தமானது என்று கூறியுள்ளார்.
சஞ்சய் ரெளட் யார் என்று அபிலாஷா ஜாதவ் எழுதியுள்ளார். நீங்கள் மேலே செல்லுங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். சிலர் இதற்கு சிவசேனையின் போக்கிரித்தனம் என்று பெயரிட்டனர்.
மற்ற ட்விட்டர் பயனரான ஷெஃபாலி வைத்யா "இது என்ன அபத்தமான அறிக்கை என்று எழுதினார். எந்தவொரு குடிமகனுக்கும் நாட்டின் எந்த நகரத்திற்கும் வர வேண்டாம் என்று ஒரு தலைவர் எப்படி சொல்ல முடியும். என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முழு பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
உண்மையில் முழு சர்ச்சையும் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடையது.
பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும் போதை மருந்து மாஃபியாவிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர், தனக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைத்தால் பாலிவுட்டுக்கும் போதை மருந்து மாஃபியாவுக்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்த முடியும் என்று கங்கனா ட்விட்டரில் எழுதினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
உண்மையில், கங்கனா கடந்த சில நாட்களாக தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார்.
அவர் மாஃபியா மற்றும் குண்டர்களை விட மும்பை காவல்துறைக்கு அஞ்சுவதாக எழுதினார். மும்பையில் எனக்கு ஹிமாசல பிரதேச அரசாங்கத்திடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பாதுகாப்பு தேவை. மும்பை காவல்துறையின் பாதுகாப்பு தேவையில்லை.
இதே ட்வீட்டுக்கு பதிலளித்த சஞ்சய் ரெளட், மும்பை காவல்துறைக்கு மிகவும் பயப்படுகிறார் என்றால் அவர் மும்பைக்கு வரக்கூடாது என்று கூறியிருந்தார்.
திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் இருந்து நடிகை கங்கனா ரணாத் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகிறார்.
முன்னதாக, அந்த கங்கனா அணி என்ற பெயரில் ட்விட்டரில் இருந்தது, ஆனால் இப்போது அவரே ட்விட்டருக்கு வந்துள்ளார். பாலிவுட்டில் போதைப்பொருள் மோசடி குறித்து இன்னும் பல ட்வீட்டுகள் உள்ளன. சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு நீதி கோருபவர்களை விட அவர் அதிகமாக குரல் எழுப்பி வருகிறார்.
கங்கனாவும் ஆமிரும் ஏன் ஒப்பிடப்படுகிறார்கள்?

பட மூலாதாரம், Hindustan Times
உண்மையில், 2015 ஆம் ஆண்டில் ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழாவில் பங்கேற்றபோது, அவரும் அவரது மனைவியும் இந்தியாவில் முழு வாழ்நாளையும் செலவிட்டுள்ளதாக அமீர்கான் கூறினார். ஆனால் கடந்த சில மாதங்களாக நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது. அவரது மனைவி கிரண் முதல் முறையாக நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி பேசினார். இது மிகப் பெரிய மற்றும் ஆபத்தான விஷயம் என்றார்.
விருதுகளை திரும்ப கொடுப்பது குறித்த பேச்சு நாட்டில் நடந்து கொண்டிருந்த காலம் இது. அவரின் இந்த நேர்காணலுக்காக அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் சில காலமாக தொடர்ந்து சிலரிடம் சண்டையிட்டு வருகிறார். ஜனவரி மாதத்தில், தீபிகா படுகோனே ஜே.என்.யுவுக்கு செல்வது குறித்து தனது கருத்தை தெரிவித்தார், பின்னர் சைஃப் அலிகானின் கூற்றுக்கு பதிலடி கொடுத்தார். இது மட்டுமல்லாமல், நிர்பயா வழக்கின் விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் கூற்றுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையாக பதிலளித்தது.
ஒரு மாதத்திற்கு முன்பு, அவர் ட்விட்டரில் டாப்ஸி பன்னு மற்றும் ஸ்வாரா பாஸ்கருடன் மோதினார்.
பிற செய்திகள்:
- காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் விபத்து - 7 பேர் பலி
- இலங்கை கப்பல் தீயை அணைக்க தீவிர முயற்சி: எரிபொருள் கசிவு ஏற்பட்டால் பேராபத்து
- சீனா-பாகிஸ்தான் இணைந்து இந்திய எல்லையில் நடவடிக்கை எடுக்கும் ஆபத்து: பிபின் ராவத் கருத்து
- சுஷாந்த் சிங் வழக்கு: போதைப் பொருள் தடுப்பு பிரிவு ரியா வீட்டில் சோதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: