New Education Policy 2020: புதிய கல்விக் கொள்கை - 20 முக்கிய அம்சங்கள்

புதிய கல்விக் கொள்கை 2020: - சில முக்கிய அம்சங்கள் New Education Policy 2020 important points

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை நேற்று வெளியிடப்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்தை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருவது என பல விஷயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய கல்விக் கொள்கை 2020: - சில முக்கிய அம்சங்கள் New Education Policy 2020 important points

பட மூலாதாரம், Getty Images

அந்தக் கொள்கையில் இடம் பெற்றுள்ள 20 முக்கிய அம்சங்கள்

  • மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல்.
  • தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்துதல்.
  • எந்தக் குழந்தையும் பிறந்த சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ, கற்பதுடன் சிறந்து விளங்கும், எந்த வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்தல்.
  • இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100 சதவீதம் உறுதி செய்தல்.
  • பள்ளி கல்வியிலிருந்து வெளியே வரும் போது ஒவ்வொரு மாணவரும் கூடுதலகாக ஒரு திறனை வளர்த்து கொள்வதை உறுதி செய்தல்.
  • கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி 2030-க்குள் நான்கு வருட பி எட் பட்டமாக இருக்கும். தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 3,5,8-ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் , உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடரும்.
  • ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழிக் கல்வி.
  • திறந்தநிலை பள்ளிகளை உருவாக்குதல்.
  • மாணவர்களுகான பள்ளி ரிப்போர்ட் கார்டுகளில் வெறும் மதிப்பெண்களை மட்டும் குறிப்பிடாமல், விரிவாக அவர்களது முழு திறனையும் குறிப்பிடுதல்.
  • உயர் கல்விக்கான சேர்கை விகிதம் 50 சதவீதமாக உயர்வதை உறுதி செய்தல்.
  • எம்.பில் படிப்புகள் இனி இருக்காது.
  • இளநிலை பட்டக் கல்வி , பன்நோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். ஓராண்டு கல்வியுடன் வெளியேறினால் சான்றிதழ் மட்டுமே கிடைக்கும், இரண்டாண்டு கல்வியுடன் வெளியேறினால் டிப்ளமோ மட்டுமே கிடைக்கும்.
  • இந்திய மொழிகளை, கலைகளை, கலாசாரத்தை ஊக்குவிக்க பாடத்திடங்களை ஏற்படுத்துதல்.
  • மொழி பெயர்ப்புக்கான கல்வி நிலையங்களை உருவாக்குதல்.
  • சமஸ்கிருதம் மற்றும் இதர செம்மொழிகளுக்கான கல்வி நிலையங்கள் மற்றும் துறைகளை வலிமைப்படுத்துதல்.
  • பாலி, பாரசீகம், பிராகிரதம் ஆகியவற்றுக்கான தேசிய கல்வி நிலையங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உருவாக்கப்படும்.
  • கல்வித் துறையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
  • பட்டியில் இன, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • மேல்நிலை பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, தேசிய கல்வி முகமை (NTA) மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

ந்தக் கல்விக் கொள்கை குறித்த ஒரு கலந்தாய்வு: புதிய கல்விக் கொள்கை: ஆதரவும், எதிர்ப்பும் ஏன்? - ஓர் எளிய விளக்கம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :